கே. வி. சௌந்தரராஜன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கே. வி. சௌந்தரராஜன் (Kodayanallur Vadamamalachery Soundararajan) (பிறப்பு: 17 பிப்ரவரி 1925) இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் கண்காணிப்பு அகழாய்வாளராக, சென்னை வட்டத்தில் பணிபுரிந்தவர்.[1] பின்னர் இணை தலைமை இயக்குநராக பதவி உயர்வு பெற்றார். இவர் 1940 மற்றும் 1950களில் மோர்டிமர் வீலர் மற்றும் வி. டி. கிருஷ்ணசாமி ஆகியோர்களுடன் இணைந்து தென்னிந்தியாவில் கற்காலம் மற்றும் பெருங்கற்காலத்திய தொல்லியல் இடங்களை அகழாய்வு செய்தமைக்கு அறியப்படுகிறார்.

இவர் அகழாய்வு செய்த இடங்களில் குறிப்பிட்டத்தக்கவைகள்: சானூர் தொல்லியல் களம், செங்கல்பட்டு (1950-1952), குன்றத்தூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) (1955–56), பேரூர், (கோவை மாவட்டம்) (1970–71, 1973–74) ஆகும். மேலும் இவர் கடலில் மூழ்கிய காவிரிப்பூம்பட்டினம் நகரத்தை 1960களில் அகழாய்வு செய்தார். 1990-ஆம் ஆண்டில் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி வளாகத்தில் நடைபெற்ற அகழாய்வுப் பணிக்குழுவில் இவர் இடம் பெற்றிருந்தார்.

கே. வி. சௌந்தரராஜன், தொல்லியல் ஆய்வாளர் ஆர். வி. இராமனுடன் இணைந்து இவர் காவிரிப்பூம்பட்டினம் அகழாய்வுகள் குறித்து அறிக்கை வெளியிட்டார்.[2] மேலும் சானூர் தொல்லியல் களத்தின் அகழாய்வு அறிக்கையை கே. வி. சௌந்தரராஜன் மற்றும் என். ஆர். பானர்ஜி வெளியிட்டனர்.[3]

படைப்புகள்[தொகு]

ஆய்வறிக்கைகள்
  • "Stone Age industries near Giddalur". Ancient India 7. 1952. 
  • "The lithic industries of Singrauli Basin". Ancient India 7. 1952. 
  • "The iconic development of the Tamils". Proceedings and Transactions of the All-India Oriental Conference 1. 1953. 
  • "Studies in the Stone Age of Nagarjunakonda and its neighbourhood". Ancient India 14. 1958. 
  • "Sanur 1950 & 1952 - A megalithic site in district Chingleput". Ancient India 15. 1959. 
  • "A magnificent Saptamatrika group and Parvati from Vadaval, North Gujarat". Prince of Wales Museum Bulletin 7. 1959–60. 
  • "The Typology of the Anantasayi Icon". Artibus Asiae 29: 69–84. 1969. 
நூல்கள்
  • Indian Temple styles. New Delhi: Munshiram Manoharlal. 1972. 
  • Early Chola Temple. Bombay. 1973. 
  • Glimpses of Indian Culture, History and Archaeology. New Delhi: Sundeep Prakashan. 1980. 
  • Invitation to Indian architecture. New Delhi: Arnold Heinemann. 1984. 
  • Kaveripattinam Excavations 1963-73. Archaeological Survey of India. 1994. 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._வி._சௌந்தரராஜன்&oldid=3297753" இலிருந்து மீள்விக்கப்பட்டது