ஆர். முத்துக்கவுண்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர். முத்துக்கவுண்டர்
நாடாளுமன்ற உறுப்பினர்
பதவியில்
1962 - 1967, 1967- 1971
தொகுதிதிருப்பத்தூர்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 செப்டம்பர் 1918 (1918-09-18) (அகவை 105)
நாமக்கல் மாவட்டம், கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி
இறப்பு7 அக்டோபர், 1994
கோயம்புத்தூர்
அரசியல் கட்சிதிமுக
துணைவர்பிரேமா
பிள்ளைகள்1 மகள், 2 மகன்கள்
வாழிடம்அரூர்

ஆர். முத்துக்கவுண்டர் (பிறப்பு: 18, செப்டம்பர், 1918) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியும், இந்திய மக்களவை முன்னாள் உறுப்பினரும் ஆவார்.[1] இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். இவர் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர்.

வாழ்கை குறிப்பு[தொகு]

ஆர். முத்து கவுண்டர் தற்போதைய நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் வட்டம், கல்குறிச்சி வெள்ளாளப்பட்டி என்ற சிற்றூரில் 18, செப்டம்பர், 1918 பிறந்தார். இவரது பெற்றோர் இராமசாமி கவுண்டர், வள்ளியம்மாள் ஆவர். இவர் தன் பள்ளிப் படிப்பை வெள்ளாளப்பட்டி, முத்துக்காளிப்பட்டி துவக்கப்பள்ளிகளிலும், இராசிபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியிலும் முடித்தார். பின்னர் சேலம் நகராண்மைக் கலைக்கல்லூரியில் இண்டர் மீடியேட் படிப்பை முடித்தார். 1942 இல் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எழும்மர் பணிக்கு சேர்ந்தார். பின்னர் வருவாய் ஆய்வாளர், உணவு வழங்கல் அலுவலர் என உயர்ந்தார். 1950இல் அரூருக்கு குடிபெயர்ந்த இவர் 1951இல் அரசு பணியில் இருந்து விலகி வேளாண்மையிலும், பொதுவாழ்விலும் தீவிரமாக ஈடுபட்டார். வேளாண்மையில் பல சாதனைகளைப் புரிந்து தமிழ்நாடு அரசின் பல பரிசுகளைப் பெற்றார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

1962 ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில் திருப்பத்தூர் மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீன்டும் 1967 தேர்தலிலும் அதே தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக நாடாளுமன்றக் குழுவின் கொறடா, நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு உறுப்பினர் போன்ற பொறுப்புகளை வகித்தார். பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தலைவராக 1973 முதல் 1976 வரை பணியாற்றினார்.

இறப்பு[தொகு]

உடல் நலக்குகறைவால் பாதிக்கபட்ட முத்து கவுண்டர் 1994, அக்டோபர், 7 கோவை மருத்துவமனையில் இறந்தார்.

நூற்றாண்டுவிழா[தொகு]

ஆர். முத்து கவுண்டரின் நூற்றாண்டு விழாவானது 2018, அக்டோபர் 7 அன்று தருமபுரி மாவட்டம், அரூரில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், கொண்டாடப்பட்டத்து. விழாவில் தமிழ்நாடு அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவில், முத்துக்கவுண்டரின் வாழ்க்கை வரலாறு நூலினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன் வெளியிட்டார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "அரூரில் அக்டோபர் 7-ல் ஆர். முத்துகவுண்டர் நூற்றாண்டு விழா". தினமணி. 2018-04-04. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  2. "அரூரில் ஆர்.முத்துக்கவுண்டரின் நூற்றாண்டு விழா 3 அமைச்சர்கள் பங்கேற்பு". Dailythanthi.com. 2018-10-08. பார்க்கப்பட்ட நாள் 2021-11-08.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._முத்துக்கவுண்டர்&oldid=3576545" இலிருந்து மீள்விக்கப்பட்டது