இந்து சுயம்சேவாக் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்து சுயம்சேவாக் சங்கம்
உருவாக்கம்1940
சேவை
இந்தியாவிற்கு வெளியே
தாய் அமைப்பு
ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்
சார்புகள்சங் பரிவார்
செயல்நோக்கம்இந்தியாவிற்க் வெளியே வெளிநாடுகளில் இந்துத்துவக் கொள்கைகளைப் பரப்புதல்
வலைத்தளம்Official website
லைபீரியா நாட்டில் இந்து சுயம்சேவாக் சங்கத்தின் மகளிர் அணி 15 டிசம்பர் 2018 அன்று நிறுவப்பட்டது

இந்து சுயம்சேவாக் சங்கம் (Hindu Swayamsevak Sangh சுருக்கமாக:HSS) (இந்தி: हिन्दू स्वयंसेवक संघ; ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் சகோதர அமைப்புகளில் ஒன்றாகும். இந்தியாவிற்கு வெளியே வெளிநாடுகளில் மட்டும் கிளைகளுடன் செயல்படும் இவ்வமைப்பு சங் பரிவார அமைப்புகளில் ஒன்றாகும். இந்த அமைப்பின் 3289 கிளைகள், 156 நாடுகளில் செயல்படுகிறது.[1]

வரலாறு[தொகு]

14 சனவரி 1940 அன்று கென்யா நாட்டின் தலைநகரம் நைரோபியில் ஜெகதீஷ் சந்திர சாஸ்திரி என்பவரும், அவரது நண்பவர்களும் இணைந்து பாரதிய சுயம்சேவாக் சங்கம் என்ற பெயரில் நிறுவினர். பின்னர் கென்யா நாட்டின் பிற நகரங்களிலும் இந்த அமைப்பின் கிளைகள் துவக்கப்பட்டது.[2][3]பின்னர் 1947-ஆம் ஆண்டில் இதன் பெயர் இந்து சுயம்சேவாக் சங்கம் எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஐக்கிய இராச்சியத்தின் பர்மிங்காம் மற்றும் பிராட்போர்டு நகரங்களில் இந்து சுயம்சேவாக் சகத்தின் கிளை 1966-ஆம் ஆண்டில் துவக்கப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jaffrelot 2009, ப. 362.
  2. "Home". hsskenya.org. Archived from the original on 2021-05-06. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  3. "Hindu Swayamsevak Sangh (HSS) organised 21-day 'Vishwa Sangh Shiksha Varg-2016' begins at Nairobi, Kenya". Vishwa Samvada Kendra (in அமெரிக்க ஆங்கிலம்). 2016-12-13. Archived from the original on 2021-05-23. பார்க்கப்பட்ட நாள் 2021-05-23.
  4. Starrs 2001, ப. 13.

வெளி இணைப்புகள்[தொகு]