அப்துல்ரசாக் குர்னா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல்ரசாக் குர்னா
Abdulrazak Gurnah
குர்னா (மே 2009)
குர்னா (மே 2009)
பிறப்புஅப்துல்ரசாக்
20 திசம்பர் 1948 (1948-12-20) (அகவை 75)
சான்சிபார் (இன்றைய தான்சானியா)
கல்விகான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் பல்கலைக்கழகம் (இளங்கலை)
கெண்ட் பல்கலைக்கழகம் (முதுநிலை, முனைவர்)
வகைபுதினம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்
  • சொர்க்கம் (1994)
  • கைவிடல் (2005)
குறிப்பிடத்தக்க விருதுகள்இலக்கியத்திற்கான நோபல் பரிசு (2021)

அப்துல்ரசாக் குர்னா (Abdulrazak Gurnah; பிறப்பு: 20 திசம்பர் 1948) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த புதின எழுத்தாளர் ஆவார். இவர் 1960களில் சான்சிபார் நாட்டில் இருந்து சான்சிபார் புரட்சியின் போது வெளியேறி அகதியாக ஐக்கிய இராச்சியத்தில் குடியேறினார்.[1] இவர் 1994 இல் எழுதிய சொர்க்கம் என்ற புதினம் மான் புக்கர் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டது. இவருக்கு 2021 ஆம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.[2][3][4][5]

வாழ்க்கைக் குறிப்பு[தொகு]

அப்துல்ரசாக் குர்னா 1948 திசம்பர் 20 இல்[6] இன்றைய தான்சானியாவில் உள்ள சான்சிபார் சுல்தானகத்தில் பிறந்தார்.[7] சான்சிபார் புரட்சியின் போது அரபு மக்களுக்கெதிரான துன்புறுத்தலை அடுத்து, இவர் தனது 18-வது அகவையில் நாட்டை விட்டு வெளியேறினார்.[8][9] 1968 இல் இவர் ஏதிலியாக இங்கிலாந்து வந்து சேர்ந்தார்.[10][11]

இங்கிலாந்து கான்டர்பரி கிறைஸ்ட் சர்ச் கல்லூரியில் கல்வி கற்று இலண்டன் பல்கலைக்கழகத்தின் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார்..[12] பின்னர் கெண்ட் பல்கலைக்கழகத்தில் 1982 இல் மேற்கு ஆப்பிரிக்கப் புதினங்களின் விமர்சனத்தின் அளவுகோல் என்பதில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டத்தைப் பெற்றார்.[7][13] 1980 முதல் 1983 வரை நைஜீரியாவில் உள்ள பயேரோ பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணியாற்றினார். பின்னர் இளைப்பாறும் வரை கெண்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார்.[8]

விருதுகளும் சிறப்புகளும்[தொகு]

கருப்பொருள்[தொகு]

