ஸ்பின் போல்டாக்

ஆள்கூறுகள்: 31°0′29″N 66°23′53″E / 31.00806°N 66.39806°E / 31.00806; 66.39806
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஸ்பின் போல்டாக்
பஷ்தூ: سپین بولدک
ஸ்பின் போல்டாக் எல்லைச்சாவடியை நோக்கிக் கடக்கும் வாகனங்கள்
ஸ்பின் போல்டாக் எல்லைச்சாவடியை நோக்கிக் கடக்கும் வாகனங்கள்
ஸ்பின் போல்டாக் is located in ஆப்கானித்தான்
ஸ்பின் போல்டாக்
ஸ்பின் போல்டாக்
ஆப்கானிஸ்தானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°0′29″N 66°23′53″E / 31.00806°N 66.39806°E / 31.00806; 66.39806
நாடு ஆப்கானித்தான்
மாகாணம்கந்தகார்
மாவட்டம்ஸ்பின் போல்டாக்
ஏற்றம்4,009 ft (1,222 m)
மக்கள்தொகை
 • இனக்குழுக்கல்நூர்சாய் மக்கள், பஷ்தூன் மக்கள்
 • சமயம்இசுலாம்
நேர வலயம்UTC+4:30

ஸ்பின் போல்டாக் (Spin Boldak (ஆங்கில மொழி: வெள்ளைப் பாலைவனம்) ஆப்கானித்தான் நாட்டின் தென்கிழக்கில் உள்ள கந்தகார் மாகாணத்தில் உள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது ஆப்கானித்தான்-பாகிஸ்தான் நாடுகளின் எல்லைப்புறத்தில் அமைந்துள்ளது. ஸ்பின் போல்டாக் நகரம், வடக்கில் உள்ள காந்தாரம் மற்றும் பாகிஸ்தானின் தெற்குகில் உள்ள சாமன் மற்றும் குவெட்டா நகரங்களுடன் நெடுஞ்சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. ஸ்பின் போல்டாக் நகரம் ஆப்கானித்தானையும், பாகிஸ்தானையும் இணைக்கும் பெரும் வணிகப்பாதை நகரமாகும். ஸ்பின் போல்டாக் நகரத்திற்கு மிக அருகில் உள்ள சாமன் நகரம் 10 கிமீ தொலைவில் பாகிஸ்தானில் உள்ளது. இந்நகரம் கடல் மட்டத்திலிருந்து 4,009 அடி (1,222 மீட்டர்) உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.

இந்நகரத்தில் நூர்சாய் மக்கள் மற்றும் பஷ்தூன் மக்கள் நிரம்பியுள்ளனர்[1]

ஸ்பின் போல்டாக் நகரம் கந்தகார் மற்றும் குவெட்டா நகரங்களிலிருந்து 50 nmi (93 km) தொலைவில் உள்ளது.[2]தாலிபான்கள் சூலை 2021-இல் ஸ்பின் போல்டாக் நகரத்தைக் கைப்பற்றி கொடியேற்றினர்.[3]

தட்ப வெப்பம்[தொகு]

ஸ்பின் போல்டாக் நகரத்தின் சராசரி வெப்பம் 19.7 °C மற்றும் சராசரி மழைப் பொழிவு 217 mm ஆகும். ஆண்டின் சூலை மாதத்தில் அதிகப்படியான வெப்பம் 31.8 °C வரை இருக்கும். குளிர்காலமான சனவரியில் வெப்பம் 6.9 °C வரை இருக்கும்.

தட்பவெப்ப நிலைத் தகவல், ஸ்பின் போல்டாக்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 13.9
(57)
16.7
(62.1)
22.1
(71.8)
28.1
(82.6)
34.6
(94.3)
39.5
(103.1)
40.2
(104.4)
39.1
(102.4)
35.8
(96.4)
29.9
(85.8)
22.8
(73)
17.5
(63.5)
28.35
(83.03)
தினசரி சராசரி °C (°F) 6.9
(44.4)
9.7
(49.5)
14.6
(58.3)
20.2
(68.4)
25.4
(77.7)
29.8
(85.6)
31.8
(89.2)
30.1
(86.2)
25.5
(77.9)
19.6
(67.3)
13.5
(56.3)
9.2
(48.6)
19.69
(67.45)
தாழ் சராசரி °C (°F) 0.0
(32)
2.8
(37)
7.2
(45)
12.3
(54.1)
16.3
(61.3)
20.2
(68.4)
23.4
(74.1)
21.2
(70.2)
15.3
(59.5)
9.4
(48.9)
4.2
(39.6)
0.9
(33.6)
11.1
(51.98)
ஆதாரம்: Climate-Data.org[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "The Master of Spin Boldak: Undercover with Afghanistan’s drug-trafficking border police" பரணிடப்பட்டது 2021-08-19 at the வந்தவழி இயந்திரம் by Matthieu Aikins, Harper's Magazine, December, 2009, p. 54. Retrieved 2010-04-20.
  2. இந்நகரத்தை ஒட்டி தாலிபான் தீவிரவாதிகளின் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் அமைந்துள்ளது.Falling Rain Map of Spin Buldak. Retrieved 2010-04-20.
  3. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லையில் தங்கள் கொடியை ஏற்றிய தாலிபன்கள்
  4. "Climate: Spin Boldak - Climate-Data.org". பார்க்கப்பட்ட நாள் 9 September 2016.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பின்_போல்டாக்&oldid=3578889" இலிருந்து மீள்விக்கப்பட்டது