பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர்
இயக்கம்ரையன் கூக்லர்[1]
தயாரிப்புகேவின் பிகே
கதை
இசைலுட்விக் கர்ரான்சன்
நடிப்பு
படத்தொகுப்புமைக்கேல் ஷாவர்
கெல்லி டிக்சன்
ஜெனிபர் லேம்
கலையகம்மார்வெல் ஸ்டுடியோஸ்
விநியோகம்வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ்
வெளியீடுஅக்டோபர் 26, 2022 (2022-10-26)(ஹாலிவுட்)
நவம்பர் 11, 2022 (அமெரிக்கா)
ஓட்டம்161 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$200–250 மில்லியன்
மொத்த வருவாய்$859.2 மில்லியன்

பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் (ஆங்கில மொழி: Black Panther: Wakanda Forever) என்பது 2022 ஆம் ஆண்டு வெளியான அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படம் ஆகும். இது பிளாக் பான்தர் என்ற மார்வெல் வரைகதை கதாபாத்திரத்தை மையமாக வைத்து மார்வெல் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனம் தயாரிக்க வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் என்ற நிறுவனம் விநியோகம் செய்கிறது. இது 2018 ஆம் ஆண்டு வெளியான பிளாக் பான்தர் என்ற திரைப்படத்தின் தொடர்ச்சியாகவும் மார்வல் திரைப் பிரபஞ்சத்தின் முப்பதாவது திரைப்படமும் ஆகும்.

இந்த திரைப்படத்தை ரையன் கூக்லர்[2] என்பவர் இயக்க, ரையன் கூக்லர் மற்றும் ஜோ ராபர்ட் கோல் ஆகியோர் கதை எழுதியுள்ளனர்.[3] கேவின் பிகே[4] தயாரிக்கும் இந்த படத்தில் லுபிடா நியாங்கோ, டானாய் குரைரா,[5] மார்டின் பிறீமன்,[6][7] லெட்டிடியா ரைட், வின்ஸ்டன் துயூக், அங்கெலா பாசெட் மற்றும் டொமினிக் தோர்ன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் தொடர்ச்சியான இரண்டாம் பகுதி பிப்ரவரி 2018 இல் தயாரிக்க தீர்மானிக்கப்பட்டது. அடுத்த மாதம் இயக்குனர் ரையன் கூக்லர்[8] என்பவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, 2019 இல் இப்படத்தின் ஆக்கப்பூர்வமான அறிவிப்புஅறிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 2020 இல் பிளாக் பான்தர் வேடத்தில் நடித்த சட்விக் போஸ்மேன்[9] என்பவர் பெருங்குடல் புற்றுநோயால் மரணித்தார். அதனால் படத்தின் திட்டங்கள் மாறின, மார்வெல் தனது டி'சல்லா [10] பாத்திரத்தை மறுபரிசீலனை செய்ய விரும்பவில்லை.[11][12] முதல் படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் மீண்டும் இரண்டாம் படத்திலும் நடிப்பார்கள் என நவம்பர் அன்று உறுதி செயப்பட்டது. மேலும் இப்படத்தின் தலைப்பு மே 2021 இல் அறிவிக்கப்பட்டு, ஜூன் 2021 இன் பிற்பகுதியில் அட்லான்டா மற்றும் மாசச்சூசெட்ஸ் போன்ற நாடுகளை சுற்றி படப்பிடிப்பு தொடங்கபட்டது.[13]

பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் என்ற படம் அக்டோபர் 26, 2022 அன்று ஹாலிவுட், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எல் கேபிடன் தியேட்டர் மற்றும் டால்பி திரையரங்கில் திரையிடப்பட்டது, மேலும் இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தின் நான்காம் கட்டத்தின் இறுதிப் படமாக நவம்பர் 11, அன்று அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. இப்படம் வெளியாகி பொதுவாக விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் உலகளவில் $859.2 மில்லியன் வசூலித்தது, மேலும் 2022 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த ஆறாவது படமாக ஆனது.

மேற்கோள்கள்[தொகு]

  1. VanHoose, Benjamin (March 3, 2021). "Lupita Nyong'o Says Black Panther 2 Director Ryan Coogler Has 'Really Exciting Ideas' for Sequel". People. Archived from the original on March 3, 2021. பார்க்கப்பட்ட நாள் March 3, 2021.
  2. Erao, Matthew (February 6, 2018). "Coogler Interested in Seeing What Kind of King Black Panther Becomes in Sequels". Screen Rant. Archived from the original on February 9, 2018. பார்க்கப்பட்ட நாள் April 26, 2018.
  3. Setoodeh, Ramin (February 5, 2018). "Chadwick Boseman and Ryan Coogler on How 'Black Panther' Makes History". Variety. Archived from the original on February 6, 2018. பார்க்கப்பட்ட நாள் February 6, 2018.
  4. Setoodeh, Ramin (February 14, 2018). "'Black Panther': Marvel Studios President Kevin Feige on Casting Chadwick Boseman and Sequel Talk". Variety. Archived from the original on February 17, 2018. பார்க்கப்பட்ட நாள் April 26, 2018.
  5. Bonomolo, Cameron (July 26, 2019). "Black Panther 2: Danai Gurira Confirms Return as Okoye". ComicBook.com. Archived from the original on July 26, 2019. பார்க்கப்பட்ட நாள் July 26, 2019.
  6. Sneider, Jeff (March 17, 2021). "'Black Panther 2': Martin Freeman on Making the Sequel Without Chadwick Boseman". Collider. Archived from the original on March 17, 2021. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021. {{cite web}}: |archive-date= / |archive-url= timestamp mismatch (help)
  7. Mancuso, Vinnie (August 16, 2019). "'Black Panther 2': Martin Freeman Confirms the Return of Everett Ross". Collider. Archived from the original on August 16, 2019. பார்க்கப்பட்ட நாள் August 16, 2019.
  8. Kit, Borys (October 11, 2018). "Ryan Coogler Signs on to Write and Direct 'Black Panther' Sequel (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on October 11, 2018. பார்க்கப்பட்ட நாள் October 11, 2018.
  9. Perine, Aaron (March 10, 2021). "Black Panther 2: Ryan Coogler Talks Difficulty of Moving On Without Chadwick Boseman". ComicBook.com. Archived from the original on March 11, 2021. பார்க்கப்பட்ட நாள் March 17, 2021.
  10. Pearson, Ben (December 10, 2020). "'Black Panther II' Will Not Recast T'Challa in the Wake of Chadwick Boseman's Death". /Film. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.
  11. Rubin, Rebecca (August 30, 2020). "Ryan Coogler Pays Emotional Tribute to Chadwick Boseman: 'What an Incredible Mark He's Left for Us'". Variety. Archived from the original on August 30, 2020. பார்க்கப்பட்ட நாள் August 30, 2020.
  12. Siegel, Tatiana; Kit, Borys (September 2, 2020). "Disney Grapples With How to Proceed on 'Black Panther' Without Chadwick Boseman". The Hollywood Reporter. Archived from the original on September 2, 2020. பார்க்கப்பட்ட நாள் September 2, 2020.
  13. Kit, Borys; Couch, Aaron (November 20, 2020). "Marvel's 'Black Panther' Sequel Shoot to Begin in July (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 20, 2020. பார்க்கப்பட்ட நாள் November 20, 2020.

வெளி இணைப்புகள்[தொகு]