பரத்பூர் சமஸ்தானம்

ஆள்கூறுகள்: 27°13′N 77°29′E / 27.22°N 77.48°E / 27.22; 77.48
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பரத்பூர் இராச்சியம்
1755–1949
கொடி of பரத்பூர்
கொடி
சின்னம் of பரத்பூர்
சின்னம்
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் (இளஞ்சிவப்பு நிறத்தில்) பரத்பூர் சமஸ்தானத்தின் அமைவிடம்
இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியாவின் வரைபடத்தில் (இளஞ்சிவப்பு நிறத்தில்) பரத்பூர் சமஸ்தானத்தின் அமைவிடம்
தலைநகரம்பரத்பூர்
பேசப்படும் மொழிகள்பிராஜ் பாஷா
இந்தி
அரசாங்கம்
மகாராஜா 
• 1722–1756 (முதல்)
பதான் சிங்
• 1929–1947 (இறுதி)
பிரிஜேந்திர சிங்
வரலாற்று சகாப்தம்மத்தியகால இநதியா
• தொடக்கம்
1755
• 6 ஏப்ரல் 1949
6 ஏப்ரல் 1949
பரப்பு
19315,123 [[சதுர[convert: unknown unit]
மக்கள் தொகை
• 1931
486,954
முந்தையது
பின்னையது
[[முகலாயப் பேரரசு]]
[[இந்தியா]]
தற்போதைய பகுதிகள்இராஜஸ்தான்
இந்தியா
தீக் அரண்மனை, ஆண்டு 1772
மகாராஜா சுரஜ் மால் (1755–1763)
பரத்பூர் இராச்சியத்தின் அரசவை, ஆண்டு 1862
மகாராஜா ஜஸ்வந்த் சிங் (1853–1893)
தீக் கோட்டை
மகாராஜா கிஷன் சிங் (1918–1929)

பரத்பூர் இராச்சியம் அல்லது பரத்பூர் சுதேச சமஸ்தானம் (Bharatpur State), இந்தியா]]வின் மேற்கில் அமைந்த தற்போதைய இராஜஸ்தான் மாநிலத்தின் வடகிழக்கில் அமைந்த பழைய பரத்பூர் மாவட்டத்தின் நிலப்பரப்புகளை கொண்டது. ஜாட் இனத்தைச் சேர்ந்த பதான் சிங் என்பவர் பரத்பூர் இராச்சியத்தை 1755-ஆம் ஆண்டில் நிறுவினார். மன்னர் சூரஜ் மால் ஆட்சியின் (1755–1763) போது பரத்பூர் இராச்சியத்தின் ஆண்டு வருமானம் ரூபாய் 17,500,000 ஆக இருந்தது.[1] பரத்பூர் இராச்சியத்தின் மொத்தப் பரப்பளவு 5,123 சதுர மைல் ஆகும். 1931-இல் இதன் மக்கள் தொகை 4,86,954 அக இருந்தது.

வரலாறு[தொகு]

1755-ஆம் ஆண்டில் முகலயாப் பேரரசின் படைகளுக்கு எதிராக ஜாட் இன மக்கள் தலைவர் பதான் சிங் தலைமையில் தில்லி, ஆக்ரா மற்றும் மதுரா பகுதிகளில் நடைபெற்ற கிளர்ச்சிகள் மூலம் பரத்பூர் இராச்சியம் 1755-இல் நிறுவப்பட்டது. [2]

1895-ஆம் ஆண்டில் பிரித்தானிய இந்தியா அரசு கொண்டு வந்த இந்தியத் துணைப்படைத் திட்டத்தின் கீழ் பரத்பூர் இராச்சியம், பிரித்தானிய இந்தியா அரசுக்கு ஆண்டுதோறும் திறை செலுத்தும் சமஸ்தானமானது. [3][4][5] இது பிரித்தானிய இந்தியாவின் கட்டுப்பாட்டின் கீழ் இந்தியப் பகுதியில் இருந்த 565 சமஸ்தானங்களில் ஒன்றாகும்.

இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த இராச்சியம் அரசியல்சட்ட முடியாட்சியாக 6 ஏப்ரல் 1949 வரை இருந்தது. பின்னர் சுதேச சமஸ்தானங்களின் இணைப்பு ஒப்பந்தப்படி 7 ஏப்ரல் 1949 அன்று இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்த சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பரத்பூர்_சமஸ்தானம்&oldid=3291809" இலிருந்து மீள்விக்கப்பட்டது