அனுபமா குண்டூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அனுபமா குண்டூ
2016இல் அனுபமா குண்டூ
பிறப்பு24 ஏப்ரல் 1967 (1967-04-24) (அகவை 56)
புனே, இந்தியா
தேசியம் இந்தியா
பணிகட்டிடக்கலைஞர் , பேராசிரியர்
செயற்பாட்டுக்
காலம்
1990–தற்போது வரை

அனுபமா குண்டூ (Anupama Kundoo) ( 1967 ) இந்திய மாநிலமான மகாராட்டிராவின் புனேவைச் சேர்ந்த ஓர் இந்திய கட்டிடக் கலைஞராவார்.

சுயசரிதை[தொகு]

அனுபமா குண்டூ மும்பை பல்கலைக்கழகத்தின் சர் ஜேஜே கட்டிடக்கலை கல்லூரியில் கட்டிடக்கலை பயின்றார். மேலும், 1989இல் பட்டம் பெற்றார். "நகர்ப்புற சூழல் சமூகம்: நிலைத்தன்மைக்கான வடிவமைப்பு மற்றும் பகுப்பாய்வு" என்ற தலைப்பில் 1996 ஆம் ஆண்டில் வாஸ்து சில்பா அறக்கட்டளை உதவித் தொகை இவருக்கு வழங்கப்பட்டது. 2008 இல் பெர்லினின் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். [1] [2]

அனுபமா 1990 ஆம் ஆண்டில் புதுச்சேரிக்கு அருகில் அமைந்துள்ள ஆரோவில்லில் தன்னை ஒரு கட்டிடக் கலைஞராக நிறுவினார். அங்கு இவர் "ஆற்றல் மற்றும் நீர் திறமையான உள்கட்டமைப்பு" தழுவல்களுடன் பல கட்டிடங்களை வடிவமைத்து கட்டினார்.[3] இவர் 1990களின் நடுப்பகுதியிலிருந்து 2002 வரை இங்கு வேலை செய்தார்.[4]

அனுபமா 2005 ஆம் ஆண்டில் பெர்லினில் உள்ள தொழில்நுட்ப பல்கலைக்கழகம் மற்றும் ஹெஸெனிலுள்ள டார்ம்ஸ்டாட் ஆகியவற்றில் கற்பித்தார்.[5] இவர் நியூயார்க்கின் பார்சன்ஸ் வடிவமைப்பிற்கான புதிய பள்ளியில் உதவி பேராசிரியராக பணியாற்றினார்.[2] 2011 வரை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் மூத்த விரிவுரையாளராகப் பணியாற்ற ஆத்திரேலியா சென்றார். பின்னர், 2014ஆம் ஆண்டில், இவர் ஐரோப்பாவிற்குச் சென்று மத்ரித்தில் உள்ள யுனிவர்சிடாட் காமிலோ ஜோஸ் செலாவில் உள்ள ஐரோப்பிய கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பப் பள்ளியில் பணியாற்றத் தொடங்கினார். [6]

பணிகள்[தொகு]

கட்டிட வடிவமைப்பிற்கான இவரது அணுகுமுறை சுற்றுச்சூழல் விளைவுகளை குறைக்கும் பொருள் ஆராய்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.[7] இவருடைய அடிப்படை வடிவமைப்பு அணுகுமுறை "கழிவு பொருட்கள், திறமையற்ற தொழிலாளர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களை" பயன்படுத்துவதாகும். [8]

இவரது சொந்த குடியிருப்புக்காக கட்டப்பட்ட குறிப்பிடத்தக்க கட்டிடங்களில் ஒன்று "வால் ஹவுஸ்" என்ற தலைப்பில்15 ஏக்கர் (6.1 ஹெக்டேர்) சமூக பகுதியில் 100 சதுர மீட்டர் (1,100 சதுர அடி) ஒரு மில்லியன் ரூபாயில் [3] அனைத்து சமூகத்தினரும் வாழ்வதற்காக ஆரோவில்லில் கட்டப்பட்டது. [9] இந்த வீடு எல்-வடிவ திட்டத்தில் அமைந்துள்ளது. நடுவில் ஒரு முற்றத்தைக் கொண்டுள்ளது; இது நவீன கருத்தாக இருந்தாலும் பாரம்பரிய "வட்டார மொழி" பொருட்களான மண், பைஞ்சுதைக் கலப்பி, எஃகு போன்றவற்றின் பயன்பாட்டையும் கலந்து உருவாக்கப்பட்டது. குளியலறை ஒரு மேலே திறந்த- வடிவமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது. உட்பக்கமும் வெளிப்புறமும் ஒன்றிணைக்கப்பட்டு நிலப்பரப்புடன், நவீன மற்றும் பிராந்திய தோற்றத்தை அளிக்கிறது.[10] இவருடைய வால் ஹவுஸின் முழு அளவிலான பிரதி கையால் செய்யப்பட்டு வெனிஸ் பினாலே கட்டிடக் கலை கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டது. த நியூயார்க் டைம்ஸ் இதை "இடிபாடுகளுக்கிடையே ஒரு மாணிக்கம்" என்று அழைத்தது.

இவரது மற்றொரு கருப்பொருள் "சுதந்திரம்" ஆகும். இது ஒரு வாசிப்பு இடத்தை இலவச நூலகமாக அளிக்கிறது. ஒரு சதுர இடத்தின் மையத்தில் மூன்று வகையான மரங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டது. மரங்களின் தண்டு மற்றும் கிளைகள் எஃகு மற்றும் இலைகள் பைஞ்சுதையால் செய்யப்பட்ட தரையுடன் புத்தகங்களால் ஆனவை. இது பார்செலோனாவில் உள்ள பிளாக்கா டி சால்வடார் சேகுவியில் சூன் -செப்டம்பர் 2014 இல் காட்சிப்படுத்தப்பட்டது. [11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Anger 2009.
  2. 2.0 2.1 "Anupama Kundoo Strauch Visiting Critic". Ithaca, New York: Cornell University. 2014. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  3. 3.0 3.1 Tipnis 2012.
  4. Heathcote, Edwin (28 March 2014). "Anupama Kundoo's handmade architecture". The Financial Times Ltd. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  5. "Bricks and mortar". Anupama Kundoo. India Today. 10 January 2008. பார்க்கப்பட்ட நாள் 17 October 2015.
  6. "The Architect is Present': biografía de Anupama Kundoo". Madrid, Spain: Arquitectura Viva. 14 March 2014. Archived from the original on 17 நவம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 16 November 2015.
  7. Tipnis 2012, ப. 15.
  8. Haddad, Rifkind & Deyong 2014, ப. 396.
  9. Architects 2001.
  10. Desāi et al. 2012.
  11. Pavilions, Pop-Ups and Parasols: The Impact of Real and Virtual Meeting on Physical Space. Wiley. 2 June 2015. பக். 69. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-118-82904-2. https://books.google.com/books?id=iv9gBgAAQBAJ&pg=PA69. 

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுபமா_குண்டூ&oldid=3542230" இலிருந்து மீள்விக்கப்பட்டது