பிரியங்கா ஜவால்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரியங்கா ஜவால்கர்
2018இல் பிரியங்கா
பிறப்பு12 நவம்பர் 1992
அனந்தபூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவன, ஐதராபாத்து
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2017—present

பிரியங்கா ஜவால்கர் (Priyanka Jawalkar) (பிறப்பு 12 நவம்பர் 1992) ஓர் இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். குறிப்பாக இவர் தெலுங்கு மொழி படங்களில் பணியாற்றுகிறார். 2017ஆம் ஆண்டு வெளியான காலா வரம் ஆயே[1] படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், டாக்ஸிவாலா[2], திம்மருசு[3], எஸ்ஆர் கல்யாணமண்டபம்[4] போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ஆரம்ப வாழ்க்கையும் தொழிலும்[தொகு]

பிரியங்கா , 12 நவம்பர் 1992இல்[5][6] ஆந்திராவின் அனந்தபூரில் ஓர் மராத்தி பேசும் குடும்பத்தில் பிறந்தார்.[7] கணினி அறிவியல் பட்டதாயான இவர், ஐதராபாத்து, தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனத்தில் வடிவமைப்பு தொடர்பான சான்றிதழ் பட்டம் பெற்றுள்ளார்.[8] தனது புகைப்படங்களில் சிலவற்றை சமூக ஊடகங்களில் பதிவேற்றிய பிறகு திரைப் படங்களுக்காக அணுகப்பட்டார்.[9] 2017 ஆம் ஆண்டு சம்பத் வி.குமார் இயக்கிய தெலுங்கு மொழித் திரைப்படமான காலா வரம் ஆயே என்ற படத்தில் அறிமுகமானார். நவம்பர் 2018இல், இவரது இரண்டாவது படமான டாக்ஸிவாலா வெளியிடப்பட்டது. இது ராகுல் சங்க்ரித்யன் என்பவர் இயக்கியிருந்தார்.[10] இவரது நடிப்பில் 2021இல் இரண்டு படங்கள் வெளிவர உள்ளன.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kala Varam Aaye Movie: Showtimes, Review, Trailer, Posters, News & Videos | eTimes, பார்க்கப்பட்ட நாள் 2020-06-21
  2. Taxiwala Review {3/5}: Taxiwaala entertains in parts but is let down by an unconvincing climax, பார்க்கப்பட்ட நாள் 2020-06-21
  3. Dundoo, Sangeetha Devi (30 July 2021). "'Thimmarusu' movie review: Satya Dev sparkles in this legal thriller" – via www.thehindu.com.
  4. "SR Kalyana Mandapam Movie Review: An antiquated tale stuck in time" – via timesofindia.indiatimes.com.
  5. "Epitome of grace and elegance in embroidered lehenga and backless choli". The Times of India. 2020-11-12.{{cite web}}: CS1 maint: url-status (link)
  6. "Script is always my first preference, says actress Priyanka Jawalkar". The Times of India. 10 August 2021.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. Chowdhary, Y. Sunita (2018-03-01). "Priyanka Jawalkar on 'Taxiwala'" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/priyanka-jawalkar-on-taxiwala/article22892322.ece. 
  8. Pasupuleti, AuthorPriyanka. "Priyanka Jawalkar shares about being a celebrity". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.
  9. Pasupuleti, AuthorPriyanka. "Priyanka Jawalkar shares about being a celebrity". Telangana Today (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.
  10. "It's not easy for non-Telugu actors to survive in Tollywood: Taxiwaala star Priyanka Jawalkar". The Indian Express (in Indian English). 2018-11-15. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  11. Adivi, Sashidhar (2020-03-23). "Discovering her calling in acting". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-06-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரியங்கா_ஜவால்கர்&oldid=3859727" இலிருந்து மீள்விக்கப்பட்டது