மனு வி. தேவதேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மனு வி. தேவதேவன் (Manu V. Devadevan ) இந்தியாவைச் சேர்ந்த ஓர் வரலாற்றாசிரியர் ஆவார். 1977 ஆம் ஆண்டு இவர் பிறந்தார். நவீனத்துவத்திற்கு முந்தைய தென்னிந்தியாவில் தனது படைப்புகளுக்காக தேவதேவன் நன்கு அறியப்பட்டார்.[1][2] பல இந்திய மொழிகளில் நிபுணத்துவம் பெற்றவராக இருந்தார்.[3] தற்போது இவர் இமாச்சலப் பிரதேசத்தின் மண்டியிலுள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பள்ளியில் பணிபுரிகிறார்.[1][4] கன்னடத்தில் இரண்டு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ள இவர் <ref name=":1">ஒரு மொழிபெயர்ப்பாளராகவும் இயங்குகிறார்.

நவீனத்திற்கு முந்தைய தென்னிந்தியாவின் மிகவும் அசல் மற்றும் பரந்த அளவிலான பணிகளுக்காக இப்பரிசு வழங்கப்பட்டது. பல மொழிகளில் உள்ள ஆதாரங்களைப் பற்றிய இவரது ஆழ்ந்த அறிவின் அடிப்படையில், இந்தியாவின் கலாச்சார வரலாற்றைப் பற்றிய ஆய்வுக்கு ஒரு சக்திவாய்ந்த மற்றும் புத்துணர்ச்சியூட்டும் புதிய அணுகுமுறையை இவரது புத்தகம் வழங்குகிறது.

கேரளாவைச் சேர்ந்த மனு தேவதேவன், கர்நாடக மாநிலம் பெங்களூரில் வளர்ந்து படித்தார்.[2] சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். மங்களூர் பல்கலைக்கழகத்தில் இந்திய வரலாற்று ஆய்வாளர் கேசவன் வேலுதாட்டின் மேற்பார்வையில் முனைவர் பட்ட ஆராய்ச்சியை முடித்தார்.[2] மனிதநேயத்திற்கான இன்ஃபோசிசு பரிசு 2019 ஆம் ஆண்டு மனு தேவதேவனுக்கு வழங்கப்பட்டது.[1]

வெளியீடுகள்[தொகு]

  1. இந்து மதத்திற்கு முந்தைய வரலாறு (2016)
  2. கிளியோவின் வழித்தோன்றல்கள்: கேசவன் வேலுதாட்டிற்கு மரியாதையளிக்கும் கட்டுரைகள் (2018, ஆசிரியர்)
  3. இந்தியாவின் ஆரம்ப இடைக்கால தோற்றங்கள்' (2020)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Humanities (2019)". Infosys Prize.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. 2.0 2.1 2.2 "Meet Manu V Devadevan, the Keralite Winner of Infosys Prize". Malayala Manorama. 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  3. "IIT Mandi Professor Wins USD 100,000 for Research on Indian History". The Indian Express (in ஆங்கிலம்). 2019.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "The Temple was Not a Vedic institution: Manu V. Devadevan". The Hindu. 2019. https://www.thehindu.com/society/history-and-culture/the-temple-was-not-a-vedic-institution-manu-v-devadevan/article26149218.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனு_வி._தேவதேவன்&oldid=3931325" இலிருந்து மீள்விக்கப்பட்டது