கிள்ளான் மாவட்டம்

ஆள்கூறுகள்: 3°05′N 101°25′E / 3.083°N 101.417°E / 3.083; 101.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிள்ளான் மாவட்டம்
Daerah Klang
சிலாங்கூர்
Map
கிள்ளான் மாவட்டம் is located in மலேசியா
கிள்ளான் மாவட்டம்
      கிள்ளான் மாவட்டம்
ஆள்கூறுகள்: 3°05′N 101°25′E / 3.083°N 101.417°E / 3.083; 101.417
தொகுதிகிள்ளான்
உள்ளூராட்சிகிள்ளான் நகராட்சி மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிசைனால் நோர்[1]
பரப்பளவு
 • மொத்தம்626.78 km2 (242.00 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்8,61,189
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
அஞ்சல் குறியீடுகள்40xxx-42xxx
தொலைபேசி குறியீடு+6-03-3, +6-03-51
போக்குவரத்துப் பதிவெண்கள்B

கிள்ளான் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Klang; ஆங்கிலம்: Klang District; சீனம்: 巴生县) மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். இந்த மாவட்டத்திற்கு வடக்கில் கோலா சிலாங்கூர் மாவட்டம்; தெற்கில் கோலா லங்காட் மாவட்டம்; கிழக்கில் பெட்டாலிங் மாவட்டம்; ஆகிய மூன்று மாவட்டங்கள் அமைந்து உள்ளன.[2]

மேற்கே மலாக்கா நீரிணை; 53.75 கி.மீ. அளவிற்குக் கடற்கரை பகுதியைக் கொண்டு உள்ளது.

பொது[தொகு]

இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கிள்ளான் (Klang City). மற்ற நகரங்கள் கிள்ளான் துறைமுகம், பண்டமாரான், காப்பார், மேரு மற்றும் பண்டார் சுல்தான் சுலைமான்.

கிள்ளான் ஆறு இந்த மாவட்டத்தின் வழியாகப் பாய்ந்து கோலா கிள்ளான் துறைமுகத்திற்கு அருகில் முடிவு அடைகின்றது. மேலும் இந்த மாவட்டத்தின் கடல் பகுதிகளில் கிள்ளான் தீவு; இண்டா தீவு; செட் மாட் ஜின் தீவு; நண்டு தீவு; தெங்கா தீவு; ரூசா தீவு; செலாட் கெரிங் தீவு; பிந்து கெடோங் தீவு போன்ற தீவுகள் உள்ளன.

இந்த மாவட்டம் கிள்ளான் மற்றும் காப்பார் என இரண்டு முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

மக்கள் தொகையியல்[தொகு]

2010-ஆம் ஆண்டு, கிள்ளான் மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய இனக் குழுக்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்கள்:

மலாய்க்காரர்கள்: 376,606 - 43.73%

சீனர்கள்: 225,425 - 26.18%

இந்தியர்கள்: 165,382 - 19.2%

இதர பூமிபுத்திராக்கள்: 12,620 - 1.47%

மற்றவர்கள்: 4,179 - 0.49%

மலேசியர்கள் மொத்தம்: 784,212 - 91.06%

மலேசியர்கள் அல்லாதவர்கள்: 76,977 - 8.94%

மொத்தம்: 861189 - 100.00%[3]

மலேசிய நாடாளுமன்றம்[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) சிப்பாங் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதிகள். 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

நாடாளுமன்றம் தொகுதி உறுப்பினர் கட்சி
P108 சா ஆலாம் காலிட் அப்துல் சமாட் பாக்காத்தான் அரப்பான் (அமானா)
P109 காப்பார் அப்துல்லா சானி அப்துல் அமீட் பாக்காத்தான் அரப்பான் (பி.கே.ஆர்)
P110 கிள்ளான் சார்லசு சந்தியாகோ பாக்காத்தான் அரப்பான் (ஜ.செ.க)
P111 கோத்தா ராஜா முகமட் சாபு பாக்காத்தான் அரப்பான் (அமானா)

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றம்[தொகு]

சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் சிப்பாங் மாவட்டத்தின் பிரதிநிதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்:[4]

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P108 N40 கோத்தா அங்கேரிக் நஜ்வான் அலிமி பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)
P108 N41 பத்து தீகா ரொட்சியா இஸ்மாயில் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)
P109 N42 மேரு முகமட் பாருல்ராசி பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)
P109 N43 செமெந்தா டாரோயா அல்வி பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்)
P109 N44 செலாட் கிள்ளான் அப்துல் ரசீட் அசாரி பெரிக்காத்தான் நேசனல் (பி.பி.பி.எம்)
P110 N45 பண்டார் பாரு கிள்ளான் தான் சாங் கிம் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P110 N46 கிள்ளான் துறைமுகம் அமிசாம் சாமான் உரி பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)
P110 N47 பண்டமாரான் லியோங் தக் சி பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)
P111 N48 செந்தோசா குணராஜா ஜார்ஜ் பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)
P111 N49 சுங்கை கண்டிஸ் சவாவி அகமட் முகினி பாக்காத்தான் ஹரப்பான் (பி.கே.ஆர்)
P111 N50 கோத்தா கெமுனிங் கணபதிராவ் விருமன் பாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Portal Rasmi PDT Klang Perutusan Pegawai Daerah Klang". www2.selangor.gov.my. Archived from the original on 2019-07-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.
  2. "BACKGROUND". luas.gov.my.
  3. Katiman Rostam. "Population Change of the Klang-Langat Extended Metropolitan Region, Malaysia, 1957-2000". Akademika 79 (1): 1–18. http://www.ukm.my/penerbit/akademika/ACROBATAKADEMIKA79/01%20katiman.pdf. பார்த்த நாள்: 2021-12-04. 
  4. "www.spr.gov.my மலேசியாவின் தேர்தல் ஆணையம் வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்". Archived from the original on 2018-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-12-04.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளான்_மாவட்டம்&oldid=3745440" இலிருந்து மீள்விக்கப்பட்டது