போகோ தொலைக்காட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
போகோ தொலைக்காட்சி
ஒளிபரப்பு தொடக்கம் 1 சனவரி 2004; 20 ஆண்டுகள் முன்னர் (2004-01-01)
உரிமையாளர்
  • வார்னர்மீடியா என்டர்டெயின்மென்ட் நெட்வொர்க்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் [1]
நாடு இந்தியா
மொழி
தலைமையகம் மும்பை, இந்தியா
துணை அலைவரிசை(கள்)
கிடைக்ககூடிய தன்மை
செயற்கைக்கோள்
டாட்டா ஸ்கை (இந்தியா) சேனல் 670
டிஷ் தொலைக்காட்சி (இந்தியா) சேனல் 955
பெக்சிம்கோ (வங்காளம்) சேனல் 454
ஏர்டெல் டிஜிட்டல் டிவி (இந்தியா) சேனல் 451
வீடியோகான் டி2எச் (இந்தியா) சேனல் 509
சன் டைரக்ட் (இந்தியா) சேனல் 535
டயலொக் தொலைக்காட்சி (இலங்கை) சேனல் 44
டிஷ் தொலைக்காட்சி (இலங்கை) சேனல் 2708

போகோ தொலைக்காட்சி என்பது சிஎன் நிறுவனத்தின் ஒரு பகுதியாக அதன் சர்வதேச பிரிவின் கீழ் வார்னர்மீடியாவிற்கு சொந்தமான இந்திய நாட்டு கம்பி மற்றும் செய்மதி அலைவரிசை சேவை ஆகும். இது வார்னர்மீடியாவின் இந்திய நாட்டு குழந்தைகளுக்கான அலைவரிசை மற்றும் உள்ளூர் உள்ளடக்கத்தை மட்டுமே ஒளிபரப்புகிறது. இந்த அலைவரிசை சனவரி 1, 2004 ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையிடமாக கொண்டு தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் இயங்கி வருகின்றது.

வரலாறு[தொகு]

இந்த அலைவரிசை அதிகாரப்பூர்வமாக சனவரி 1, 2004 அன்று டர்னர் இன்டர்நேஷனல் இந்தியா[2] என்ற நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இந்த போகோ தொலைக்காட்சியில் இயங்குபடம் மற்றும் நேரடி அதிரடி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் இந்தியாவுக்கான ஒரே குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு வலைப்பின்னல் ஆகும்.

இந்த தொலைக்காட்சி பெரும்பாலும் அனிமே, அமெரிக்க மற்றும் பிற வெளிநாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் சில இந்திய தொடர்களை ஒளிபரப்பு செய்தது. பின்னர் இந்த அலைவரிசை 2019 முதல் 2020 வரை தனது கவனத்தை இந்திய இயங்குபடத்திற்கு மாற்றியது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Roy, Tasmayee Laha (5 March 2020). "Pogo & Cartoon Network go local with India Originals". Exchange4media. பார்க்கப்பட்ட நாள் 24 September 2020.
  2. "Turner International India to launch 24-hour kids' channel, POGO". afaqs!. பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.
  3. "Pogo & Cartoon Network go local with India Originals - Exchange4media". Indian Advertising Media & Marketing News – exchange4media (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-01-19.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=போகோ_தொலைக்காட்சி&oldid=3308217" இலிருந்து மீள்விக்கப்பட்டது