குர்னாவின் பெரும்பாலான படைப்புகள் கிழக்கு ஆப்பிரிக்காவின் கரையோரப் பகுதிகளை மையப்படுத்தி எழுதப்பட்டுள்ளன.[15] இவரது புதினங்களில் ஒருவரைத் தவிர கதாநாயகர்கள் அனைவரும் சான்சிபாரில் பிறந்தவர்கள்.[16] குர்னாவின் புதினங்கள் கிழக்கு ஆப்பிரிக்க கதாநாயகர்களை அவர்களின் பரந்த சர்வதேச சூழலில் வைக்கின்றன என்று இலக்கிய விமர்சகர் புரூஸ் கிங் வாதிடுகிறார்.[17] எழுத்தாளர் ஐ. சாந்தன் தனது 'உள்ளங்கையில் உலக இலக்கியம்' (2010) என்ற நூலில் "குர்ணாவின் 'அமைதியை நாடுதல்' என்ற புதினம் இடப்பெயர்வு, பண்பாட்டு அடையாளங்கள் போன்றவற்றைப் பேசுகிறது," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BBC (October 7, 2021) Nobel Literature Prize 2021: Abdulrazak Gurnah named winner. Retrieved October 7, 2021.
  2. 2.0 2.1 "The Nobel Prize in Literature 2021". NobelPrize.org. 7 October 2021. Archived from the original on 7 October 2021. பார்க்கப்பட்ட நாள் 7 October 2021.
  3. 3.0 3.1 Flood, Alison (7 October 2021). "Abdulrazak Gurnah wins the 2021 Nobel prize in literature". The Guardian இம் மூலத்தில் இருந்து 7 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211007122935/https://www.theguardian.com/books/2021/oct/07/abdulrazak-gurnah-wins-the-2021-nobel-prize-in-literature. 
  4. 4.0 4.1 "Nobel Literature Prize 2021: Abdulrazak Gurnah named winner". BBC News. 7 October 2021 இம் மூலத்தில் இருந்து 7 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211007151627/https://www.bbc.co.uk/news/entertainment-arts-58828947. 
  5. "இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார் தான்சானியா எழுத்தாளர் அப்துல்ரசாக் குர்னா". பார்க்கப்பட்ட நாள் 8 October 2021.
  6. Loimeier, Manfred (2016-08-30). "Gurnah, Abdulrazak". in Ruckaberle, Axel (in de). Metzler Lexikon Weltliteratur: Band 2: G–M. Springer. பக். 82–83. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-476-00129-0. https://books.google.com/books?id=G0vvDAAAQBAJ. பார்த்த நாள்: 7 October 2021. 
  7. 7.0 7.1 King, Bruce (2004). Bate, Jonathan. ed. The Oxford English Literary History. 13. Oxford: ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பக். 336. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-957538-1. இணையக் கணினி நூலக மையம்:49564874. https://archive.org/details/oxfordenglishlit0013unse. 
  8. 8.0 8.1 Flood, Alison (2021-10-07). "Abdulrazak Gurnah wins the 2021 Nobel prize in literature" (in en). தி கார்டியன் இம் மூலத்தில் இருந்து 7 October 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20211007122935/https://www.theguardian.com/books/2021/oct/07/abdulrazak-gurnah-wins-the-2021-nobel-prize-in-literature. 
  9. "Nobel Literature Prize 2021: Abdulrazak Gurnah named winner" (in en-GB). BBC News. 2021-10-07. https://www.bbc.com/news/entertainment-arts-58828947. 
  10. BBC (October 7, 2021) Nobel Literature Prize 2021: Abdulrazak Gurnah named winner Retrieved 7 October, 2021
  11. Prono, Luca (2005). "Abdulrazak Gurnah - Literature". British Council. Archived from the original on 3 August 2019. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  12. Hand, Felicity. "Abdulrazak Gurnah (1948–)". The Literary Encyclopedia இம் மூலத்தில் இருந்து 2018-06-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180619181555/http://grupsderecerca.uab.cat/ratnakara/sites/grupsderecerca.uab.cat.ratnakara/files/Literary_encyclopedia_people_11741.pdf. பார்த்த நாள்: 2021-10-07. 
  13. Annual Bibliography of English Language and Literature for 1986. 61. Maney Publishing. 1989. பக். 588. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-947623-30-2. 
  14. "Abdulrazak Gurnah" (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Royal Society of Literature. Archived from the original on 10 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2021-10-07.
  15. Lavery 2013, ப. 118.
  16. Bosman, Sean James (2021-08-26). "Abdulrazak Gurnah". Rejection of Victimhood in Literature by Abdulrazak Gurnah, Viet Thanh Nguyen, and Luis Alberto Urrea. Brill Publishers. doi:10.1163/9789004469006_003. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-90-04-46900-6. 
  17. King 2006, ப. 86.

உசாத்துணைகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்ரசாக்_குர்னா&oldid=3520634" இலிருந்து மீள்விக்கப்பட்டது