சியா மோடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சியா மோடி
பிறப்பு19 சூலை 1956 (1956-07-19) (அகவை 67)
மும்பை
படித்த கல்வி நிறுவனங்கள்கேம்பிரிச்சுப் பல்கலைக்கழகம்
ஆர்வார்டு சட்டப் பள்ளி
பணிஏஇசட்பி & பார்ட்னர்ஸ் சட்ட நிறுவனத்தின் பங்குதாரர்
அமைப்பு(கள்)ஏஇசட்பி & பார்ட்னர்ஸ் (நிறுவனர் & நிர்வாக பங்குதாரர்)
வாழ்க்கைத்
துணை
ஜெயதேவ் மோசி (டெல்டா கார்ப்பரேசன் நிறுவனத்தின் தலைவர்)

சியா மோடி (Zia Mody) (பிறப்பு 19 சூலை 1956) இந்தியாவைச் சேர்ந்த நிறுவன வழக்கறிஞரும், தொழிலதிபரும் ஆவார். இவர், 1989 முதல் 1990 வரை இந்திய அரசின் தலைமை வழக்குரைஞராகவும், மீண்டும் 1998 முதல் 2004 வரை பணியாற்றிய சோலி சொராப்ஜியின் மகள் ஆவார். இந்தியாவை மாற்றிய 10 தீர்ப்புகள் புத்தகத்தையும் இவர் எழுதியுள்ளார்.[1]

இந்தியாவின் ஏஇசட்பி & பார்ட்னர்ஸ் என்ற முன்னணி சட்ட நிறுவனங்களில் ஒன்றின் பங்குதாரர் ஆவார்.[2] இவர் இந்தியாவின் முன்னணி நிறுவன வழக்கறிஞர்களில் ஒருவரான இவரது செய்த பங்களிப்பிற்காக இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் சட்ட உலகில் அங்கீகரிக்கப்பட்டார். இவர் ஜெனரல் எலக்ட்ரிக், டாட்டா குழுமம், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ஆதித்ய பிர்லா குழுமம், வேதாந்தா ரிசோர்செசு ஆகிய நிறுவனங்களுக்காக பணிபுரிந்தார். கோல்பர்க் கிராவிட்ஸ் ராபர்ட், பெயின் காப்பிடல், வார்பர்க்பின்க்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனக்களுக்கும் இவர் சட்ட அறிவுரையை வழங்குகிறார். 2018 , 2019ஆம் ஆண்டுகளில் பார்ச்சூன் இந்தியாவின் மிக சக்திவாய்ந்த பெண் தொழில்முனைவோரில் இவர் #1 இடத்தைப் பிடித்துள்ளார்.[3]

சுயசரிதை[தொகு]

இவரது ஆரம்பக் கல்வி மும்பையின் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் இருந்தது.[4] இவர் கேம்பிரிச்சு செல்வின் கல்லூரியில் சட்டம் பயின்றார். அதைத் தொடர்ந்து 1979இல் ஆர்வர்டு சட்டப் பள்ளியில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5] இவர் நியூயார்க்கு மாநில வழக்கறிஞர் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மேலும் நியூயார்க் மாநிலத்தில் வழக்கறிஞராக தகுதி பெற்றார். இந்தியா திரும்புவதற்கு முன் நியூயார்க்கு நகரில் பேக்கர் &மெக்கன்சி என்ற நிறுவனத்துடன் ஐந்து ஆண்டுகள் பணியாற்றினார்.[4] இவரது கணவர், தொழில் அதிபர் ஜெய்தேவ் மோடி] டெல்டா கார்ப் நிறுவனத்தின் தலைவராவார்.[6] மகாராட்டிராவின் மும்பையில் வசிக்கும் இவர்களுக்கு அஞ்சலி, ஆர்த்தி, அதிதி என மூன்று மகள்கள் உள்ளனர்.

