ருக்கையா சுல்தான் பேகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ருக்கையா சுல்தான் பேகம்
முகலாயப் பேரரசின் ஷா
Zan-i-Kalan
பாத்ஷா பேகம்
ஆட்சிக்காலம்1557கள் – 1605
முன்னையவர்பேகா பேகம்
பின்னையவர்சாலிகா பானு பேகம்
பிறப்பு1542கள்
இறப்பு19 சனவரி 1626(1626-01-19) (அகவை 83–84)[1]
ஆக்ரா, முகலாயப் பேரரசு
புதைத்த இடம்
துணைவர்அக்பர்
மரபுதைமூர் (பிறப்பால்)
தந்தைகிந்தால் மிசா
தாய்சுல்தானா பேகம்
மதம்சுன்னி இசுலாம்

ருக்கையா சுல்தான் பேகம் (Ruqaiya Sultan Begum;1542கள் – 19 சனவரி 1626) 1557 முதல் 1605 வரை முகலாயப் பேரரசின் பேரரசியாக இருந்தார்.[2] இவர் மூன்றாவது முகலாயப் பேரரசர் அக்பரின்[3] [4] [5] பேரரசியாக கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் அரசியாக இருந்தார்.

ருக்கையா, பிறப்பால் முகலாய இளவரசியாவார். இவருடைய தந்தை கிந்தால் மிர்சா அக்பரின் தந்தை நசிருதீன் உமாயூனின் இளைய சகோதரர் ஆவார். இவருக்கு இவரது ஒன்பது வயதில் அக்பருடன் நிச்சயதார்த்தம் செய்யப்பட்டு 14 வயதில் திருமணம் செய்து வைக்கப்பட்டது. ஆனால் தனது காலம் முழுவதும் குழந்தைகள் இல்லாமல் இருந்தார். பிற்கால வாழ்க்கையில், இவர் அக்பரின் விருப்பமான பேரன் குர்ரமை (வருங்கால பேரரசர் ஷாஜகான் ) வளர்த்தார் (கிட்டத்தட்ட தத்தெடுத்தார்). அக்பரின் தலைமை மனைவியாக, இவர் அக்பரின் மீது கணிசமான செல்வாக்கைக் கொண்டிருந்தார். மேலும், 1600களின் முற்பகுதியில் முகலாயரின் சிம்மாசனத்தில் ஜஹாங்கீரின் சேர்க்கை தொடர்பாக தந்தை-மகன் உறவு மோசமாக மாறியபோது, தனது கணவருக்கும் ஜஹாங்கீருக்கும் இடையே ஒரு சமரச பேச்சுவார்த்தையில் முக்கிய பங்கு வகித்தார். இறுதியில் முகலாயர் சிம்மாசனத்தில் ஜஹாங்கீர் சேர வழிவகை செய்ய உதவியது. இவரது வளர்ப்பு மகன் ஷாஜகான் சகோதரத்துவ போராட்டத்திற்குப் பிறகு அரியணை ஏறுவதற்கு ஒரு வருடத்திற்கு முன்பே இவர் இறந்துவிட்டார்.

குடும்பம்[தொகு]

ருக்கையா சுல்தான் பேகம் தைமூர் வம்சத்தில் முகலாய இளவரசியாகப் பிறந்தார். மேலும் முகலாய இளவரசர் கிந்தால் மிர்சாவின் ஒரே மகளாவார். மிர்சா, முதல் முகலாய பேரரசர் பாபர்ருக்கும் அவரது மனைவி தில்தார் பேகத்தின் இளைய மகனாவார்.[6] [7] இஸ்லாமிய தீர்க்கதரிசி முகம்மதுவின் மகள் ருக்கையா பின்த் முகம்மதுவின் பெயரிலேயே இவருக்கு ருக்கையா எனப் பெயரிடப்பட்டது.[8]

இவரது தந்தைவழி மாமா இரண்டாவது முகலாய பேரரசர் நசிருதீன் உமாயூன் (அவர் பின்னர் இவரது மாமனார் ஆனார்), இவரது மிகவும் குறிப்பிடத்தக்க ஏகாதிபத்திய இளவரசியும், உமாயூன்-நாமா ("உமாயூன் புத்தகம்") வின் ஆசிரியருமான குல்பதன் பேகம் இவரது தந்தைவழி அத்தையாவார்.[9]

அக்பருடனான திருமணம்[தொகு]

20 நவம்பர் 1551 இல், கிந்தால் மிர்சா, உமாயுனுக்காக தன்னுடைய ஒன்றுவிட்ட சகோதரர் கம்ரான் மிர்சாவின் படைகளுக்கு எதிரான போரில் வீரத்துடன் போராடி இறந்தார். உமாயூன் தனது இளைய சகோதரனின் மரணத்தால் சோகத்தில் மூழ்கினார். [10]

தனது சகோதரரின் நினைவின் மீதுள்ள பாசத்தின் காரணமாக, உமாயூன் கிந்தாலின் ஒன்பது வயது மகள் ருக்கையாவை தனது மகன் அக்பருக்கு திருமணம் செய்து வைத்தார். அக்பர் கசுனி மாகாணத்தில் துணை ஆட்சியாளாராக நியமிக்கப்பட்ட சிறிது காலத்திலேயே ஆப்கானித்தானின் காபுலில் இவர்களின் நிச்சயதார்த்தம் நடந்தது.[11] [12] [12] [13]

1556 இல் உமாயுனின் மரணத்தைத் தொடர்ந்து அரசியல் நிச்சயமற்ற காலத்தில், ருக்கையாவும் ஏகாதிபத்திய குடும்பத்தின் மற்ற பெண் உறுப்பினர்களும் காபூலில் தங்கியிருந்தனர்.[14] 1557ஆம் ஆண்டில், ருக்கையா இந்தியாவின் பஞ்சாப் பகுதியில் அக்பருடன் சேர்ந்தார். சிக்கந்தர் ஷா தோற்கடிக்கப்பட்டு முகலாயர்களுக்கு அடிபணிந்தார். இவருடன் இவரது மாமியார் அமீதா பானு பேகம், இவரது அத்தை குல்பதான் பேகம் மற்றும் ஏகாதிபத்திய குடும்பத்தைச் சேர்ந்த பல பெண் உறுப்பினர்கள் இருந்தனர். அக்பருடனான ருக்கையாவின் திருமணம் பஞ்சாப் மாநிலத்தின், ஜலந்தர் அருகே நடைபெற்றது.

