இலால் குன்வர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இலால் குன்வர்
लाल कुंवर
இம்தியாஸ் மகால் (امتیاز محل)
18 ஆம் நூற்றாண்டில் இந்தியப் பள்ளியில் வரையப்பட்ட இலால் குன்வரின் உருவப்படம்
முகலாயப் பேரரசின் இராணி
பதவியில்27 பிப்ரவரி 1712 – 12 பிப்ரவரி 1713
பிறப்புஇலால் குன்வர்
लाल कुंवर
17ஆம் நூற்றாண்டு
இறப்பு18ஆம் நூற்றாண்டு
துணைவர்சகாந்தர் சா
மரபுதைமூர் வம்சம் (திருமணம் மூலம்)
தந்தைகாசுசியத் கான்
மதம்இசுலாம்

லால் குன்வர் (Lal Kunwar) என்ற தனது பிறப்புப் பெயரால் அறியப்படும் இம்தியாஸ் மகால் (Imtiaz Mahal) முகலாய பேரரசர் சகாந்தர் சாவின் மனைவியாகவும் முகலாயப் பேரரசின் மகாராணியாகவும் இருந்தார். இவர் ஒரு நாட்டியப் பெண்ணாக இருந்தார். இவர் பேரரசர் மீது உயர்ந்த செல்வாக்கைக் கொண்டிருந்தார். அவரது விளையாட்டுத்தனமான நடத்தையையும், சந்தோசத்தையும் மகிழ்ச்சியையும் ஊக்குவித்தார். இது இறுதியில் அவரது இழிவான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

இவர் சகாந்தர் சாவின் விருப்பமான மறுமனையாட்டியாக இருந்தார். மேலும் இலால் குன்வர் என்ற பெயரால் வரலாற்றில் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார்.[1]

தோற்றமும் குடும்பமும்[தொகு]

இவர் ஒரு நாட்டியப் பெண்ணாகவும் (ஆடல் கணிகை), இசைக் கலைஞராகவும், மாறி மாறி குறிப்பிடப்படுகிறார். இவருக்கு அரச சபையுடன் எந்த முன் தொடர்பும் இல்லை அல்லது பிரபுக்களிடம் எவ்வித உரிமையும் இவருக்கு இருந்ததில்லை. ஆனால் சகாந்தர் சாவின் விருப்பமான தோழியாக உயர்ந்தார். இவரது தந்தை காசுசியத் கான், அக்பரின் அரசவைக் கலைஞராக விளங்கிய தான்சேன் பரம்பரையிலிருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.[1]

அரசியல் செல்வாக்கு[தொகு]

அக்காலத்தில் இருந்த இராணிகளின் பதவிக்கான வழக்கப்படி, இவரும் தன்னுடைய உறவினர்களின் அந்தஸ்தை உயர்த்திய பெருமை இவருக்கு உண்டு. இவருடைய குடும்ப உறுப்பினர்களுக்கு மதிப்புமிக்க பரிசுகளுடன் மன்சப்தாரி அமைப்பின் கீழ் பட்டங்களும் நிலங்களும் வழங்கப்பட்டன. இவரது மூன்று சகோதரர்கள் நியாமத் கான், நம்தார் கான் மற்றும் கான்சாத் கான் ஆகியோர் இவ்வாறானப் பட்டங்களை பெற்றனர். கலாவந்த் வகுப்பின் மற்ற உறுப்பினர்களும் உயர்த்தப்பட்டனர். இந்த நடவடிக்கைகள் அரண்மனையில் வசிக்கும் பிறரின் கோபத்தை தூண்டியது. ஏனென்றால் தாழ்ந்த வர்க்க நபர்களைச் சேர்ப்பதன் மூலம் தங்கள் சொந்த நிலைகள் நிராகரிக்கப்பட்டதாக அவர்கள் உணர்ந்தனர். அரண்மனையைச் இத்தகைய வசீர் சுல்பிகார் கான், முல்தானின் சுபேதராக நியமிக்கப்படாமல் இருக்க, ஒரு பெண்ணைத் தாக்கிய குற்றச்சாட்டில், இவருடைய சகோதரர் குசால் கானைக் கைது செய்யும் வரை சென்றார்.[2]

