சிறீகித்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சிறீகித்
தாய்லாந்தின் இராணி
1960இல் இராணி சிறீகித்
தாய்லாந்தின் ஆட்சிப் பொறுப்பாளர்
முடிசூட்டுதல்5 மே 1950
பிறப்பு12 ஆகத்து 1932 (1932-08-12) (அகவை 91)
பதும்வான், பேங்காக், சியாம்
துணைவர்{{பூமிபால் அதுல்யாதெச் (ஒன்பதாம் இராமா) |28 ஏப்ரல் 1950}}
குழந்தைகளின்
பெயர்கள்
உபோல் ரத்தனா
வச்சிரலோங்கோன் (பத்தாம் இராமா)
இளவரசி சிரிந்தோர்ன்
சுலாபோர்ன்
மரபுமகிதோல் (திருமணத்தின் மூலம்)
கிட்டியக்கரா (பிறாப்பின் மூலம்)
(சக்ரி வம்சம்)
தந்தைநக்கத்ரா மங்கலா
தாய்புவா நித்வோங்சு
மதம்தேரவாத பௌத்தம்
கையொப்பம்சிறீகித்'s signature

சிறீகித் (Sirikit) (12 ஆகஸ்ட் 1932 ) தாய்லாந்தின் இராணி தாயாவார். இவர் மன்னர் பூமிபால் அதுல்யாதெச்ச்சின் (ஒம்பதாம் இராமா) மனைவியும், மன்னர் வச்சிரலோங்கோனின் (பத்தாம் இராமா) தாயுமவார். இவர் பாரிஸில் பூமிபாலை சந்தித்தார். அங்கு இவரது தந்தை தாய்லாந்து தூதராக இருந்தார். பூமிபால் முடிசூட்டுவதற்கு சிறிது காலம் முன்பு இவர்கள் 1950இல் திருமணம் செய்து கொண்டனர். சிறிகித் 1956ஆம் ஆண்டில் மன்னர் பௌத்த சமயத் துறவரத்தில் நுழைந்தபோது அரசாட்சி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மூன்று மகள்களும் உள்ளனர். உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த அரச தலைவராக இருந்த இவர், உலகின் மிக நீண்ட காலம் பணியாற்றிய இராணி துணைவியாரும் ஆவார். 21 ஜூலை 2012 அன்று சிறிகித் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். பின்னர் பொது நிகழ்ச்சிகளிலிருந்து விலகினார்.

ஆரம்பகால வாழ்க்கையும் குடும்பமும்[தொகு]

சிறிகித், தனது தாய்வழி தாத்தா வொங்க்சனுபிரபந்த் பிரபு வீட்டில் ஆகஸ்ட் 12, 1932 இல் பிறந்தார். இளவரசர் கித்தியகரா வோரலக்சனா மற்றும் தாய் இலுவாங் புவா இசுனிட்வாங்சு (1909-1999) ஆகியோரின் மகனான இளவரசர் நக்கத்ரா மங்கள கித்தியகராவுக்கு மூத்த மகளும், மூன்றாவது குழந்தையுமாவார். இராணி இராம்பாய் பர்னியால் வழங்கப்பட்ட இவரது பெயரின் அர்த்தம் "கித்தியகராவின் மகத்துவம்" என்பதாகும்.

இவருக்கு இரண்டு மூத்த சகோதரர்களும், ஒரு தங்கையும் என மூன்று உடன்பிறப்புகள் இருந்தனர்:

  • மருத்துவர், இராஜவாங்சே கல்யாணகித் கித்தியகரா, (20 செப்டம்பர் 1929 - 15 மே 1987)
  • இராஜவாங்சே அதுலகித் கித்தியகரா (2 நவம்பர் 1930 - 5 மே 2004)
  • இராஜவாங்சே புஸ்பா கித்தியகரா (பிறப்பு 2 ஆகஸ்ட் 1934)

சிறிகித் பிறந்த பிறகு ஒரு வருடம் தனது தாய்வழி தாத்தா பாட்டிகளால் வளர்க்கப்பட்டார். ஏனெனில் இவரது தந்தை அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள தாய்லாந்து தூதரகத்தின் செயலாளராக பணிபுரிந்தார். இவருக்கு ஒரு வயதாக இருந்தபோது, இவருடைய பெற்றோர் தாய்லாந்துக்குத் திரும்பினர்.பேங்காக்கின் சாவோ பிரேயா ஆற்றின் அருகேயுள்ள தேவ்சு அரண்மனையில் சிறிகித் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.[1][2]

கல்வி[தொகு]

நெதர்லாந்தில் இராணி சிறிகித்

நான்கு வயதில், சிறிகித் ரஜினி பள்ளியில் (சில நேரங்களில் இராணியின் கல்லூரி என்றும் அழைக்கப்படுகிறது) மழலையர் பள்ளியில் தனது ஆரம்பக் கல்வியைப் பயின்றார். அந்த நேரத்தில் பசிபிக் போர் நடைபெற்றது. பேங்காக் மீது பல முறை குண்டு வீசப்பட்டது, குறிப்பாக தொடர் வண்டி பாதைகள், பயணத்தை பாதுகாப்பற்றதாக ஆக்கியது. அதனால் இவர் அரண்மனைக்கு அருகில் இருந்ததால், புனித பிரான்சிஸ் சேவியர் கான்வென்ட் பள்ளிக்குச் சென்றார். அங்கு இவர் தனது இரண்டாம் ஆண்டு முதல் இரண்டாம் நிலை வரை படித்தார்.

