ஜெயசிறீ பர்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜெயசிறீ பர்மன் (Jayasri Burman) (பிறப்பு 1960 கொல்கத்தா ) ஓர் சமகால இந்திய கலைஞராவார். சாந்திநிகேதனிலுள்ள கலா பவனிலும், கொல்கத்தாவின் அரசு கலை மற்றும் கைவினைக் கல்லூரியிலும் படித்தார். அங்கு ஓவியத்தில் முதுகலை முடித்தார்.[1] [2] இவர் பாரிஸ் சென்று மான்சியூர் சீசெர்சியின் கீழ் அச்சு தயாரிப்பைக் கற்றார்.

இவர் புகழ்பெற்ற கலைஞர்களின் வழிவந்த குடும்பத்தில் உறுப்பினராக உள்ளார். ஒரு கலைஞரான இவரது கணவர் பரேஷ் மைத்தி [[புது தில்லி|புது தில்லியில் வசித்து வருகிறார்.[3] இவரது மாமா சக்தி பர்மன் [4] ஓர் இந்திய கலைஞர்; இவரது உறவினர் மாயா பர்மனும் ஒரு கலைஞராக இருக்கிறார். 2005ஆம் ஆண்டில், இந்த கலைஞர்கள் அனைவரையும் உள்ளடக்கிய "தி ஃபேமிலி" என்ற கண்காட்சியை உருவாக்க இவர் உதவினார்.

விருதுகளும் அங்கீகாரமும்[தொகு]

அஞ்சல் துறை, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை 2007 ஆம் ஆண்டில் இவரை கௌரவித்தது.

2007 மார்ச் 5-9 தேதிகளில் அனைத்துலக பெண்கள் தினத்திற்கான மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் ஒரு வாரம் கொண்டாடப்பட்ட 'அனன்யா விழா'வில் இவர் ஒரு முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். அமைச்சகம் வெளியிட்ட அஞ்சல் முத்திரைகளை இவர் வடிவமைத்து இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவர் வெளியிட்டார்.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jayasri Burman - Artists - Aicon Gallery".
  2. "The Telegraph She Awards 2021 saw women achievers being feted". www.telegraphindia.com. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
  3. Profile: Paresh Maity Official Site பரணிடப்பட்டது 27 நவம்பர் 2013 at the வந்தவழி இயந்திரம்
  4. "The Burman-Maity family is proof that creativity runs in the genes". Elle India (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-01-26. பார்க்கப்பட்ட நாள் 2021-03-23.
  5. "Jayasri Burman - Recognition". jayasriburman.com. Archived from the original on 2016-01-17. பார்க்கப்பட்ட நாள் 2019-03-12.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெயசிறீ_பர்மன்&oldid=3573294" இலிருந்து மீள்விக்கப்பட்டது