பல்லார்பூர் கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பல்லார்பூர் கோட்டை
Ballarpur Fort
சந்திரபூர் மாவட்டம், மகாராட்டிரம்
பல்லார்பூர் கோட்டை Ballarpur Fort is located in மகாராட்டிரம்
பல்லார்பூர் கோட்டை Ballarpur Fort
பல்லார்பூர் கோட்டை
Ballarpur Fort
பல்லார்பூர் கோட்டை Ballarpur Fort is located in இந்தியா
பல்லார்பூர் கோட்டை Ballarpur Fort
பல்லார்பூர் கோட்டை
Ballarpur Fort
ஆள்கூறுகள் 19°51′03.01″N 79°20′30.75″E / 19.8508361°N 79.3418750°E / 19.8508361; 79.3418750
வகை நிலக்கோட்டை
இடத் தகவல்
உரிமையாளர் இந்திய அரசு
மக்கள்
அநுமதி
ஆம்
நிலைமை இடிபாடுகள்
இட வரலாறு
கட்டிடப்
பொருள்
கல்

பல்லார்பூர் கோட்டை (Ballarpur Fort) இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் சந்திரப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு பழங்கால கோட்டையாகும். முன்னதாக இது பல்லார்சா கோட்டை என்று அழைக்கப்பட்டது. பல்லார்பூர் கோட்டை வர்தா நதியின் கிழக்குக் கரையில் உள்ள பல்லார்பூர் நகரில் அமைந்துள்ளது.

வரலாறு[தொகு]

பல்லார்பூர் கோட்டை கோண்டுவானா மன்னரான காண்டகியா பல்லால் சா (1437-62) என்பவரால் நிறுவப்பட்டது. இவர் தனது தந்தையான செர் சாவின் சிம்மாசனத்தில் அவரைத் தொடர்ந்து மன்னரானார். சந்திரபூர் நகரத்தின் நிறுவனரும் இவரேயாவார். அதிசய நீரைக் கொண்ட ஒரு குளத்தை இம்மன்னர் கண்டுபிடித்தார். அந்நீர் இவரது காயங்களையும் கட்டிகளையும் குணப்படுத்தியது. குளத்திற்கு அகலேசுவர் தீர்த்தம் என்று பெயரிடப்பட்டது. இந்த நகரம் கோட்டையைச் சுற்றி பல்லார்பூர் அல்லது பல்லால் நகரமாக வளர்ந்தது. பல ஆண்டுகளாக பல்லார்பூர் இராச்சியத்தின் இடமாகவும் இருந்தது. சந்திரபூர் நகரம் பின்னர்தான் நிறுவப்பட்டது. கடைசி கோண்டுவானா மன்னர் நீல்காந்தா சா பல்லார்பூரில் சிறையில் இறந்தார்.

சிறப்பம்சங்கள்[தொகு]

கோட்டை பெரிய கருப்பு கற்களால் கட்டப்பட்டு அதன் காலத்தில் ஒரு வலிமையான பாதுகாப்பிடமாக இருந்தது. செவ்வக வடிவத்தில் பிரதான நுழைவாயில் கிழக்கு பக்கமாக அமைந்துள்ளது. வர்தாவின் கிழக்குக் கரையில் கட்டப்பட்ட இந்நிலக் கோட்டை சுவர்கள் மற்றும் கோபுரங்களைக் கொண்ட வகை கோட்டையாகும். ஒன்றுக்கொன்று வலது கோணத்தில் அமைந்துள்ளவாறு இரண்டு கதவுகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் விளிம்பில் ஒரு சிறிய நுழைவாயிலும் உள்ளது. கோட்டையின் சுவர்கள் இன்னும் அப்படியே உள்ளன. ஆனால் பழைய கட்டிடங்கள் அனைத்தும் மொத்த இடிபாடுகளில் சிக்கியுள்ளன. கோட்டைத் தூணின் பல பகுதிகள் பூமிக்குள் இன்னும் பாதுகாப்பாக உள்ளன. கோட்டை சுவர்களில் கண்டுபிடிக்கப்படாத சுரங்கங்கள் உள்ளன. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Gazetteers Department - Chandrapur". Cultural.maharashtra.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2019-10-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பல்லார்பூர்_கோட்டை&oldid=3195616" இலிருந்து மீள்விக்கப்பட்டது