ஈரோடு மாவட்ட சுற்றுலா தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈரோடு மாவட்ட சுற்றுலா தலங்கள் குறித்த தகவல்கள் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ளன.

1. பவானி கூடுதுறை காவிரி, பவானி, கண்ணுக்குத் தெரியாத அமுத நதி மூன்றும் கூடும் இடம். தென்னகத்தின் "திரிவேணி சங்கமம்". சம்மந்தர் பாடல் பெற்ற கோவில்.

2. பவானி கலெக்டர் மாளிகை 1799 - 1804 ஆண்டுகளில் ஆட்சியர் மேக்ளியாட், வில்லியம் கேரோ தங்கிய பழைய மாளிகை. இது இன்றும் நல்ல நிலையில் உள்ளது. ஆட்சியர் வில்லியம் கேரோ பவானிக் கோயிலுக்கு 11.1.1804 -இல் கொடுத்த தந்தம் போர்த்த கட்டில் பவானி சிவாலயம் அம்மன் பள்ளியறையில் உள்ளது

3. காளிங்கராயன் அணை 1282 - இல் காளிங்கராயன் பவானி காவிரியோடு கலக்கும் இடத்தில் கட்டிய அணை. அணைத்தோப்பு, பவானி அருகில் உள்ளது.

4. பவானிசாகர் அணை உலகின் மிகப்பெரிய மண் அணை. 1954 -இல் கட்டிமுடிக்கப்பட்டது. சத்தியமங்கலத்திற்கு மேற்கே 25 -ஆவது கிலோமீட்டரில் உள்ளது.

5. கொடிவேரி அணை உம்மத்தூர்த் தலைவன் நஞ்சராயன் கட்டிய அணை. அணையில் இருந்து இரு புறமும் கால்வாய்கள் ( அரக்கன்கோட்டை, தடப்பள்ளி ) உள்ளன

6. வெள்ளோடு பெரியகுளத்தில் பறவைகள் சரணாலயம், ஆதிநாதர் சமணக்கோயில் உள்ளது. காளிங்கராயன் சிலை இங்கு அமைக்கப்பட்டுள்ளது

7. ஆப்பக்கூடல் சக்தி நகரில் சக்தி சக்கரை ஆலை; பெரிய ஏரி உள்ளது.

8. ஆழத்துக்கோம்பை இங்கு பண்ணாரியம்மன் சக்கரை ஆலை உள்ளது.

9. தவளகிரி சத்தியமங்கலம் அருகில் உள்ள முருகன் கோவில். விஜயநகரக் காலத் திருப்பணி செய்யப்பட்ட கோவில். சிலப்பதிகாரம் கூறும் வெண்குன்று.

10. பழமங்கலம் பாடல் பொறிக்கப்பட்ட தென்னகத்தின் ஒரே நடுகல் இங்கே உள்ளது.

11. பழையகோட்டை அரண்மனை ; புகழ்பெற்ற காங்கேயம் காளைகள் உள்ள கால்நடைப் பண்ணை உள்ளது.

12. பெரியார் அண்ணா நினைவகம் ஈரோடு நகரில் பெரியார் சாலையில் தந்தை பெரியார் பிறந்த வீட்டில் அரிய புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன

13. தீரன் சின்னமலை நினைவு மண்டபம் ஓடா நிலையில் உள்ளது. அரசு அமைத்த நினைவுச்சின்னம். சின்னமலை கோட்டை இருந்த இடம்.

14. மேலப்பாளையம் தீரன் சின்னமலை பிறந்த ஊர். பெரியவினாயகர் கோவில் உள்ளது .சின்னமலை சமுதாயக்கூடம் உள்ளது.

15. ஈரோடு வ.உ.சி. பூங்கா; கலைமகள் பள்ளி அருங்காட்சியாகம், அரசு அருங்காட்சியகம்; காரைவாய்க்கால் அருகே பெரும்பள்ளம் காளிங்கராயன் பாலம் ( 13 -ஆம் நூற்றாண்டு) மகிமாலீஸ்வரர் கோவில் 10 -ஆம் நூற்றாண்டு சுதைத் திருப்பணி.

16. பிரப் நினைவாலயம் ஈரோட்டில் சி.எஸ்.ஐ. தேவாலயம் கட்டிடக் கலை நயம் மிக்கது.

17. ஷேக் அலாவுதீன் தர்க்கா ஈரோடு காவிரிக்கரையில் உள்ளது. 18 -ஆம் நூற்றாண்டு மைசூர் மன்னர் கல்வெட்டு உள்ளது.

18. திம்பம் இனிய மலைக்காட்சி காணத்தக்கது.

19. இராமலிங்கம் சேனடோரியம் பெருந்துறையில மேற்கே 300 - மீட்டர் உயரம் உள்ள தூய காற்றோட்டம் உள்ள இடத்தில்; ' இராமலிங்கம் காசநோய் மருத்துவமனை' உள்ளது. 1933 - ஆம் ஆண்டு கவர்னர் ஜெனரல் வெலிங்கடன் பிரபு காசநோய் ஒழிப்பு அவசியம் பற்றி மிகவும் வலியுறுத்தினார். தனி மருத்துவ மனைகள் தொடங்குமாறு கூறினார். கோவை மாவட்ட ஆட்சியர் ஏ.சி.வுட் ஹவுஸ் அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க துவங்கினார் 1935 - ம் ஆண்டு கோயமுத்தூர் மாவட்ட காசநோய் மருத்துவக் குழு என்ற குழுவை மாவட்ட ஆட்சியர் அமைத்தார். அப்போது கொண்டாடப்பட்ட ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் முடிசூடிய வெள்ளி விழா நிதி 60 ஆயிரம் இருந்தது. குழுவில் இருந்த பலர் நிதி உதவியுடன், சில பகுதிகளையும் கட்டித்தருவதாக வாக்களித்தனர். சென்னை மாநில அரசு, இந்தியத்தேயிலைக் குழு, அஞ்சல் துறை, டாட்டா எண்ணெய்த் தொழிற்சாலை தேயிலை - காப்பித்தோட்ட அதிபர்கள், நகராட்சிகள் ஆகியவும் நிதியுதவி செய்தனர். மருத்துவமனைக்குரிய ஆணைகளை அரசு 13/8/1936; 22/11/1937 - ல் பிறப்பித்தது. மருத்துவமனை உருவானது.

20. கொடுமணல் ஒரத்துப்பாளையம் அணை; தொல்பொருள் அகழாய்வு செய்யப்பட்ட இடம்

21. அரச்சலூர் சமணமுனிவர்கள் வாழ்ந்த குகை. இசைக்கல்வெட்டு உள்ளது. 1800 - ஆண்டுகட்கு முற்பட்டது

22. கோபி புகழ்பெற்ற சீதா கல்யாணமண்டபம் ஒரே சமயத்தில் 5 - திருமணங்கள் நடைபெறலாம் ( இலவசம் )

23. தாளவாடி திப்பு சுல்தான் கட்டிய பள்ளிவாசல் உள்ளது