ஜே. பாக்யலட்சுமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜே.பாக்யலட்சுமி (J. Bhagyalakshmi) ஓர் இந்தியப் பத்திரிகையாளரும், கவிஞரும் புதின ஆசிரியருமாவார். இவர் மேம்பட்ட மேலாண்மை, மக்கள் தொடர்பு, புத்தக வெளியீடு ஆகியவற்றில் சான்றிதழ் பெற்றிருக்கிறார். பத்திரிகையாளராக அறியப்பட்ட இவர் இந்திய தகவல் சேவை (ஐஐஎஸ்) அதிகாரி, மத்திய ஊரக வளர்ச்சி அமைச்சகத்தின் ஊடக இயக்குநர், மத்திய தகவல் மற்றும் விளம்பர அமைச்சகத்தின் தலைமை ஆசிரியர், வெளியீட்டு பிரிவு ஆசிரியர், இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தின் வெளியீட்டு பிரிவு தலைவர், பல்வேறு வெளியீடுகளில் தொடர்பு மற்றும் இணை பேராசிரியர் என பணியாற்றியுள்ளார். மேலும், இவர் இந்திய மற்றும் வெளிநாட்டு விமர்சனம் மற்றும் தொடர்பாளர் போன்ற பத்திரிகைகளின் ஆசிரியராக இருந்தார். இவர் தற்போது சுயாதீன பத்திரிகையாளராகவும், ஊடக ஆலோசகராகவும், மக்கள் தொடர்பு நிறுவனங்களில் விருந்தினர் ஆசிரியராகவும் பணிபுரிகிறார்.

சுய சரிதை[தொகு]

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளியில் பிப்ரவரி 2, 1940 இல் பிறந்தார். தேசிய தலைநகரம் தில்லியில் குடியேறினார். இவர் ஆங்கில இலக்கியங்களைப் படித்தார். மேலும், தகவல்தொடர்புகளில் பயிற்சி பெற்றார். பொதுநலவாயத் திட்டத்தின் கீழ் எனர்ஜோ-சைபர்நாட்டிக் ஸ்ட்ராடஜி மேம்பட்ட மேலாண்மை, பொது உறவுகள் , புத்தக வெளியீட்டில் சான்றிதழ்களையும் பெற்றார். சார்க் , ஆப்பிரிக்க ஆசிய கிராமப்புற மறுசீரமைப்பு அமைப்பின் கீழ் கிராமப்புற வளர்ச்சியைப் படிக்க வங்காளதேசம், சப்பான், இலங்கை, சீனா, திபெத், பூடான், எகிப்து, சிரியா ஆகிய நாடுகளுக்கு பல்வேறு ஆய்வுகளுக்காக பயணம் செய்துள்ளார்.

முன்னதாக இந்திய தகவல் சேவைகளில், இவர் இயக்குநர் (ஊடகம்), (ஊரக வளர்ச்சி அமைச்சகம்), 13 மொழிகளில் வெளிவந்த யோஜனா பத்திரிகையின் தலைமை ஆசிரியர், [1] உட்பட பல்வேறு ஊடகப் பதவிகளை வகித்தார். இவர் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தில் கற்பித்தார். மேலும், வெளியீட்டுத் துறைக்கு தலைமை தாங்கினார். இவர் மக்கள் தொடர்பில் தொகுப்பாளர் (ஐஐஎம்சி), [2] இந்திய மற்றும் வெளிநாட்டு விமர்சனம் (வெளியுறவு அமைச்சகம்) ஆகியவற்றிலும் பணியாற்றினார். பதிப்பாசிரியர் பிரிவின் ஆசிரியராக, பல்வேறு தலைப்புகளில் பல புத்தகங்களைத் திருத்தியுள்ளார். [3] இவரது தொழில் வாழ்க்கையின் தொடக்கத்தில் இவர் விளம்பரம் மற்றும் காட்சி விளம்பர இயக்குனரகத்திலும், ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையத்திலும் ஆராய்ச்சி அதிகாரியாக பணியாற்றினார்.

ஒரு ஆசிரியராக[தொகு]

ஆங்கிலத்திலும், தெலுங்கிலும் எழுத்தாளராக அறியப்பட்ட, இவர் 45 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். ஆரம்ப காலங்களில், இவர் ஜானகி என்ற புனைப்பெயரில் எழுதினார். இவரது வெளியீடுகளில் தொகுப்புகள், கவிதைத் தொகுப்புகள், இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்புகள் ஆகியவை உள்ளன. பல்வேறு பாடங்களில் புத்தகங்களையும் திருத்தியுள்ளார். இருமொழி எழுத்தாளராக முத்திரை பதித்த ஜே. பாக்யலட்சுமி 45 -க்கும் மேற்பட்ட வெளியீடுகளைக் கொண்டுள்ளார். இவரது படைப்புகள் ஆந்திர ஜோதி, ஆந்திரபத்ரிகா [1], ஆந்திரஜனதா, புஸ்தகம், கதாஞ்சலி, ஆந்திரபிரபா, பத்திரிகை, அனாமிகா, ஆந்திரபூமி, உதயம், பிரஜாமாதா, டெல்லி தெலுங்குவாணி, விஜயா, விதுரா, திரிவேணி போன்ற இதழ்களிலும் வெளியிடப்பட்டுள்ளன.[4][5]

சான்றுகள்[தொகு]

  1. "Yojana". google.com.
  2. "Communicator". google.com.
  3. "Vidura". google.com.
  4. "Triveni". google.com.
  5. "Vidura". google.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜே._பாக்யலட்சுமி&oldid=3296405" இலிருந்து மீள்விக்கப்பட்டது