இராமகங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராமகங்கை மேற்கு
மொரதாபாத் அருகே இராமகங்கை
அமைவு
Countryஇந்தியா
மாநிலம்உத்தராகண்டம், உத்தரப்பிரதேசம்
மண்டலம்வட இந்தியா
சிறப்புக்கூறுகள்
மூலம்துத்காத்தோலி
 ⁃ அமைவுதுத்காத்தோலி சரகம், பெளரி கர்வால் மாவட்டம், உத்தராகண்டம், இந்தியா
முகத்துவாரம்கங்கை
 ⁃ அமைவு
உத்தரப்பிரதேசத்தில் இப்ராகிம்பூர் அருகில்
 ⁃ உயர ஏற்றம்
130 m (430 அடி)
நீளம்596 km (370 mi)
வடிநில அளவு30,641 km2 (11,831 sq mi)
வெளியேற்றம் 
 ⁃ அமைவு27°10′41″N 79°50′39″E / 27.177996°N 79.844112°E / 27.177996; 79.844112
 ⁃ சராசரி900 m3/s (32,000 cu ft/s)[1]

இராமகங்கை (Ramganga) என்பது கங்கை ஆற்றின் துணை ஆறாகும். இது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உருவாகிறது.

இராமகங்கை மேற்கு[தொகு]

இராமகங்கை மேற்கு ஆறு துததோலி அல்லது தூததோலி எல்லைகளிலிருந்து உருவாகிறது

ஆற்றோட்டம்[தொகு]

இராமகங்கை ஆறு இந்திய மாநிலமான உத்தராகண்டம் மாநிலத்தின் பாரி கர்வால் மாவட்டத்தில் உள்ள துததோலி மலையின் தெற்கு சரிவுகளில் உருவாகிறது. "தீபாவளி கல்" என்று அழைக்கப்படும் இந்த நதியின் மூலமானது கெய்செய்ன் தெஹ்சில் (30°05′00″N 79°18′00″E / 30.08333°N 79.30000°E / 30.08333; 79.30000) அமைந்துள்ளது.[2] இந்த ஆறு கெய்சைன் நகரத்தின் வழியே பாய்கிறது, இருப்பினும் இந்த நகரம் நதியை விட மிக உயரத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறு அல்மோரா மாவட்டத்தில் குமாவோனின் நுழைந்து ஆழமான குறுகிய சகுதியா தெகசில் உள்ளே செல்கிறது.[3] அங்கிருந்து வெளியேறி, தென்மேற்காக திரும்பி தடகட்டல் நதியுடன் இணைந்து அக்ணடு, உலோகபகாரியின் தென்கிழக்கு எல்லை பாய்ந்து, அதே திசையில் ஞானை அடைந்து, துணாகிரியிலிருந்து இடது புறமாக வரும் காரோகாடுடன் இணைகிறது. வலது புறத்தில் பாண்ட்ணாகால் வருகிறது.

கணாயிலிருந்து வெளியே வந்து, தல்லா கிவார் பகுதியை நோக்கிப் பாய்கிறது. இப்பகுதியில் ஆற்றின் குறுக்கே மற்றும் சுற்றியுள்ள வண்டல் நிலங்களைக் கொண்ட திறந்த பள்ளத்தாக்கு உள்ளது. இங்கு ஆற்றின் நீரைப்பயன்படுத்திப் பரவலாகப் பயிரிடப்பட்டு பாசனம் செய்யப்படுகிறது. மாசி பகுதிக்குப் பிறகு, இந்தப் பள்ளத்தாக்கு ஓரளவு அளவி சுருங்கி, சில வளமான சமவெளிகளுடன் பிரித்தாகேதர் கோவில் வரை காணப்படுகின்றது. இங்கே இது சவுக்கோட்டில் இருந்து உருவான வினோத் நதியுடன் இணைகிறது. மேலும் இந்த இடத்திலிருந்து ஆற்றின் ஓட்டம் தெற்கு நோக்கித் திரும்புகிறது. வளமான மண்ணும் பாறைகளும் நிறைந்த மலைகளை ஆற்றின் இருபுறமும் இப்பகுதியில் காணலாம். மாசியிலிருந்து பதினொரு மைல் தொலைவில், பிகியாசைனை அடைந்து, கிழக்கிலிருந்து காகசையும் தெற்கிலிருந்து நவுர்காட்டையும் பெறுகிறது. இங்கே பள்ளத்தாக்கு மீண்டும் விரிவடைகிறது. நீர்ப்பாசனம் முக்கியமாக சிறிய நீரோடைகளைப் பொறுத்து அமைகின்றது. பிகியாசெயினிலிருந்து நதி மேற்கு நோக்கி ஒரு கூர்மையான திருப்பத்தை எடுத்து உப்பு மற்றும் ஆணி நதியுடன் கர்வாலில் சேர்கிறது. மார்ச்சுலா பாலத்திற்குப் பிறகு ஓரளவிற்கு அல்மோரா மற்றும் பரிகர்வால் மாவட்டங்களின் எல்லையை உருவாக்குகிறது. பின்னர் இந்த நதி பாபருக்குள் நுழைந்து மேற்கு நோக்கி பட்லி துன்னிலிருந்து ஜிம் கார்பெட் தேசிய பூங்காவினுள் செல்கிறது.[4]

