ஜான் விட்சர்ச் பென்னெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜான் விட்சர்ச் பென்னெட் (John Whitchurch Bennett)(28 ஜூலை 1790 - 10 ஜூன் 1853) [1] என்பவர் பிரித்தானிய இராணுவ அதிகாரி, அச்சுப்பொறி நிறுவனர் மற்றும் இயற்கை ஆர்வலர் ஆவார்.

வாழ்க்கை[தொகு]

பென்னெட் 1806 முதல் 1815 வரை அரச கடற்படையின் ஒரு பிரிவில் பணியாற்றினார். இவர் 1815-ல் பிரித்தானிய இராணுவத்திற்கு மாற்றப்பட்டார். மேலும் 1816-ல் இலங்கைக்கு அனுப்பப்பட்டார். இலங்கையில் இவர் 1827 வரை பணியாற்றினார்.[1] 1815-ல் இவர் 2வது இளயரையராகப் பணியாற்றினார். இவர் 1819-ல் அரை ஊதியத்தில் வைக்கப்பட்டார்.[2] இலங்கையில் குடிமை சேவை நியமனத்துடன், பல்வேறு இளநிலைப் பதவிகளில் பணியாற்றினார். பின்னர் 1826-ல் இலங்கைத் தீவின் தென் கடற்கரைப் பகுதியில் உள்ள காலி மற்றும் அம்பாந்தோட்டையில் குற்றவியல் நடுவராக நியமிக்கப்பட்டார்.[3][4][5]

1827-ல் பென்னெட் இலங்கையினை விட்டு வெளியேறியபோது, இவர் மீது நிதி முறைகேடு குற்றம் சாட்டப்பட்டு[6] 1828-ல் மீண்டும் 3வது இலங்கைப் படைப்பிரிவுக்காக அரை ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்.[7]

1829-ல் பென்னெட் லின்னேயன் சமூக உறுப்பினராகச் சேர்ந்தார். தோட்டக்கலை சங்கத்தின் உறுப்பினராகவும் சேர்ந்தார்.[8] 1830-ல் இவர் இலங்கையின் ஆளுநராக சர் எட்வர்ட் பார்ன்சின் நடத்தையை ஆராயுமாறு பாராளுமன்றத்தில் மனு செய்தார்.[9] 1837-ல், சர் அலெக்சாண்டர் ஜான்சடனிடம் ஆதரவு கோரினார்.[3] அச்சத்தினராக பணிபுரிந்தபோது 1839 ஆம் ஆண்டு திவாலானாராக அறிவிக்கப்பட்டதையடுத்து கடற்படை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.[10]

பணி[தொகு]

கோம்போசசு விரிடிசு, ஜான் விட்சர்ச் பென்னெட் வரைந்த ஓவியத்திலிருந்து

பென்னட் எழுதினார்:

  • இலங்கைக் கடற்கரையில் (1830) காணப்படும் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் சுவாரஸ்யமான மீன்களிலிலிருந்து ஒரு பகுதி.[11] தாமஸ் ஹார்ட்விக்கின் உதவியுடன்.[4]
  • கோகோ-நட் பனை, அதன் பயன்கள் மற்றும் சாகுபடி (1836)[12]
  • சிலோன் மற்றும் அதன் திறன்கள்: இதன் இயற்கை வளங்கள், உள்நாட்டு உற்பத்திகள் மற்றும் வணிக வசதிகள் (1843).[13] இது ஒரு நாடகாமா நாடக செயல்திறன் விளக்கம், தென்னிந்தியாவின் நாடக வடிவிலிருந்து பெறப்பட்ட சிங்கள நாடக வடிவம்.[14][15][16]

திருமணம்[தொகு]

