செழுமையியற் சடங்கு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

உணவுப் பெருக்கம், அதிக பிள்ளைப்பேறு என்பவை கருதி நிகழ்த்தப்படும் சடங்கே செழுமையியற் சடங்கு எனப்படுகின்றது. இத்தகைய சடங்குகள் மூலம் இயற்கையின் சக்திகளை மகிழ்விப்பதன் மூலம் நல்ல அறுவடை, வேட்டைகளில் நல்ல பயன், போரில் வெற்றி மற்றும் பலவகையான பயன்களைப் பெறமுடியும் என முற்காலத்து மக்கள் நம்பினர். இதனால் அவர்கள், நடனம், நாடகம், வழிபாடு போன்ற செயல்கள் உள்ளிட்ட சடங்குகள் மூலம் மழை போன்ற இயற்கை அம்சங்களைக் கட்டுப்படுத்த முயன்றனர். பிறப்பு, இறப்பு, மீளத்தோன்றுதல் முதலியவைகளை உருவகப்படுத்தி, நாடகங்களாக நடிப்பதன் மூலம் செழுமையியற் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன.

ஒத்துணர்வு மந்திரங்கள் எனப்படக்கூடிய லிங்க வடிவங்களை ஆங்காங்கே வைத்தல், விலங்குகளின் இனப்பெருக்க உறுப்புக்களை நிலத்தில் பரவிவிடுதல், சடங்கு ரீதியாகப் பெண்களுடன் உறவு கொள்ளுதல் என்பனவும் செழுமையியற் சடங்குகளின் வகைகளாகக் கருதப்படக் கூடியன. விலங்குகளையோ அல்லது மனிதர்களையோ பலி கொடுப்பதன்மூலம், வயல்களும், காடுகளும் அதிக செழுமையுள்ளவையாக மாறும் எனப் பழங்காலத்துச் சமூகங்களில் நம்பிக்கை நிலவிற்று இதன் அடிப்படையில் உருவான சடங்குகள் பல தற்காலத்திலும் கூடச் சில சமுதாயங்களில் நிலவி வருவதைக் காணலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=செழுமையியற்_சடங்கு&oldid=2741129" இலிருந்து மீள்விக்கப்பட்டது