ஏற்கனவே ஒரு பெரிய நதியாக இருக்கும் இராமகங்கை, உத்தரப்பிரதேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள கலகர் என்ற சமவெளியில் நுழைகிறது. இங்கு நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின் உற்பத்தி நோக்கத்திற்காக ஆற்றில் அணை கட்டப்பட்டுள்ளது. இங்கிருந்து சுமார் 15 மைல் தொலைவில் இது கோவுடன் இணைகிறது. அதன் பின்னர் மொராதாபாத் மாவட்டத்திற்குள் நுழைகிறது. இங்கு வண்டல் தாழ்வான பகுதிகளில் தென்கிழக்கு திசையில் மிக வேகமாகப் பாய்கிறது. மேலும் தாகூத்வாரா மற்றும் காந்த் தெகசில்களுக்கு இடையிலான எல்லையை உருவாக்குகிறது. இராமகங்கை மொராதாபாத்தில் பல துணை நதிகளைப் பெறுகிறது, இவை அனைத்தும் இதன் இடது கரையில் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை தரை நீரோடைகள் தெற்கு அல்லது தென்மேற்கு நோக்கிப் பாய்கின்றன. இவற்றில் முதன்மையானது குமாவோன் மலைகளிலிருந்து தோன்றி சுர்ஜன்னகருக்கு அருகிலுள்ள இராமகங்கைவில் சேரும் பிகா ஆகும். தாகூத்வாராவின் வடமேற்கு பகுதியை வடிகட்டிய காலியா நீரோடை, தவுலத்பூர் டைக்ரியில் இராமகங்கைவில் இணைகிறது. தேலா நதியுடன் இணைந்தபின், இராமகங்கை அதன் வலது கரையில் அமைந்துள்ள மொராதாபாத் நகரத்தின் வழியாகப் பாய்ந்து தல்பட்பூருக்கு அருகிலுள்ள ராஜேரா ஆற்றுடன் இணைகிறது. இந்த நதி இராம்பூர் மாவட்டத்தை நோக்கி மேலும் தொடர்கிறது, அங்கு சாகாபாத் தெகசில் சாம்ரவில் அருகே கோசி ஆற்றுடன் இணைகிறது. இது மொராதாபாத்தின் அதே திசையுடனும் வலுவான நீரோட்டங்களுடனும் இராம்பூரைக் கடந்து பரேலி மாவட்டத்தை அடைகிறது.

பரேலியில் இராமகங்கை

இராமகங்கை பரேலி மாவட்டத்தின் வழியாகத் தென்கிழக்கு திசையில் பாய்கிறது. இதனுடன் பக்ரா மற்று கிச்சாவின் (பைகுல்) ஒருங்கிணைந்த ஓடை இடது புறமாக இணைகிறது. வலது புறத்தில் ககன் நதி இணைகிறது. பின்னர் 10 கி.மீ. தூரமுள்ள பரேலி நகரினை அடைகிறது. இங்கு இதன் இடது பக்கத்தில் தியோரனியன் மற்றும் நகாதியா நதிகள் இணைகிறது. இரண்டு நதிகளும் பரேலி வழியாகப் பாய்கின்றன. செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் பரேலிக்கு அருகிலுள்ள சவுபாரி கிராமத்தில் கங்கா தசரா தினத்தில் ஆற்றின் கரையில் ஆண்டு கண்காட்சி நடத்தப்படுகிறது. பதாயூன் மற்றும் ஷாஜகான்பூரிலிருந்து மற்றும் ஹர்தோய் மாவட்டம் வழியாகப் பாய்ந்து, இறுதியாகக் கங்கை ஆற்றில் கன்னோசிக்கு எதிரில் இணைகிறது. இந்த ஆற்றின் மொத்த தூரம் 373 மைல் ஆகும்.

படங்கள்[தொகு]

இராமகங்கை கிழக்கு[தொகு]

இராமகங்கை கிழக்கு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஇமயமலை- நமிக் பனிப்பாறை, பிதௌரகட் மாவட்டம்
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
காளி ஆறு உத்தரப்பிரதேசம்

இராமகங்கை கிழக்கு என்று அழைக்கப்படும் மற்றொரு இராமகங்கை உத்தராகண்டம் மாநிலத்தின் பித்தோராகர் மாவட்டத்தில் உள்ள நமிக் பனிப்பாறையிலிருந்து உருவாகி தென்கிழக்கு நோக்கிப் பாய்கிறது.[5][6] இந்த நதி ஏராளமான சிறிய மற்றும் பெரிய ஆறுகளுடன் சேர்ந்து, இறுதியாக பித்தோராகர் காட் அருகே இராமேசுவரில் சர்ஜு நதியுடன் இணைகிறது.[5] சர்ஜு மகாளிகாளி (ஷர்தா) ஆறுடன் இணைகின்றது.[சான்று தேவை]

மேற்கோள்கள்[தொகு]

  1. Jain, Agarwal & Singh 2007, ப. 341.
  2. Bisht, Brijmohan (2015-12-15). "Ramganga River Uttarakhand - From Dudhatoli ranges to Corbett, Ramnagar in Nainital". www.euttaranchal.com. பார்க்கப்பட்ட நாள் 2021-07-23.
  3. http://www.cwc.gov.in/ugbo/gangabasin/ramganga
  4. http://cganga.org/wp-content/uploads/sites/3/2018/11/035_ENB_RAMGANGA.pdf
  5. 5.0 5.1 Negi, Sharad Singh (in en). Himalayan Rivers, Lakes, and Glaciers. https://books.google.com/books?id=5YtUShKY8zcC. பார்த்த நாள்: 9 November 2016. 
  6. Rawat, Ajay Singh (in en). Forest Management in Kumaon Himalaya: Struggle of the Marginalised People. https://books.google.com/books?id=OeQy9ZuvA5sC. பார்த்த நாள்: 9 November 2016. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராமகங்கை&oldid=3202498" இலிருந்து மீள்விக்கப்பட்டது