பெனசீர் பூட்டோ படுகொலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெனசீர் பூட்டோ படுகொலை (Assassination of Benazir Bhutto) 27 டிசம்பர் 2007 அன்று பாக்கித்தானின் ராவல்பிண்டியில் நடந்தது. பெனாசீர் பூட்டோ, இரண்டு முறை பாக்கித்தானின் பிரதமரும் (1988-1990; 1993-1996) மற்றும் அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான பாக்கித்தான் மக்கள் கட்சியின் தலைவருமான, ஜனவரி 2008 இல் நடைபெறவிருந்த தேர்தலுக்கு முன்னதாக பிரச்சாரம் செய்தார்.[1][2][3]லியாகத் நேஷனல் பாகில் நடந்த அரசியல் பேரணிக்குப் பிறகு இவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, மேலும் துப்பாக்கிச் சூடு நடந்த உடனேயே ஒரு தற்கொலைத் தாக்குதல் நடைபெற்றது. ராவல்பிண்டி பொது மருத்துவமனையில் 18.16 உள்ளூர் நேரப்படி (13:16 UTC ) இவர் இறந்ததாக அறிவிக்கப்பட்டார். இந்த குண்டுவெடிப்பில் மேலும் 23 பேர் கொல்லப்பட்டனர்.[4] இரண்டு மாதங்களுக்கு முன்னர் நாடு கடத்தப்பட்ட பிறகு, பூட்டோவினைக் கொல்ல இதேபோன்ற முயற்சி நடைபெற்றது. 2007 ஆம் ஆண்டில் நடைபெற்ற கர்சாசு குண்டுவெடிப்பில் சுமார் 180 பேர் இறந்தனர்.

ஆரம்பகாலத்தில் வெளிவந்த அறிக்கைகள் இவர் துப்பாக்கிச் சூட்டினால் இறந்ததாகக் கூறப்பட்டது. [5] [6] ஆனால் பாக்கித்தானின் உள்துறை அமைச்சகம் குண்டுவெடிப்பினால் பூட்டோவின் தலையில் மண்டை எலும்பு முறிந்து இறந்ததாகக் கூறியது.[7] ஆனால் பூட்டோவின் ஆதரவாளர்கள் இந்த வாதத்தினை ஏற்கவில்லை இவர் ஏற்கனவே இரு முறை இரு முறை துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்தார் எனக் கூறினர். [8] உள்துறை அமைச்சகம் அதன் முந்தைய அரிக்கையில் இருந்து பின்வாங்கியது. [9]

மே 2007 இல், பூட்டோ வெளிநாட்டு ஒப்பந்த நிறுவனங்களான பிளாக்வாட்டர் மற்றும் பிரித்தானிய நிறுவனமான ஆர்மர் குரூப்பிலிருந்து கூடுதல் பாதுகாப்பைக் கேட்டார். இந்த சம்பவம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை நடத்திய விசாரணையில், "பூட்டோவின் படுகொலையை போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தால் தடுத்திருக்க முடியும்" எனக் கூறியது.[10]

பின்னணி[தொகு]

பெனாசிர் பூட்டோ, செப்டம்பர் 2004

பூட்டோ சுய-நாடுகடத்தலைத் தேர்ந்தெடுத்தார், அதே நேரத்தில் ஊழல் தொடர்பான இவரது நீதிமன்ற வழக்குகள் அயல் மற்றும் பாக்கித்தான் நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்தன. [11] நாடுகடத்தப்பட்ட எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு துபாய் மற்றும் லண்டனுக்கு பூட்டோ திரும்பினார் கராச்சிக்கு அக்டோபர் 18, 2007 அன்று திரும்பினார். 2008 தேசிய தேர்தல்களில் அதிகாரப் பகிர்வு ஒப்பந்தம் தொடர்பாக பெர்வேஸ் முஷாரப்பைச் சந்திக்க இவர் சென்றார் . [12] [13]

பின்னர் வீடு திரும்பும் போது கராச்சியில் நடந்த படுகொலை முயற்சியில் பூட்டோ உயிர் தப்பினார். 18 அக்டோபர் 2007 அன்று கராச்சியில் ஒரு பேரணிக்கு செல்லும் வழியில், ஜின்னா சர்வதேச விமானநிலையத்தில் இருந்து இவர் வெளியேறிய சிறிது நேரத்திலேயே இரண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன.[14] அந்த விபத்தில் பூட்டோ காயமடையவில்லை, ஆனால் அந்த குண்டு வெடிப்புகள் பின்னர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல் என்று கண்டறியப்பட்டது. அந்தச் சம்பவத்தில் 139 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் குறைந்தது 450 பேர் காயமடைந்தனர். [15] இறந்தவர்களில் குறைந்தது 50 பேர் இவரது பாக்கித்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த பாதுகாவலர்கள் ஆவர், இவர் சாத்தியமான குண்டுவீச்சுக்காரர்களைத் தவிர்ப்பதற்காக தனது லாரியைச் சுற்றி மனிதச் சங்கிலியை உருவாக்கியுள்ளார். அதில் ஆறு காவல்துறை அதிகாரிகளும் அடங்குவர்.[16] பல மூத்த அதிகாரிகள் காயமடைந்தனர். சம்பவ இடத்திலிருந்து பூட்டோ காயமின்றி அழைத்துச் செல்லப்பட்டார். [17]

