லெஸ்போஸ்

ஆள்கூறுகள்: 39°12′36″N 26°16′48″E / 39.21000°N 26.28000°E / 39.21000; 26.28000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெஸ்வோஸ்
Λέσβος
பிராந்திய அலகு
மிட்டிலீனி காட்சி, ஏப்ரல் 2010
மிட்டிலீனி காட்சி, ஏப்ரல் 2010
வடக்கு ஏஜியனில் லெஸ்போஸ்
வடக்கு ஏஜியனில் லெஸ்போஸ்
லெஸ்வோஸ் is located in கிரேக்கம்
லெஸ்வோஸ்
லெஸ்வோஸ்
வடக்கு ஏஜியனில் லெஸ்போஸ்
ஆள்கூறுகள்: 39°12′36″N 26°16′48″E / 39.21000°N 26.28000°E / 39.21000; 26.28000
Countryகிரேக்கம் (நாடு)
RegionNorth Aegean
Capitalமிட்டிலீனி
பரப்பளவு
 • மொத்தம்1,632.8 km2 (630.4 sq mi)
மக்கள்தொகை (2020)
 • மொத்தம்1,14,880
 • அடர்த்தி70/km2 (180/sq mi)
இனங்கள்Lesbian
நேர வலயம்EET (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம் (ஒசநே+3)
Postal codes81x xx
Area codes225x0

லெஸ்போஸ் அல்லது லெஸ்வோஸ் (Lesbos or Lesvos /ˈlɛzbɒs/, also US: /ˈlɛzbəs, -bs/; கிரேக்க மொழி: Λέσβος ) என்பது வடகிழக்கு ஏஜியன் கடலில் அமைந்துள்ள ஒரு கிரேக்க தீவு ஆகும். இது பெரும்பாலும் கிரேக்கத்தில், அதன் தலைநகருக்குப் பிறகு மைட்டிலீன் Μυτιλήνη ) என்று அழைக்கப்படுகிறது. இது 1,633 km2 (631 sq mi) பரப்பளவைக் கொண்டுள்ளது [1] 321 கிலோமீட்டர்கள் (199 மைல்கள்) இது கிரேக்கத்தின் மூன்றாவது பெரிய தீவாகும். இது துருக்கியிலிருந்து குறுகிய மைதிலினி நீர்சந்தியால் பிரிக்கப்பட்டுள்ளது. இத்தீவானது பழங்கால/மெசோலிதிக் காலங்களில் [2] கடைசி பனியுக காலம் முடிவதற்கு முன்பு அனடோலியன் நிலப்பகுதியுடன் இணைக்கப்பட்டிருந்தது.

லெஸ்போஸ் என்பது வடக்கு ஏஜியன் பிராந்தியத்தின் பிராந்திய அலகின் பெயருமாகும், இந்த அலகில் லெஸ்போஸ் தீவு ஐந்து ஆளும் தீவுகளில் ஒன்றாகும். மற்றவை சியோஸ், இகாரியா, லெம்னோஸ், சாமோஸ் ஆகியவை ஆகும். வடக்கு ஏஜியன் பகுதி மக்கள் வசிக்கும் ஒன்பது தீவுகளை இது ஆளுகிறது. அவை லெஸ்போஸ், சியோஸ், பிசாரா, ஓனஸ்ஸஸ், இகாரியா, ஃபோர்னோய் கோர்சியன், லெம்னோஸ், அரிஸ்டாச்சஸ் எஃப்ஸ்ட்ரேடியோஸ், சமோஸ் ஆகியவை ஆகும். வடக்கு ஏஜியன் பிராந்தியத்தின் தலைநகரம் மிட்டிலீனி ஆகும் . சில சமயங்களில் கவிஞர்களின் தீவு [3] என்று அழைக்கப்படும் லெஸ்போஸின் மக்கள்தொகை தோராயமாக 100,000 ஆகும், அவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தீவின் தென்கிழக்கு பகுதியில் உள்ள இதன் தலைநகரான மிட்டிலீனியில் வாழ்கின்றனர். மீதமுள்ள மக்கள் சிறிய நகரங்கள் மற்றும் கிராமங்களில் பரவியுள்ளனர். அவற்றில் மிகப் பெரியவை பிளோமாரி, கல்லோனி, கெரா கிராமங்கள், அகியாசோஸ், எரெசோஸ் மற்றும் மோலிவோஸ் (பண்டைய மிதிம்னா).

பிற்கால கிரேக்க எழுத்தாளர்களின் கூற்றுப்படி, மிட்டிலீனி நகரானது கிமு 11 ஆம் நூற்றாண்டில் பென்திலிடே குடும்பத்தால் நிறுவப்பட்டது. இவர்கள் தெசலியில் இருந்து வந்து நகர அரசை ஆட்சி செய்தனர். பிட்டகஸ் ஆஃப் மைட்டிலீன் தலைமையிலான மக்கள் கிளர்ச்சியால் (கிமு 590–580 ) அவர்களின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவந்தது. இடைக்காலத்தில், இது பைசாந்தியப் பேரரசு மற்றும் பின்னர் செனோவாக் குடியரசு போன்றவர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. லெஸ்போஸ் 1462 இல் உதுமானிய பேரரசால் கைப்பற்றப்பட்டது. 1912 இல் முதல் பால்கன் போர் வரை, இது கிரேக்க இராச்சியத்தின் ஒரு பகுதியாக மாறும் வரை உதுமானியர்கள் தீவை ஆட்சி செய்தனர்.

இந்த தீவு பண்டைய கிரேக்க கவிஞரான சாப்போவின் இருப்பிடம் என்று பரவலாக அறியப்படுகிறது. ஓரினச்சேர்க்கையுடன் லெஸ்பியன் என்ற சொல் இதன் நவீன அர்த்தத்தைப் பெறுகிறது.

குறிப்புகள்[தொகு]

  1. "Population & housing census 2001 (incl. area and average elevation)" (PDF). National Statistical Service of Greece. Archived from the original (PDF) on 2015-09-21.
  2. Harissis et al. 'A Palaeolithic site on Lesbos island, Greece'. "Αρχαιολογία και Τέχνες"(Archaeology & Arts) 2000;76:83–87, Article in Greek
  3. Λέσβος το νησί των ποιητών
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெஸ்போஸ்&oldid=3476555" இலிருந்து மீள்விக்கப்பட்டது