பொது மூலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உயிர்ப் பொது மூலம்

இரு உயிரினங்களுக்குப், புவியின் வாழ்க்கை வரலாற்றின் ஏதாவது ஒரு கட்டத்தில் பொதுவான முன்னோடி இருந்தால், அவ்வுயிரினங்களுக்கான பொது மூலம் அம்முன்னோடியாகும். எடுத்துக்காட்டாக, பூனை, புலி, சிங்கம், சிறுத்தை எனும் பூனை-இனத்தைச் சேர்ந்த அனைத்து இனங்களுக்கான முன்னோடி, 10.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ஓர் உயிரினமாகும்.[1] இங்கு முன்னோடி எனக் குறிப்பிடப்படும் உயிரினம், தனிப்பட்ட ஒரு உயிரினமாகவோ, அல்லது பல்வேறு உயிரினங்களின் ஒன்றுசேர்ந்த உயிரணுக்குழுவாகவோ இருக்கும்.

படிவளர்ச்சிக் கொள்கையின் கூற்றுப்படி புவியிலுள்ள பல்வகையான அனைத்து உயிரினங்களும் ஒரே மூலத்திலிருந்து தோன்றின. இக்கோட்பாட்டுக்கு உயிர்ப் பொது மூலம் என்று பெயர்.

உயிர்ப் பொது மூலத்திற்கான சான்று[தொகு]

  • இரசாயனச் சான்று

இதுவரை தெரிந்த அனைத்து உயிரினங்களுமே டி.என்.ஏ. மற்றும் ஆர்.என்.ஏ எனும் மரபணுமூலக்கூறுகளால் மட்டுமே அமையப்பட்டிருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. O'Brien SJ, Johnson WE (2005). "Big cat genomics". Annu Rev Genomics Hum Genet 6: 407–29. doi:10.1146/annurev.genom.6.080604.162151. பப்மெட்:16124868. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொது_மூலம்&oldid=2914455" இலிருந்து மீள்விக்கப்பட்டது