விரல் ஏரிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செயற்கைக்கோள் படப்பிடிப்பு. மேலே ஒண்டாரியோ ஏரி, மேல் வடதில் ஒனீடா ஏரி,ஒனீடாவிற்கு நேர் கீழே கசநோவியா ஏரி.
பிங்கர் லேக்சு வட்டார நிலப்படம்

விரல் ஏரிகள் (பிங்கர் லேக்சு,Finger Lakes) அமெரிக்காவின் நியூ யோர்க் மாநிலத்தின் பிங்கர் லேக்சு வட்டாரம் எனப்படும் பகுதியில் வடக்கு-தெற்காக அமைந்துள்ள ஏழு நீண்ட, குறுகலான ஏரிகள்.

புவியியல் பெயராக விரல் ஏரி மீயாழமிக்க பனிபடர்ந்த பள்ளத்தாக்கில் உள்ள நீண்ட, குறுகலான ஏரியைக் குறிக்கும்; ஆனால் ஓரிடத்தின் பெயராக பிங்கர் லேக்சு 19வது நூற்றாண்டிலிருந்து குறிப்பிடப்படுகிறது.[1][2] கயுகா, செனெகா ஏரிகள் ஐக்கிய அமெரிக்க நாட்டிலுள்ள மீயாழமிக்க ஏரிகளாகும்; இவை முறையே 435 அடிகள் (133 m), 618 அடிகள் (188 m) ஆழமானவை. இவற்றின் அடிப்பகுதிகள் கடல்மட்டத்தையும் விட தாழ்வானவை. இவைகளில் எந்தவொரு ஏரியின் அகலமும் 3.5 மைல்கள் (5.6 km) கூடுதலாக இல்லை. இவற்றில் பரப்பளவில் மிகப் பெரியதான செனெகா ஏரி 38.1 மைல்கள் (61.3 km) நீளமும், 66.9 சதுர மைல்கள் (173 km2) பரப்பளவும் கொண்டுள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Mullins, H.T., Hinchey, E.J., Wellner, R.W., Stephens, D.B., Anderson, W.T., Dwyer, T.R. and Hine, A.C., 1996. Seismic stratigraphy of the Finger Lakes: a continental record of Heinrich event H-1 and Laurentide ice sheet instability. Geological Society of America Special Paper 311, pp.1-36 ISBN 9780813723112
  2. Kozlowski, A. L., and Graham, B. L., eds., 2014, Glacial geology of Cayuga County of the Eastern Finger Lakes–lakes, lore and landforms: Guidebook for the 77th Annual Reunion of the Northeastern Friends of the Pleistocene Meeting, Auburn, New York, 140 p.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விரல்_ஏரிகள்&oldid=3260029" இலிருந்து மீள்விக்கப்பட்டது