புரொம் ரஷ்யா வித் லவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புரொம் ரஷ்யா வித் லவ்
இயக்கம்டெரன்ஸ் யங்
தயாரிப்புஹாரி சால்ட்ஸ்மேன்
ஆல்பர்ட் ஆர். ப்ரோக்கோலி
மூலக்கதைபுரொம் ரஷ்யா வித் லவ்
படைத்தவர் இயான் பிளெமிங்
திரைக்கதைரிச்சர்ட் மைபாம்
இசைஜான் பாரி
நடிப்புசான் கானரி
பெட்ரோ அர்மெண்டரிஸ்
லோட்டே லென்யா
ராபர்ட் ஷா
பெர்னார்ட் லீ
டேனீலா பியாஞ்சி
ஒளிப்பதிவுடெட் மூர்
படத்தொகுப்புபீட்டர் ஆர் ஹன்ட்
கலையகம்இயான் புரொடக்சன்சு
விநியோகம்யுனைடெட் ஆர்ட்டிஸ்ட்
வெளியீடு10 அக்டோபர் 1963 (1963-10-10)(லண்டன் )
11 அக்டோபர் 1963 (ஐக்கிய இராச்சியம்)
27 மே 1964 (ஐக்கிய அமெரிக்கா)
ஓட்டம்115 நிமிடங்கள்
நாடுஐக்கிய இராச்சியம்[1]
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$2 மில்லியன்
மொத்த வருவாய்$79 மில்லியன்

புரொம் ரஷ்யா வித் லவ் (From Russia with Love) என்பது 1963 ஆம் ஆண்டு வெளிவந்த பிரித்தானிய நாட்டு உளவு திரைப்படம் ஆகும். இது ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் இரண்டாவது படம் ஆகும். இந்த படம் 1957 ஆம் ஆண்டு இதே பெயரில் வெளிவந்த நாவலாசிரியர் இயான் பிளெமிங் என்பவரின் நாவலைத் தழுவி இயக்குனர் 'டெரன்ஸ் யங்' என்பவரால் எடுக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தை இயான் புரொடக்சன்சு நிறுவனம் தயாரிக்க, சான் கானரி, பெட்ரோ அர்மெண்டரிஸ், லோட்டே லென்யா, ராபர்ட் ஷா, பெர்னார்ட் லீ மற்றும் டேனீலா பியாஞ்சி ஆகியோர் நடித்துள்ளார்கள். இப்படத்தின் கால நீளம் 115 நிமிடங்கள். இப்படத்தின் ஆக்கச்செலவு 2 மில்லியன் ஆகும். இத்திரைப்படத்திற்காக துருக்கி மற்றும் இத்தாலி போன்ற நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த திரைப்படம் 11 அக்டோபர் 1963 இல் வெளியானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "From Russia with Love". Lumiere. European Audiovisual Observatory. பார்க்கப்பட்ட நாள் 9 October 2020.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரொம்_ரஷ்யா_வித்_லவ்&oldid=3344485" இலிருந்து மீள்விக்கப்பட்டது