நவநகர் இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜாம்நகர் இராச்சியம்
1540–1948
கொடி of நவநகர்
கொடி
சின்னம் of நவநகர்
சின்னம்
குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் நவநகர் இராச்சியத்தின் அமைவிடம்]]
குஜராத் மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்தில் நவநகர் இராச்சியத்தின் அமைவிடம்]]
தலைநகரம்ஜாம்நகர்
ஆட்சி மொழி(கள்)குஜராத்தி
அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள்குஜராத்தி
சமயம்
இந்து சமயம்
சமணம்
அரசாங்கம்முடியாட்சி
வரலாறு 
• தொடக்கம்
1540
1948
பரப்பு
• மொத்தம்
9,820 km2 (3,790 sq mi)
பின்னையது
}
India
தற்போதைய பகுதிகள்ஜாம்நகர் மாவட்டம்,தேவபூமி துவாரகை மாவட்டம், குஜராத், இந்தியா

நவநகர் இராச்சியம் அல்லது ஜாம்நகர் இராச்சியம் , துணைப்படைத் திட்டத்தினை ஏற்றுக்கொண்டு, பிரித்தானிய இந்தியாவுக்கு கீழ் இருந்த சுதேச சமஸ்தானம் ஆகும். இது தற்கால குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் அமைந்த ஜாம்நகர் மாவட்டம் மற்றும் தேவபூமி துவாரகை மாவட்டம் ஆகியவைகளைக் கொண்டது. நவநகர் இராச்சியத்தின் தலைநகரம் ஜாம்நகர் ஆகும். கிபி 1540-ஆம் ஆண்டு முதல் ஜடேஜா இராஜபுத்திர குலத்தினர் இந்த இராச்சியத்தை ஆண்டனர். நவநகர் இராச்சியத்தின் பரப்பளவு 3791 சதுர கிலோ மீட்டர் ஆகும். 1901-இல் இதன் மக்கள் தொகை 3,36,779 ஆகும்.[1]இதன் கிளை துரோல் சமஸ்தானம் ஆகும்.

1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி இந்த நவநகர் இராச்சியம் 1948-ஆம் ஆண்டில் இந்தியாவின் பம்பாய் மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. பின்னர் 1956-இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின் படி, நவநகர் இராச்சியம் குஜராத் மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

நவநகர் இராச்சிய மன்னர் கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி ஒரு பன்னாட்டு துடுப்பாட்ட வீரர் ஆவார்.

ஆட்சியாளர்கள்[தொகு]

ஆட்சிக்காலம் ஆட்சியாளர் பிறப்பு இறப்பு
1540 – 1562 ஜாம் ராவல்ஜி லகாஜி 1562
1562 – 1569 விபாஜி ராவல்ஜி 1569
1569 – 1608 சாதாஜி விபாஜி 1608
1608 – 1624 ஜசாஜி சாதாஜி 1624
1624 – 1645 லக்காஜி அஜாஜி 1645
1645 – 1661 ரன்மல்ஜி லக்காஜி 1661
1661 – 1664 ராய்சிங்ஜி ல்க்காஜி
1664 – 1673 Interregnum
1673 – 1690 தமாட்சி ராய்சிங் ஜி
2 அக்டோபர் 1690 – 13 அக்டோபர் 1708 லக்காஜி தமாட்சி 1708
13 அக்டோபர் 1708 – 13 ஆகஸ்டு 1711 ராய்சிங்ஜி லக்காஜி 1711
13 ஆகஸ்டு 1711 – 1743 தமாட்சி ராய்சிங்ஜி 1743
செப்டம்பர் 1743 - 2 நவம்பர் 1767 லக்காஜி தமாட்சி 1743 1767
2 நவம்பர் 1767 – 6 ஆகஸ்டு 1814 ஜாசாஜி லக்காஜி 1814
6 ஆகஸ்டு 1814 – 24 பிப்ரவரி 1820 இரண்டாம் சாதாஜி லக்காஜி 1820
24 பிப்ரவரி 1820 – 22 பிப்ரவரி 1852 இரண்டாம் ரன்மால்ஜி சாதாஜி 1852
22 பிப்ரவரி 1852 – 28 ஏப்ரல் 1895 இரண்டாம் விபாஜி ரன்மல்ஜி 1827 1895
28 ஏப்ரல் 1895 – 14 ஆகஸ்டு1906 இரண்டாம் ஜஸ்வந்த் சிங்ஜி விபாஜி 1882 1906
12 மார்ச் 1907 – 2 ஏப்ரல் 1933 இரண்டாம் கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி 1872 1933
2 ஏப்ரல் 1933 – 15 ஆகஸ்டு 1947 திக்விஜய் சிங் 1895 1966
3 பிப்ரவரி 1966 – 28 டிசம்பர் 1971 சத்ருசல்யா சிங் 1939 living

நகையணிகள் சேகரிப்பாளர்கள்[தொகு]

நவநகர் மகாராஜா ஜாம்சாகிப் மற்றும் கே. எஸ். ரஞ்சித்சிங்ஜி நவரத்தின நகைகள் சேகரிக்கும் பழக்கம் கொண்டவரகள் என்பதால், வைர நகைகள் பற்றிய அறிவு அனுபவ பூர்வமாக கொண்டவர்கள். [2][3] 1934-இல் மகாராஜா திக்விஜய் சிங் தலைப்பாகையில் 61.5 காரட் (12.3 கிராம்) விஸ்கி நிற வைர நகை அணிந்திருந்தார்.[4]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nawanagar State". The Imperial Gazetteer of India, v. 18. Oxford Clarendon Press, London. 1909. பக். 419. https://dsal.uchicago.edu/reference/gazetteer/pager.html?objectid=DS405.1.I34_V18_425.gif. 
  2. "Emerald Necklaces of the Maharajah of Nawanagar – Internetstones.COM".
  3. Nadelhoffer, Hans (2007). Cartier. Chronicle Books. பக். 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8118-6099-4. https://books.google.com/books?id=xnKpjh1gkqgC&q=Jamsaheb+Ranjitsinhji+of+Jamnagar&pg=PA169. 
  4. Eye of the Tiger Diamond, Maharaja Aigrette l'oeil du tigre diamond

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவநகர்_இராச்சியம்&oldid=3377939" இலிருந்து மீள்விக்கப்பட்டது