1946இல், போர் முடிந்தவுடன், இவருடைய தந்தை புனித யேம்சு நீதிமன்றத்தின் தூதராக ஐக்கிய இராச்சியத்திற்கு சென்றார். அவருடன் தனது குடும்பத்தினரையும் அழைத்துச் சென்றார். அப்போது சிறிகித்துக்கு 13 வயது, மேலும், இடைநிலைக் கல்வியை முடித்திருந்தார். இங்கிலாந்தில் இருந்தபோது இவர் பியானோ வாசிக்க கற்றுக்கொண்டார். மேலும், ஆங்கிலமும், பிரெஞ்சும் சரளமாக பேசினார். இவரது தந்தையின் பணி காரணமாக, குடும்பம் டென்மார்க் , பிரான்ஸ் உள்ளிட்ட பிற நாடுகளுக்கு குடிபெயர்ந்தது. பிரான்சில் இருந்தபோது, இவர் பாரிசில் ஒரு இசை அகாதமியில் படித்தார்.

பிரான்சில், இவர் மன்னர் பூமிபால் அதுல்தெச்சைச் சந்தித்தார். இருவரும் மன்னர் சுலலாங்கொர்னின் (ஐந்தாம் இராமா) வழித்தோன்றல்கள் ஆவர். அந்த நேரத்தில், பூமிபால் சுவிட்சர்லாந்தில் படித்துக் கொண்டிருந்தார். இவர்கள் இருவரும் (மேலும் சில மாணவர்களுடன்) பாரிசிலுள்ள தாய் அரச தூதரகத்தில் தங்கியிருந்தனர்.

திருமணம்[தொகு]

இலூசன்னேவில் அமைதியான 19 ஜூலை 1949 இல் நிச்சயதார்த்தம் நடந்த பின்னர்,[3] மன்னர் முடிசூட்டுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, தம்பதியினர் 28 ஏப்ரல் 1950 இல் திருமணம் செய்து கொண்டனர்.

உடல்நலம்[தொகு]

21 ஜூலை 2012 விடியற்காலையில், அரசர் பூமிபால் அதுல்யதெச் வசிக்கும் சிறீராஜ் மருத்துவமனையில் உடற்பயிற்சி செய்யும் போது, இவருக்கு பக்கவாதம் ஏற்பட்டது.[4] பின்னர், பொது நிகழ்ச்சிகளில் இருந்து விலகி இருந்தார்.[5] 29 பின்னர், இவர் ஓரளவு குணமடைந்ததால் நவம்பர் 2016 அன்று, இவர் மருத்துவமனையிலிருந்து சித்ரலதா அரண்மனைக்கு திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.[6]

மரியாதை[தொகு]

1976ஆம் ஆண்டில், தாய் அரசு இவரது பிறந்த நாளை தேசிய விடுமுறையாக அறிவித்து கௌரவித்தது. இவரது பிறந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12 அன்று கொண்டாடப்படுகிறது.[7]

இதையும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://campus.campus-star.com/variety/52926.html
  2. "สมเด็จพระนางเจ้าสิริกิติ์ฯ - แขกเลี้ยงวัวทำนาย เด็กผู้หญิงคนนี้มีบุญวาสนาเป็นราชินี". 11 August 2018.
  3. Handley, Paul M. (2006). The King Never Smiles: A Biography of Thailand's Bhumibol Adulyadej, pp. 103–4. Yale University Press.
  4. "Statement of the Bureau of the Royal Household, Re: Her Majesty the Queen falls ill at Siriraj Hospital, dated 21 July 2012" (PDF) (in தாய்). Bureau of the Royal Household. 21 July 2012. Archived from the original (PDF) on 3 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 5 December 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Statement of the Bureau of the Royal Household, Re: Her Majesty the Queen falls ill at Siriraj Hospital, No. 12, dated 4 December 2012" (PDF) (in தாய்). Bureau of the Royal Household. 4 December 2012. பார்க்கப்பட்ட நாள் 5 December 2012.[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "แถลงการณ์สำนักพระราชวัง "พระราชินี" พระอาการทั่วไปดีขึ้นมาก เสด็จกลับประทับพระตำหนักจิตรลดาฯ". Matichon Online (in தாய்). Bangkok: Matichon. 2016-11-29. பார்க்கப்பட்ட நாள் 2016-11-29.
  7. Forbes, Andrew (2010). DK Eyewitness Travel Guide: Thailand's Beaches & Islands, p. 35. Dorling Kindersley Limited.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிறீகித்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீகித்&oldid=3871354" இலிருந்து மீள்விக்கப்பட்டது