கங்கி நதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கங்கி நதி (Gangi) இந்தியாவில் ஓடும் ஒரு வற்றாத நதியாகும். கங்கை ஆற்றின் உபநதியான இது பீகார் மாநிலத்தின் போச்பூர் மாவட்டத்திலுள்ள அர்ரா நகருக்கு அருகில் பாய்கிறது. அர்ராவிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ள கேசவ்பூரில் உருவாகி மீண்டும் பக்சர் மாவட்டத்தில் கங்கி நதி கங்கையை சந்திக்கிறது.[1][2][3][4]

வரலாறு[தொகு]

கங்கி நதி கங்கை ஆற்றின் பண்டைய நீரோடை என்று நம்பப்படுகிறது.[5][6] கங்கை ஆறு மாசார் கிராமத்திலிருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்ததாக ஊயென் சாங் தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.முந்தைய கங்கை ஆறு தெற்கில் வேகமாகப் பாய்கிறது என்பதை இவரது கருத்து குறிக்கிறது. இது கங்கி நதியின் தற்போதைய பாதையாகும்.[7] பழைய நதி படுகையின் உயர்ந்த கரையை போச்பூர் மற்றும் பக்சரில் காணலாம்.

நதியின் பாதை[தொகு]

கங்கி நதி போச்பூர் மாவட்டத்தின் பரகராவில் உள்ள கங்காவின் பிரதான நீரோட்டத்திலிருந்து உருவாகிறது. பின்னர் அர்ரா நகரத்தின் வடகிழக்கு பகுதியிலிருந்து தெற்கு-மேற்கு பகுதிக்கு பாய்ந்து மீண்டும் பக்சரில் கங்கையை சந்திக்கிறது. [8] ராம்சரா சந்தர் சுர் அருகே அரா கால்வாய் அதில் விழுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Imam, Saiyyad Rahat. "A study on water quality of river Gangi at Ara town". Asian Journal of Environmental Science. 
  2. Khan, Tajuddin Ahmed (1999). Social Structure of Migrant Population. Rajesh Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8185891214. 
  3. Archaeological Survey of India Reports, Volume 3. Office of the Superintendent of Government Printing. 1873. 
  4. Mithileshwar (2015). Jaag Chet Kuchh Karou Upai. Vani Prakashan. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9350729237. 
  5. Bihāra kī nadiyām̐, Volume 1. Bihāra Hindī Grantha Akādamī. 1977. 
  6. Cunningham, Alexander. Cunningham Report: Report for the year 1871-72. 
  7. Bihar District Gazetteer: Shahabad. Patna: Secretariat Press. 1966. பக். 14. https://archive.org/details/dli.ministry.10269. 
  8. The Imperial Gazetteer of India: Pushkar to Salween. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கங்கி_நதி&oldid=3582708" இலிருந்து மீள்விக்கப்பட்டது