1984இல் மும்பையில் தனது சொந்தப் பயிற்சியைத் தொடங்கினார். இவர் ஏஇசட்பி & பார்ட்னர்ஸ் என்ற சட்ட நிறுவனத்தை உருவாக்க மற்ற நிறுவனங்களுடன் இரண்டு முறை இணைந்தார்.[4] இது, இந்தியாவின் மிகப்பெரிய சட்ட நிறுவனங்களில் ஒன்றாகும். அங்கு இவர் நிர்வாகப் பங்காளியாக உள்ளார். [7] போர்ப்ஸ் பத்திரிகை "வணிகத்தில் சக்தி வாய்ந்த பெண்கள்" பட்டியலில் இடம் பெற்றார்.[8]பார்ச்சூன் இந்தியா வெளியிட்ட முதல் 50 சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலிலும் இவர் இடம்பெற்றுள்ளார்.[9] இவர் பகாய் சமயத்தைச் சேர்ந்தவராவார். [10]

உறுப்பினர் மற்றும் இணைப்புகள்[தொகு]

சியா மோடி துணைத் தலைவராகவும், ஹாங்காங் & ஷாங்காய் வங்கி கழகத்தின் இயக்குநராகவும் பணியாற்றுகிறார். இவர் சர்வதேச வணிக நடுவர் மன்றத்தின் (ஐசிசிஏ) நிர்வாகக் குழுவில் உறுப்பினராகவும் உள்ளார்.[11] இவர் சீன சர்வதேச பொருளாதார மற்றும் வர்த்தக நடுவர் ஆணையத்தின் நடுவர் குழுவில் நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நடுவரும் [11] சிஐஐ தேசிய அமைப்பின் உறுப்பினரும் ஆவார். சட்டத்தின் செயல்பாட்டில் காணப்பட்ட பல குறைபாடுகளைக் கருத்தில் கொண்டு சட்டத்தின் விதிகளை மறுஆய்வு செய்ய 'நடுவர் மற்றும் சமரசச் சட்டம், 1996' திருத்தம் குறித்து இந்திய சட்ட ஆணையத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவின் குழுவிலும் இவர் இருந்தார். (2014)

சிறு வணிகங்கள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான விரிவான நிதி சேவைகள் குறித்த இந்திய ரிசர்வ் வங்கியின் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகமும் (2012) , உலக வங்கி நிர்வாக தீர்ப்பாயமும், வாஷிங்டன் டிசி (2008-2013) நகரமும் அமைத்த கார்ப்பரேட் ஆளுகைக்கான கோத்ரெஜ் குழு போன்ற அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்துள்ளார்.[11] இலண்டன் நீதிமன்றத்தின் சர்வதேச நடுவர் மன்றத்தின் துணைத் தலைவராகவும் உறுப்பினராகவும் (2010 -2013), ஹெச்எஸ்பிசி ஆசிய-பசிபிக் வாரியத்தின் துணைத் தலைவராகவும், அதன் நிர்வாகமற்ற இயக்குநராகவும் பணியாற்றினார்.[11]

அறக்கட்டளைப் பணிகள்[தொகு]

சியா மோடியின் தொண்டு கிட்டத்தட்ட பகாய் நிதிக்கு செல்கிறது. [10] இருப்பினும், இவர் ஜெய் வக்கீல் என்ற அறக்கட்டளைக்கும் தனது நிதியில் பங்களித்துள்ளார்.[12]

மேற்கோள்கள்[தொகு]

  1. "It's a tight balance for the Supreme Court, says Zia Mody". www.livemint.com. 31 August 2013. பார்க்கப்பட்ட நாள் 30 April 2021.
  2. "RSG India - Law Firm Rankings".
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-03-06. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  4. 4.0 4.1 4.2 Amarnath, Nichinta; Ghosh, Debashish (2005), "A Mind of Intellect", The Voyage To Excellence: The Ascent of 21 Women Leaders of India Inc, Delhi: Pustak Mahal, ISBN 81-223-0904-6
  5. Perkins, Christine (Spring 2006). "Profile: A Passage in India". Harvard Law Bulletin. http://www.law.harvard.edu/alumni/bulletin/2006/spring/cn_02.php. பார்த்த நாள்: 26 May 2012. 
  6. https://www.fortuneindia.com/enterprise/delta-corp-a-pocket-full-of-aces/104587
  7. "Chambers & Partners - Zia Profile". Chambers & Partners. Archived from the original on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2018-06-13.
  8. "Forbes - Power Women". Archived from the original on 2020-05-09. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  9. "Fortune India - Most Powerful Women (2017)". Archived from the original on 2018-06-13. பார்க்கப்பட்ட நாள் 2021-09-04.
  10. 10.0 10.1 Zia Mody. "Zia Mody-My giving is determined by my religion". livemint. பார்க்கப்பட்ட நாள் 8 August 2020.
  11. 11.0 11.1 11.2 11.3 "Who's Who Legal - Zia Mody Profile"."Who's Who Legal - Zia Mody Profile".
  12. "Supporters - Jai Vakeel Foundation".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியா_மோடி&oldid=3554121" இலிருந்து மீள்விக்கப்பட்டது