இரிவா கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிராந்தியத்தின் பழைய வரைபடம் (இடுகை 1805). இரிவா கோட்டை வடக்கே காட்டப்பட்டுள்ளது.

இரிவா கோட்டை (Riwa Fort) இந்தியாவின் மகாராட்டிர மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கோட்டையாகும். மத்திய மும்பையில் மிதி ஆற்றின் கரையில் உள்ள இக்கோட்டை உள்ளுரில் காலா கில்லா என்றும் கருப்புக் கோட்டை என்றும் வேறு பெயர்களால்  அழைக்கப்படுகிறது.தாராவியின் சேரிகளுக்கு மத்தியில் இரிவா கோட்டை தற்போது பாழடைந்த நிலையில் உள்ளது. பம்பாயின் முதல் ஆளுநர் இயெரால்ட் ஆங்கியர் (1669-1677) என்பவரால் இரிவா கோட்டை கட்டப்பட்டது. பெரிய பம்பாய் கோட்டையின் ஒரு பகுதியாக கோட்டை இருந்தது. மேலும் 17 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிசு ஆட்சியாளர்களின் வசம் இருந்த பம்பாயின் வடக்கு பகுதியை  இக்கோட்டை அடையாளப்படுத்தியது. அரண்மனையாகவும் ஒரு காவற்கோபுரமாகவும் பயன்படுத்தப்பட்ட இக்கோட்டை போர்த்துகீசியர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சல்செட்டு தீவுக்கு எதிராக பிரதேசத்தை பாதுகாத்தது. பிற்காலத்தில் சல்செட்டு தீவு மராத்தியர் கட்டுப்பாட்டிலும் இருந்தது.

இரிவா கோட்டை மகாராட்டிரா தொல்பொருள் மற்றும் அருங்காட்சியக இயக்குநரகத்தின் அதிகாரத்தின் கீழ் வருகிறது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. Patel, Pooja (17 August 2015). "Guarding the erstwhile Bombay". DNA. https://www.dnaindia.com/mumbai/report-guarding-the-erstwhile-bombay-2115285. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிவா_கோட்டை&oldid=3199636" இலிருந்து மீள்விக்கப்பட்டது