பென்னெட் 1815-ல் பிரான்செசு லுட்ரெல் மோரியார்டியை மணந்தார்.[17]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Pethiyagoda, Rohan (2007). Pearls, Spices, and Green Gold: An Illustrated History of Biodiversity Exploration in Sri Lanka. WHT Publications. பக். 111. 
  2. Office, Great Britain. War (1821). A List of the Officers of the Army and of the Corps of Royal Marines. பக். 620. https://archive.org/details/bub_gb_dgUcAQAAIAAJ. 
  3. 3.0 3.1 J. W. Toussaint, Literature and the Ceylon Civil Service (1931) (PDF), pp.120–1
  4. 4.0 4.1 Saunders, Brian Greig (2012). Discovery of Australia's Fishes: A History of Australian Ichthyology to 1930. Csiro Publishing. 
  5. Bulletin of the Royal College of Surgeons of England. Royal College of Surgeons of England. 2005. பக். 112. 
  6. Harris, Elizabeth (2006-04-18). Theravada Buddhism and the British Encounter: Religious, Missionary and Colonial Experience in Nineteenth Century Sri Lanka. Routledge. பக். 44. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781134196258. https://books.google.com/books?id=ugIS0N8Ez84C&pg=PA44. பார்த்த நாள்: 22 October 2017. 
  7. Britain, Great (1828). The London Gazette. T. Neuman. பக். 50. https://books.google.com/books?id=ABJKAQAAMAAJ&pg=PA50. பார்த்த நாள்: 22 October 2017. 
  8. "List of the Linnean Society of London". Internet Archive. பார்க்கப்பட்ட நாள் 22 October 2017.
  9. "House of Commons Journal Volume 85: 13 May 1830, British History Online".
  10. Comprising Reports of Cases in the Courts of Chancery, King's Bench, and Common Pleas, from 1822 to 1835: And Law Journal Reports Divided Into Equity and Bankruptcy Cases. Common Law Cases 1836-1858. 1839. பக். 4. https://books.google.com/books?id=yCtFAAAAYAAJ&pg=RA3-PA4. 
  11. Bennett, John Whitchurch (1830). A Selection from the Most Remarkable and Interesting Fishes Found on the Coast of Ceylon: From Drawings Made in the Southern Part of that Island, from the Living Specimens. Longman. https://books.google.com/books?id=6wxJAAAAcAAJ. பார்த்த நாள்: 22 October 2017. 
  12. Bennett, John Whitchurch (1836). The Coco-nut Palm, Its Uses and Cultivation ... As Adapted for the General Benefit in Our West Indian and African Colonies.... Sherwood, Gilbert, and Piper. https://books.google.com/books?id=76NY3_auMNkC. பார்த்த நாள்: 22 October 2017. 
  13. Bennett, John Whitchurch (1843). Ceylon and Its Capabilities: An Account of Its Natural Resources, Indigenous Productions, and Commercial Facilities. Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120611689. https://books.google.com/books?id=MjknSI4QVg0C. பார்த்த நாள்: 22 October 2017. 
  14. Brisbane, Katherine; Chaturvedi, Ravi; Majumdar, Ramendu; Pong, Chua Soo; Tanokura, Minoru (2005-08-16). The World Encyclopedia of Contemporary Theatre: Volume 5: Asia/Pacific. Routledge. பக். 523. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781134929788. https://books.google.com/books?id=E2qKAgAAQBAJ&pg=PA523. பார்த்த நாள்: 22 October 2017. 
  15. Bennett, John-W. (1843). Ceylon and Its Capabilities. பக். 101–2. https://books.google.com/books?id=Q9UbJx5bh-IC&pg=PA101. பார்த்த நாள்: 22 October 2017. 
  16. Rubin, Don; Pong, Chua Soo; Chaturvedi, Ravi; Majundar, Ramendu; Tanokura, Minoru (2001). The World Encyclopedia of Contemporary Theatre: Asia/Pacific. Taylor & Francis. பக். 420. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780415260879. https://books.google.com/books?id=maGU4ziPQJQC&pg=PA420. பார்த்த நாள்: 22 October 2017. 
  17. The Monthly Magazine: Or, British Register .... 1815. பக். 95–6. https://books.google.com/books?id=nGg3AQAAMAAJ&pg=PA95. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜான்_விட்சர்ச்_பென்னெட்&oldid=3580815" இலிருந்து மீள்விக்கப்பட்டது