உருபீடியம் ஆக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உருபீடியம் ஆக்சைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ருபீடியம் ஆக்சைடு
வேறு பெயர்கள்
ருபீடியம்(I) ஆக்சைடு
டை ருபீடியம் ஆக்சைடு
இனங்காட்டிகள்
18088-11-4 Y
பண்புகள்
Rb2O
வாய்ப்பாட்டு எடை 186.94 கி/மோல்
தோற்றம் மஞ்சள் திண்மம்
அடர்த்தி 4 கி/செ.மீ3
உருகுநிலை >500 °செல்சியசு
RbOH உருவாகிறது.
+1527.0•10−6செ.மீ3/மோல்
கட்டமைப்பு
படிக அமைப்பு எதிர் புளோரைட்டு (கனசதுரம்), cF12
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முகி (Rb+); cubic (O2−)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும், நீருடன் தீவிரமாக வினைபுரியும்.
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் இலித்தியம் ஆக்சைடு
சோடியம் ஆக்சைடு
பொட்டாசியம் ஆக்சைடு
சீசியம் ஆக்சைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ருபீடியம் ஆக்சைடு (Rubidium oxide) என்பது Rb2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தண்ணீருடன் ருபீடியம் ஆக்சைடு தீவிரமாக வினைபுரிகிறது. எனவே இச்சேர்மம் இயற்கையில் தோன்றுமென எதிர்பார்க்க இயலாது. கனிமங்களில் காணப்படும் ருபீடியம் சேர்மத்தின் உள்ளடக்கம் அதன் மூலக்கூற்று வாய்ப்பாட்டிலிருந்தே கணக்கிடப்பட்டும் மேற்கோளிடப்பட்டும் கூறப்படுகிறது. நடைமுறையில் ருபீடியம் தனிமம் சிலிக்கேட்டு அல்லது அலுமினோ சிலிக்கேட்டின் ஒரு பகுதிக்கூறாக அதிலும் குறிப்பாக ஒரு மாசாகவே கலந்துள்ளது. லெபிதொலைட்டு (KLi2Al(Al,Si)3O10(F,OH)2 ) என்ற கனிமமே ருபீடியத்தின் பிரதானமான மூலப்பொருளாகும். சில சமயங்களில் மேற்கண்ட வாய்ப்பாட்டிலுள்ள பொட்டாசியத்தை ருபீடியம் இடப்பெயர்ச்சி செய்கிறது.

ருபீடியம் ஆக்சைடு மஞ்சள் நிறத்துடன் காணப்படும் ஒரு திண்மமாகும். சோடியம் ஆக்சைடு (Na2O), பொட்டாசியம் ஆக்சைடு ( K2O) மற்றும் சீசியம் ஆக்சைடு (Cs2O) போன்ற வேதிச் சேர்மங்கள் இதனுடன் தொடர்புடைய சேர்மங்களாகும்.

கார உலோக ஆக்சைடுகள் M2O (M = Li, Na, K, Rb) எதிர்புளோரைட்டு கட்டமைப்பில் படிகமாகின்றன. எதிர்புளோரைட்டு கட்டமைப்பு நோக்குருவில் எதிர்மின் அயனிகள் மற்றும் நேர்மின் அயனிகளின் நிலைகள் தலைகீழாக மாறுகின்றன. கால்சியம் புளோரைட்டில் உள்ளபடி ருபீடியம் அயனிகள் 8 கனசதுர ஒருங்கிணைப்புகளும் ஆக்சைடு அயனிகள் 4 நான்முக ஒருங்கிணைப்புகளும் கொண்டுள்ளன [1].

பண்புகள்[தொகு]

மற்ற கார உலோக ஆக்சைடுகள் போலவே ருபீடியம் ஆக்சைடும் (Rb2O) ஒரு வலிமையான காரமாக செயல்படுகிறது. தண்ணீருடன் ருபீடியம் ஆக்சைடு தீவிரமாக வினைபுரிந்து ருபீடியம் ஐதராக்சைடு உருவாகிறது. இதுவோர் வெப்ப உமிழ்வு வினையாகும்.