படுகொலை[தொகு]

பெனசிர் பூட்டோ ராவல்பிண்டி நகரில் பாக்கித்தான் மக்கள் கட்சி ஆதரவாளர்களின் பேரணியில் உரையாற்றினார், அப்போது பேரணியில் குண்டு வெடித்தது. ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கொலையாளிகள் துப்பாக்கியால் சுட்டதாக ஆரம்ப காவல்துறை அறிக்கைகள் தெரிவித்தன. [18] இவரது வாகனத்தின் அருகில் தற்கொலைத் தாக்குதல் நடந்துள்ளது.[19]

சான்றுகள்[தொகு]

  1. "Bhutto 'wounded in suicide blast'". BBC News. 27 December 2007 இம் மூலத்தில் இருந்து 30 December 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071230053145/http://news.bbc.co.uk/2/hi/south_asia/7161489.stm. 
  2. "Pakistan's Former Prime Minister Benazir Bhutto Assassinated". VOA News (Voice of America). 27 December 2007 இம் மூலத்தில் இருந்து 25 July 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080725141827/http://www.voanews.com/english/archive/2007-12/2007-12-27-voa12.cfm. 
  3. "Benazir Bhutto killed in attack". BBC News. 27 December 2007 இம் மூலத்தில் இருந்து 28 December 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071228135135/http://news.bbc.co.uk/2/hi/south_asia/7161590.stm. 
  4. "Bhutto exhumation OK, Pakistan official says". CNN. 29 December 2007 இம் மூலத்தில் இருந்து 29 February 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080229074415/http://www.cnn.com/2007/WORLD/asiapcf/12/29/bhutto.death/index.html. 
  5. Ahmed, Munir (Associated Press) (28 December 2007). "Pakistan: Al-Qaida Behind Bhutto Killing". San Francisco Chronicle இம் மூலத்தில் இருந்து 14 பிப்ரவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080214104213/http://www.sfgate.com/cgi-bin/article.cgi?f=%2Fn%2Fa%2F2007%2F12%2F25%2Finternational%2Fi120815S15.DTL. 
  6. "Benazir Bhutto assassinated". 28 December 2007. http://www.cnn.com/2007/WORLD/asiapcf/12/27/pakistan.bhutto/index.html. 
  7. "Bhutto died after hitting sun roof". 28 December 2007. http://www.cnn.com/2007/WORLD/asiapcf/12/28/pakistan.friday/index.html. 
  8. "Bhutto death explanation 'pack of lies'". Herald Sun இம் மூலத்தில் இருந்து 31 டிசம்பர் 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071231064102/http://www.news.com.au/story/0%2C23599%2C22983841-1702%2C00.html. 
  9. Press Trust of India (1 January 2008). "Pak Govt makes U-turn on cause of Bhutto's death". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இம் மூலத்தில் இருந்து 22 அக்டோபர் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121022185917/http://articles.timesofindia.indiatimes.com/2008-01-01/pakistan/27751343_1_suicide-bomber-benazir-bhutto-liaquat-bagh. 
  10. Till, Brian. "Could the U.S. Have Prevented Benazir Bhutto's Death?". The Atlantic. பார்க்கப்பட்ட நாள் 30 May 2011.
  11. Talpur, Parveen (10 December 2007). "Pakistan's fragile future". Press & Sun Bulletin (George Troyano). http://pressconnects.newspapers.com/search/#query=benazir+bhutto&dr_year=2007-2007&offset=21.  (archive subscription needed)
  12. "Benazir Bhutto killed in attack". BBC News. 27 December 2007. http://news.bbc.co.uk/2/hi/south_asia/7161590.stm. 
  13. "Supporters flock to Karachi for Bhutto's return". CBC News. 17 October 2007. https://www.cbc.ca/news/world/supporters-flock-to-karachi-for-bhutto-s-return-1.661644. 
  14. Narayana, Nagesh; Cutler, David (27 December 2007). "Chronology: Attacks in Pakistan since July 2007". Reuters இம் மூலத்தில் இருந்து 30 December 2007 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20071230010023/https://www.reuters.com/article/latestCrisis/idUSSP260961. 
  15. . 
  16. Bowley, Graham (20 October 2007). "After Bombing, Bhutto Assails Officials' Ties". த நியூயார்க் டைம்ஸ் இம் மூலத்தில் இருந்து 5 June 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150605075134/http://www.nytimes.com/2007/10/20/world/asia/20Pakistan.html. 
  17. . 
  18. Moreau (28 December 2007). "Can Musharraf Survive?". http://www.newsweek.com/id/82179. 
  19. Kamal (27 December 2017). "Benazir Bhutto killed in suicide bomb attack". https://www.aljazeera.com/blogs/asia/2017/12/day-benazir-bhutto-killed-171227060649509.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெனசீர்_பூட்டோ_படுகொலை&oldid=3701327" இலிருந்து மீள்விக்கப்பட்டது