ஐ.நா. ஆங்கில மொழி நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஐ.நா. ஆங்கில மொழி நாள் (UN English Day) ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. [1] இந்த நிகழ்வு 2010 ஆம் ஆண்டில் ஐக்கியநாடுகள் சபையின் பொதுத் தகவல் துறையால் நிறுவப்பட்டது. பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதற்கும் அத்துடன் அமைப்பு முழுவதும் ஐ.நா. அவையின் அனைத்து ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளையும் சமமாகப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் இவ்வமைப்பு தொடங்கப்பட்டது. [2]

ஆங்கில மொழி நாள் கொண்டாட்டத்திற்கு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டது ஏனெனில் இம்மாதம் பாரம்பரியமாக வில்லியம் சேக்சுபியரின் பிறந்த நாள் மற்றும் இறந்த நாள் ஆகிய இரண்டாகவும் கடைப்பிடிக்கப்படுகிறது".ஐ.நா.வின் மற்ற ஐந்து அதிகாரப்பூர்வ மொழிகளின் கொண்டாட்டத்திற்காக வேறு தேதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. [3]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐ.நா._ஆங்கில_மொழி_நாள்&oldid=3595131" இலிருந்து மீள்விக்கப்பட்டது