தண்டர்போல்ட் ரோசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தண்டர்போல்ட் ரோசு
வெளியீடு தகவல்
வெளியீட்டாளர்மார்வெல் காமிக்சு
முதல் தோன்றியதுதண்டர்போல்ட் ரோசு:
த இன்கிரிடிபில் ஹல்க் #1 (மே 1962)

ரெட் ஹல்க்:
ஹல்க் #1 (ஜனவரி 2008)
உருவாக்கப்பட்டதுதண்டர்போல்ட் ரோசு:
ஸ்டான் லீ
ஜாக் கிர்பி

ரெட் ஹல்க்:
ஜெப் லோப்
எட் மெக்கின்னஸ்
கதை தகவல்கள்
மாற்று முனைப்புதாடியஸ் இ. "தண்டர்போல்ட்" ரோசு
குழு இணைப்புஅவென்ஜர்ஸ்
திறன்கள்தண்டர்போல்ட் ரோசு:
நிபுணத்துவ இராணுவ மூலோபாய நிபுணர்
மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஆயுதங்களுக்கான அணுகல்
பல வீரர்கள் மற்றும் படைகளை அணுகக்கூடிய கட்டளை அதிகாரி
ரெட் ஹல்க்:
அபரிமிதமான மனிதநேயமற்ற வலிமை, சகிப்புத்தன்மை மற்றும் ஆயுள்
ஆற்றல் உறிஞ்சுதல்
வெப்ப உற்பத்தி

தண்டர்போல்ட் ரோசு (ஆங்கில மொழி: Thunderbolt Ross) என்பவர் மார்வெல் காமிக்சு நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஒரு அமெரிக்க வரைகதை புத்தகத்தில் வரக்கூடிய கனவுருப்புனைவு மீநாயகன் கதாபாத்திரம் ஆகும். இந்த கதாபாத்திரத்தை ஸ்டான் லீ மற்றும் ஜாக் கிர்பி ஆகியோரால், தண்டர்போல்ட் ரோசு என்ற கதாபாத்திரம் மே 1962 இல் வெளியான த இன்கிரிடிபில் ஹல்க் # 1 என்ற கதையிலும்,[1] ரெட் ஹல்க்[2] என்ற கதாபாத்திரம் சனவரி 2008 இல் வெளியான ஹல்க் #1 கதையிலும் தோற்றுவிக்கப்பட்டது.[3]

இவரின் பாத்திரம் ஒரு அமெரிக்க நாட்டு இராணுவ அதிகாரி, பேனரை ஹல்க்காக மாற்றிய காமா வெடிகுண்டு திட்டத்தின் தலைவர். பேனரும் ஹல்க்கும் ஒன்றுதான் என்பதை அறிந்த பிறகு, ரோசு பேனரையும் வேட்டையாடுகிறார். 2008 ஆம் ஆண்டில், ரோசு தனது எதிரியை சிறப்பாக எதிர்த்துப் போராட ரெட் ஹல்காக மாற்றப்பட்டார்.

தண்டர்போல்ட் ரோசு என்ற கதாபாத்திரம் இயங்குபட தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்பட ஆட்டம் உட்பட பிற ஊடகங்களில் தோன்றியுள்ளது. இந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கும் விதமாக 2003 இல் வெளியான ஹல்க் என்ற திரைப்படத்திற்கு நடிகர் 'சாம் எலியட்' என்பவர் நடித்தார், மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களான த இன்கிரிடிபில் ஹல்க் (2008), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016),[4] அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) பிளாக் விடோவ் (2021) போன்ற படங்களில் நடிகர் வில்லியம் கேர்ட் என்பவர் நடித்துள்ளார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. DeFalco, Tom; Sanderson, Peter; Brevoort, Tom; Teitelbaum, Michael; Wallace, Daniel; Darling, Andrew; Forbeck, Matt; Cowsill, Alan et al. (2019). The Marvel Encyclopedia. DK Publishing. பக். 300. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4654-7890-0. https://archive.org/details/marvelencycloped0000unse_w9e3. 
  2. "'Hulk' #5 is – second printing announced". CBR.com. August 12, 2008. http://www.comicbookresources.com/?page=article&id=17678. 
  3. Jeph Loeb (w), Ed McGuinness (p), Dexter Vines (i). "Who is the Hulk?" Hulk v2, 1 (February 2008), Marvel Comics
  4. Han, Angie (August 25, 2016). "'Captain America: Civil War' Directors Considered Including Red Hulk and Iron Spider". /Film.
  5. Barnhardt, Adam (October 1, 2019). "New Black Widow Set Photos Confirm William Hurt on Set". ComicBook.com (in ஆங்கிலம்). Archived from the original on January 25, 2020. பார்க்கப்பட்ட நாள் October 2, 2019.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டர்போல்ட்_ரோசு&oldid=3849559" இலிருந்து மீள்விக்கப்பட்டது