முக்தா பார்வே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தா பார்வே

முக்தா பார்வே (Mukta Barve pronounced [mʊkt̪a bərʋeː]) 17 மே 1979 இல் பிறந்த ஓர் இந்திய மராத்திய மொழி திரைப்பட, தொலைக்காட்சி மற்றும் நாடக நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார்.இவர் ஏழு மகாராஷ்டிரா மாநில திரைப்பட விருதுகளைப் பெற்றார் மற்றும் சிறந்த நாடகங்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான ஆறு விருதுகளைப் பெற்றார்.

1999 இல், ஜீ மராத்தியில் வெளியான கத்லே பிகட்லே நிகழ்ச்சியின் மூலம் மராத்தி தொலைக்காட்சிக்கு அறிமுகமானார். மராத்தி நாடகமான ஆம்ஹலா வெக்லே வயச்சே (2001) என்ற மராத்தி நாடகத்தின் மூலம் மராத்தி திரையரங்கில் அறிமுகமானார். 2002 ஆம் ஆண்டில், அவர் சக்வாவுடன் மராத்தி திரைப்படங்களில் அறிமுகமானார். அவரது நடிப்பு நேர்மறையான பாராட்டுக்களைப் பெற்றது. தாங் (2006), மாட்டி மாய் (2007), சாவர் ரீ (2007), சாஸ் பஹு அவுர் சென்செக்ஸ் (2008), சும்பரான் (2009) ஆகிய திரைப்படங்களில் நடித்ததற்காக பரவலாக பாராட்டப்பட்டார். 2009 ஆம் ஆண்டில் வெளியான , ஜோக்வா திரைப்படம் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்து, அவருக்கு மீண்டும் வெற்றிப்படங்களை வழங்கியது.

பார்வே , ரசிகா புரடக்சன்ஸ் எனும் பெயரிடப்பட்ட ஒரு நிகழ்ச்சித் தயாரிப்பு நிறுவனத்தை சுயமாகத் தொடங்கினார்.சப்பா கத, லவ்பேர்ட்ஸ், இந்திரா ஆகிய திரைப்படங்களை இந்த நிறுவனத்தின் கீழ் தயாரித்தார்.தற்போது, ரசிகா தனது சொந்த தயாரிப்பில் கோட்மந்த்ரா (2016) என்ற நாடகத்தை நடித்து தயாரித்து வருகிறார். முக்தா, இந்தியாவின் ஜெசிகா ஆல்பாவாகக் கருதப்படுகிறார், ஏனெனில் அவர்களின் தோற்றம்,திரைப்படத் தேர்வு ஆகியவற்றில் சில ஒற்றுமைகள் உள்ளது.

வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

மே 1979 17 ம் தேதி இந்தியா, புனேற்விற்கு அருகில் உள்ள சிஞ்ச்வடுவில் முக்தா பார்வே பிறந்தாரர்[1] .அவரது தந்தை ஒரு தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணிபுரிந்தார், அவரது தாயார் பள்ளி ஆசிரியராக இருந்தார். [2] அவளது சகோதரர், டெபு பார்வே, வணிகக் கலைஞர் ஆவார். [3] [4] அவரது பள்ளியில், அவர் பல நாடகங்களில் பங்கேற்றார். 10ஆம் வகுப்பு பயின்ற பிறகு இவர் நடிப்பைத் தொடர முடிவு செய்தார். பார்வே தனது 11 மற்றும் 12 ஆம் வகுப்பை புனே சர் பரசுராம்பாவ் கல்லூரியில் முடித்தார். பின்னர், இவர் புனே பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார் . மேலும் இவர், லலித் கலா கேந்திராவில் இருந்து நாடகப் பிரிவில் இளங்கலை பட்டம் பெற்றார். [5] குழந்தையாக இருந்த போது தனக்கு அதிக நண்பர்கள் இருந்தது இல்லை எனக் கூறினார். தனது நடிப்புத் தொழிலில் முழுமையாக கவனம் செலுத்த மும்பைக்குச் சென்று குர்லாவில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கினார். [6] [7]

தயாரிப்பு மற்றும் பிற வேலை[தொகு]

ஹ்ருதயந்தரின் இசை வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மற்றும் விக்ரம் பட்னிஸுடன் பார்வ்

அதே ஆண்டில், 2010 ஆம் ஆண்டில், பார்வே அம்ஹி மராத்தி போரா ஹுஷர் என்ற விளையாட்டு நிகழ்ச்சியினை ஜீ மராத்தி தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கினார். [8] 2012 ஆம் ஆண்டில், ஸ்வேப்னில் ஜோஷியுடன் சேர்ந்து ஜீ கவுரவ் புரஸ்கர் எனும் நிகழ்வினை தொகுத்து வழங்கினார். [9] 2012 ஆம் ஆண்டில், ஸ்வப்னில் ஜோஷியுடன் சுயோக் குழுமத்தின் நிறுவனத் தூதராக ஆனார். [10] 2013 ஆம் ஆண்டில், பார்வே தனது நண்பர் ரசிகா ஜோஷியின் பெயரில் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி தயாரிப்பாளரானார். [11] 2014 ஆம் ஆண்டில், பார்வ், ரங் நாவா என்ற கவிதை அடிப்படையிலான நாடக நிகழ்ச்சியை இசையமைப்பாளர் மிலிந்த் ஜோஷியுடன் இனைந்து தயாரித்தார், பார்வே , சொந்தமாக கவிதைகளையும் எழுதினார். [12]

சான்றுகள்[தொகு]

  1. "Home Minister - Episode 1342 - August 14, 2015 - Full Episode". Zee Marathi. 14 August 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "Home Minister - Episode 1342 - August 14, 2015 - Full Episode". Zee Marathi. 14 August 2015.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "The Debunair Artist". Pune Mirror. Archived from the original on 17 November 2015. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  4. "Article about Mukta barve by her Brother Debu Barve in Rasik". bhaskar.com. Archived from the original on 12 May 2020. பார்க்கப்பட்ட நாள் 16 November 2018.
  5. "Mukta Barve talks about Lalit Kala Kendra & theater education". Loksatta. Archived from the original on 17 November 2015. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  6. "Actors who started their career with theatre". The Times of India. Archived from the original on 13 March 2016. பார்க்கப்பட்ட நாள் 27 March 2016.
  7. "मुक्तायन". Loksatta. 14 March 2014. Archived from the original on 18 November 2015. பார்க்கப்பட்ட நாள் 11 November 2015.
  8. "Mukta Barve". zeetalkies.com. Archived from the original on 2015-10-25.
  9. "Zee Gaurav celebrates 100 years of Indian cinema". dna. 5 March 2012. Archived from the original on 10 August 2014. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.
  10. Representative (16 October 2012). "Swapnil Joshi and Mukta Barve brand ambassador of Suyog Group". Loksatta. Archived from the original on 30 June 2018. பார்க்கப்பட்ட நாள் 20 December 2015.
  11. "Mukta Barve turns producer with her production house named after Rasika Joshi". The Times of India. Archived from the original on 22 November 2016. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
  12. "रंग नवा.. तरल कवितानुभव". Loksatta. 15 June 2014. Archived from the original on 16 January 2016. பார்க்கப்பட்ட நாள் 12 November 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தா_பார்வே&oldid=3767438" இலிருந்து மீள்விக்கப்பட்டது