Rb2O + H2O → 2 RbOH

தண்ணீருடன் தீவிரமாக வினைபுரிகிறது என்பதால் ருபீடியம் ஆக்சைடு ஒரு நீருறிஞ்சி என கருதப்படுகிறது. சூடுபடுத்தும்பொது ருபீடியம் ஆக்சைடு ஐதரசனுடன் வினைபுரிந்து ருபீடியம் ஐதராக்சைடாகவும், ருபிடியம் ஐதரைடாகவும் உருவாகிறது:[2]

Rb2O + H2 → RbOH + RbH

தயாரிப்பு[தொகு]

ஆய்வகப் பயன்பாட்டில் ருபீடியம் ஐதராக்சைடே ருபீடியம் ஆக்சைடிற்குப் பதிலாக பயன்படுத்தப்படுகிறது. RbOH சேர்மத்தை வர்த்தக முறையில் வாங்க முடியும். ஐதராக்சைடு மிகவும் பயனுள்ள ஒரு சேர்மம் ஆகும். ஆனால் சுற்றுச்சுழல் ஈரப்பதத்தில் குறைந்த வினைத் திறன் கொண்டதாகும். ஆக்சைடைக்காட்டிலும் குறைந்த செலவு தரக்கூடியதும் ஆகும்.

பெரும்பாலான உலோக ஆக்சைடுகள் போல ,[3] ருபீடியம் ஆக்சைடை (Rb2O) தயாரிக்க ருபீடியம் உலோகத்தை ஆக்சிசனேற்றம் செய்து தயாரிக்க இயலாது. மாறாக நீரிலி நைட்ரேட்டை ஒடுக்க வினைக்கு உட்படுத்தி தயாரிக்கலாம்:

10 Rb + 2 RbNO3 → 6 Rb2O + N2

குறிப்பாக உலோக ஐதராக்சைடுகளை நீர் நீக்கம் செய்து ருபீடியம் ஆக்சைடு தயாரிக்க இயலாது. மாறாக ஐதராக்சைடு சிதைவுக்கு உட்படுத்தப்பட்டு ஆக்சைடு தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் ருபீடியம் உலோகத்தைப் பயன்படுத்தி ஐதரசன் ஒடுக்கப்படுகிறது.

2 Rb + 2 RbOH → 2 Rb2O + H2

ருபீடியம் உலோகம் ஆக்சிசனுடன் வினைபுரிகிறது. இதனால் விரைவில் காற்றில் ஒளிமங்கச் செய்கிறது. நிறம் மங்கும் செயல்முறை ஒரு வண்ண நிகழ்வாகும். வெண்கல நிற Rb6O வழியாக, செப்பு நிற Rb9O2 சேர்மத்தை அடைகிறது.[3]. Rb9O2 மற்றும் Rb6O, Cs-ருபீடியம் கீழாக்சைடுகள் Cs11O3Rbn (n = 1, 2, 3) உள்ளிட்ட ருபீடியத்தின் துணை ஆக்சைடுகள் எக்சு கதிர் படிகவியல் ஆய்வுகள் மூலம் அடையாளப்படுத்தப்படுகின்றன.[4] ருபீடியம் சேர்மத்தின் ஆக்சிசனேற்ற இறுதி வடிவம் (RbO2) என்ற ருபீடியம் மீயாக்சைடு ஆகும்:

Rb + O2 → RbO2

இந்த மீயாக்சைடு பின்னர் மிகையளவு ருபீடியம் உலோகத்தின் உதவியால் ஒடுக்கப்பட்டு Rb2O உருவாகிறது:

3 Rb + RbO2 → 2 Rb2O

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=உருபீடியம்_ஆக்சைடு&oldid=3641408" இலிருந்து மீள்விக்கப்பட்டது