தனது சொந்த உறவினர்களின் வேலைவாய்ப்பில் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்த காரணத்தால் இவர் நூர் சகானுடன் ஒப்பீடு செய்யப்பட்டார். நூர் சகானைப் போலவே, இலால் குன்வரும் ஒரு பெரிய கொடுப்பனவைப் பெற்றார். அத்துடன் நகைகள் மற்றும் பொருட்களையும் பெற்றார்.[3] பேரரசரின் தரநிலை மற்றும் முரசைப் பயன்படுத்த இவருக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும் ஐநூறு பேர் கொண்ட ஊர்வலத்திலும் இவர் கலந்து கொண்டார். நூர் சகானைப் போலல்லாமல், இவர் மாநிலக் கொள்கையில் தலையிடவில்லை, இவருடைய நலன்கள் தன்னுடைய குடும்பத்தாலும் பேரரசரின் மீதான பக்தியாலும் மட்டுப்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது.[2]

சர்ச்சைக்குரிய நடத்தை[தொகு]

இவரது கீழ் வர்க்க தோற்றம் மற்றும் சக்கரவர்த்தியின் மீதான செல்வாக்குக்கான இந்த மனக்கசப்பு இவரைப் பற்றிய மோசமான பொதுக் கருத்தைத் தூண்டியிருக்கலாம். மேலும் இவழ்ருடைய தன்மை மட்டுமல்ல, சகாந்தர் சாவின் பழக்கவழக்கங்களின் புழக்கத்திற்கு உதவியது.

மன்னனும் இவரும் குடிப்பழக்கத்தை மிகவும் விரும்பினர். ஒரு இரவு இவர்கள் குடிபோதையில் நீண்ட தூரம் சவாரி செய்து விட்டு அரண்மனைக்கு திரும்பியதும், லால் குன்வர் வண்டியை விட்டு வெளியேறி படுக்கைக்குச் சென்றார். குடிபோதையில் இருந்த மன்னனை காலையில் எங்கும் காண முடியவில்லை. ஊழியர்கள் இவரை எழுப்பியபோது, அன்று இரவு மன்னர் பக்கத்தில் இருப்பதாக நினைத்துக் கொண்டதாக கூறினார். இறுதியில், மன்னன் குடிபோதையில், இரதச் சாரதியின் வண்டியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. [4]

மன்னனின் அத்தை, சீனத் உன் நிசா ( ஔவுரங்கசீப்பின் மகள்) இவரை ஏற்கவில்லை. இவரைப் பார்க்கவோ அல்லது இவர் அரசவைக்கு வருவதையோ ஒப்புக்கொள்ளவே இல்லை. இலால் குன்வர் சீனத் மீது அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. குன்வரின் வேண்டுகோளின் பேரில் மன்னன்ர் தனது அத்தையைப் பார்க்க மறுத்து அவளுடைய அழைப்புகளை புறக்கணித்தார். இலல் குன்வர் சகாந்தர் சாவின் இரண்டு இளம் மகன்களையும் விரும்பவில்லை. அதனால் மன்னன் தந்தை அவர்களையும் பார்ப்பதை நிறுத்தி சிறையில் அடைத்தார்.[5]

இவரது தோழமையின் கீழ்சகாந்தர் சா பொது இடத்தில் குளியலில் ஈடுபடுவதும் நிர்வாணமாக உல்லாசமாக நடந்துகொள்வதும் குடிபோதையில் இருப்பதும் இசைக்கலைஞர்களின் உடல் மற்றும் வாய்மொழி அவதூறுக்களுக்கு ஆளானார்.[1]

சகாந்தர் சாவின் மரணம்[தொகு]

1713 ஆம் ஆண்டு சனவரி 10 ஆம் நாளில் கொல்லப்பட்ட ஆசிம்-உசு-சானின் இரண்டாவது மகன் பரூக்சியார், சையித் சகோதரர்களின் உதவியுடன், ஆக்ராவில் நடந்த போரில் "சகாந்தர் சா"வைத் தோற்கடித்தார். தில்லிக்குத் தப்பியோடிய சகாந்தர் சா அங்கு பிடிக்கப்பட்டுப் புதிய பேரரசரிடம் ஒப்படைக்கப்பட்டார். சகாந்தர் சாவும், லால் குன்வரும் ஒரு மாதம் வரை அடைத்து வைக்கப்பட்டனர். 11 பெப்ரவரி 11 ஆம் தேதி கொலையாளிகளை அனுப்பிச் சகாந்தர் சாவின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டனர். கொலையாளிகள் பின்னர் அவரது தலையைத் துண்டித்து பேரரசர் பரூக்சியார் முன் கொண்டு சென்றனர். அவரது உடல் உமாயூனின் சமாதிக் கட்டிடத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலால்_குன்வர்&oldid=3848718" இலிருந்து மீள்விக்கப்பட்டது