அதே நேரத்தில், அவரது 18 வயது முதல் உறவினர், சலீமா சுல்தான் பேகம், அக்பரின் கணிசமான வயதான பிரதிநிதியான பைராம் கானை மணந்தார்.[15] பஞ்சாபில் சுமார் நான்கு மாதங்கள் ஓய்வெடுத்த பிறகு, ஏகாதிபத்திய குடும்பம் தில்லிக்கு புறப்பட்டது. முகலாயர்கள் இறுதியாக இந்தியாவில் குடியேறத் தயாராக இருந்தனர்.[15]

பதேப்பூர் சிக்ரி, பேரரசி ருக்கையாவால் பயன்படுத்தப்பட்டது

இறப்பு[தொகு]

ஆப்கானித்தானின் காபூலில் அமைந்துள்ள பாபர் தோட்டங்களின் உள்ளே

ருக்கையா 1626இல் ஆக்ராவில், தனது எண்பத்தி நான்கு வயதில் இறந்தார். தனது கணவரை விட இருபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தார். ஆப்கானித்தானின் காபூலில் உள்ள பாபர் தோட்டத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்டார். இவரது வளர்ப்பு மகனும், ஐந்தாவது முகலாய பேரரசருமான ஷாஜகானின் கட்டளைப்படி இவரது கல்லறை கட்டப்பட்டது. [16]

ஜஹாங்கிர் தனது நினைவுக் குறிப்புகளில் ருக்கையாவைப் பற்றி அன்புடன் எழுதுகிறார். மேலும் இவரது மரணத்தை அதில் பதிவு செய்யும் போது, அக்பரின் தலைமை மனைவியாக இவருடைய உயர்ந்த நிலையைக் குறிப்பிடுகிறார்.[17] [18]

மேற்கோள்கள்[தொகு]

  1. Gulbadan Begum (1902). The History of Humāyūn (Humāyūn-Nāma). Guildford: Billing and Sons Ltd.. பக். 274. https://archive.org/details/historyofhumayun00gulbrich. 
  2. Akbar, the greatest Mogul. 
  3. The Jahangirnama: Memoirs of Jahangir, Emperor of India. 
  4. The Tūzuk-i-Jahāngīrī: or, Memoirs of Jāhāngīr, Volumes 1-2. 
  5. Domesticity and power in the early Mughal world. 
  6. Balabanlilar, Lisa (2012). Imperial identity in the Mughal Empire : Memory and Dynastic politics in Early Modern South and Central Asia. London: I.B. Tauris. பக். 112. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-84885-726-1. 
  7. Faruqui, Munis D. (2012). The Princes of the Mughal Empire, 1504-1719. Cambridge University Press. பக். 251. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1107022171. https://archive.org/details/princesofmughale0000faru. 
  8. Gulbadan, Begum (1902). The History of Humāyūn (Humāyūn-Nāma). Translated by Beveridge, Annette S. Guildford: Billing and Sons Ltd. p. 274.
  9. Alam, Muzaffar (2004). The languages of political islam : India 1200 - 1800. London: Hurst. பக். 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781850657095. https://archive.org/details/languagesofpolit0000alam_l8f8. 
  10. Erskine, William (1854). A History of India Under the Two First Sovereigns of the House of Taimur, Báber and Humáyun, Volume 2. Longman, Brown, Green, and Longmans. பக். 403, 404. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781108046206. 
  11. Mehta, Jaswant Lal (1986). Advanced Study in the History of Medieval India. Sterling Publishers Pvt. Ltd. பக். 189. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8120710150. 
  12. 12.0 12.1 Ferishta, Mahomed Kasim. History of the Rise of the Mahomedan Power in India, Till the Year AD 1612. Cambridge University Press. பக். 169. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781108055550. 
  13. Erskine, William. A History of India Under the Two First Sovereigns of the House of Taimur, Báber and Humáyun, Volume 2. Longman, Brown, Green, and Longmans. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9781108046206. Erskine, William (1854).
  14. The History of Humāyūn (Humāyūn-Nāma). https://archive.org/details/historyofhumayun00gulbrich. 
  15. 15.0 15.1 Emperors of the Peacock Throne : the saga of the great Mughals. 
  16. Ruggles, Fairchild. Islamic Gardens and Landscapes. University of Pennsylvania Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780812207286. 
  17. Jahangir. The Tūzuk-i-Jahāngīrī: or, Memoirs of Jāhāngīr, Volumes 1-2. Munshiram Manoharlal. பக். 48. 
  18. Jahangir, Emperor of Hindustan (1999). The Jahangirnama: Memoirs of Jahangir, Emperor of India. Oxford University Press. பக். 437. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-19-512718-8. Jahangir, Emperor of Hindustan (1999).

உசாத்துணை[தொகு]

  • Findly, Ellison Banks (1993). Nur Jahan: Empress of Mughal India. Oxford University Press. ISBN 9780195360608.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ருக்கையா_சுல்தான்_பேகம்&oldid=3848568" இலிருந்து மீள்விக்கப்பட்டது