இல்செதோர் கிளீவுசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலாரென் இல்செதோர் கிளீவுசு (Lauren Ilsedore Cleeves) ஓர் அமெரிக்க வானியற்பியலாளர் ஆவார் இவர் வர்ஜீனியா பல்கலைக்கழக்த்தில் வானியல் துறையில் உதவி பேராசிரியராக உள்ளார்.[1] இவர் முதனிலைக் கோள்வட்டுகளின் ஆய்வில் சிறப்புப் புலமை பெற்றவர்.

வாழ்க்கைப்பணி[தொகு]

இவர் 2015 இலிருந்து 2018 வரை சுமித்சோனிய வானியற்பியல் நோக்கீட்டகத்தில் அபுள் ஆய்வுறுப்பினராகச் சேர்ந்துள்ளார்.[2] இதற்கு முன்பே மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் எடுவின் பெருகின் வழிகாட்டுதலில் முனைவர் பட்டம் ஈட்டியுள்ளார்.

இவர் உடுக்கணப் பருதி வட்டுகளின் வான்வேதியியல் தடங்களின் ஆய்வில் வல்லமை சான்றவர். இவர் தாழெடை விண்மீன்களைச் சுற்றி உருவாகிவரும் இளங்கோள் அமைப்புகளின் வேதியியல், உட்கூறு, கட்டமைப்புகளைக் கோட்பாட்டுப் படிமங்களைப் பயன்படுத்தி ஆய்வு செய்து வருகிறார். இதற்காக இவர் அட்டகாமா பெருமில்லிமீட்டர் அணிவழியும் எர்ழ்சல் விண்வெளி நோக்கீட்டக நோக்கீடுகளையும் பயன்படுத்துகிறார்.[3][4] இவர் புவியில் நீர் உருவாக்கம் பற்றியும் ஆய்வு செய்துள்ளார்.[5]

விருதுகள்[தொகு]

இவர் 2018 இல் வானியலுக்கான அன்னீ ஜம்ப் கெனான் விருதை பெற்றார். இது " இவர் கோள் உருவாக்கம், முதனிலைக் கோள்வட்டு சார்ந்த ஆய்வுகளுக்காக வழங்கப்பட்டது".[6]

இவருக்கு 2019 இல் பேக்கார்டு விருது வழங்கப்பட்டது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ilse Cleeves – Assistant Professor". University of Virginia. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
  2. "NASA and STScI Select Hubble Fellows for 2015". NASA. April 6, 2015. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
  3. "AAS Names Recipients of 2018 Awards and Prizes". American Astronomical Society. January 10, 2018. Archived from the original on December 2, 2018. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
  4. "L. Ilsedore Cleeves". University of Virginia. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
  5. Feltman, Rachel (September 25, 2014). "The water on our planet may be older than the sun, which is good news in the hunt for extraterrestrial life". The Washington Post. https://www.washingtonpost.com/news/speaking-of-science/wp/2014/09/25/the-water-on-our-planet-may-be-older-than-the-sun-which-is-good-news-in-the-hunt-for-extraterrestrial-life/?noredirect=on. 
  6. "Annie Jump Cannon Award in Astronomy". American Astronomical Society. பார்க்கப்பட்ட நாள் December 1, 2018.
  7. https://www.packard.org/insights/news/packard-fellowships-in-science-and-engineering-announces-2019-class-of-fellows/. பார்க்கப்பட்ட நாள் October 16, 2019. {{cite web}}: Missing or empty |title= (help)

]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இல்செதோர்_கிளீவுசு&oldid=3369814" இலிருந்து மீள்விக்கப்பட்டது