கெல்ப் காடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெல்ப் காடு

கெல்ப் காடுகள் என்பவை கடலின் அடியில் கெல்ப் பாசிகள் அடர்த்தியாக உள்ள பகுதியாகும். இது உலகின் குளிர்பிரதேச கடற்கரையோரங்களின் பெரும் பகுதியில் உள்ளன. இவை பூமியில் மிகவும் ஆற்றல்மிக்க சூழல் மண்டலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[1] இவற்றில் குறைந்த அடர்த்தியில் பாசிகள் உள்ள இடங்கள் கெல்ப் படுக்கைகள் என்று அழைக்கப்படுகின்றன. மிதவெப்பமண்டல மற்றும் துருவ கடலோர பெருங்கடல்கள் முழுவதும் கெல்ப் காடுகள் உலகளவில் உள்ளன. 2007 ஆம் ஆண்டில், ஈக்வடோர் அருகே வெப்பமண்டல நீரிலும் கெல்ப் காடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. [2]

கெல்ப் காடுகளின் உலகளாவிய பரவல்

பழுப்பு நிற கடற்பாசிகளால் உருவான கெல்ப் காடுகள் கடல் உயிரினங்களுக்கு ஒரு தனித்துவமான வாழ்விடமாக உள்ளன. [3] மேலும் பல சுற்றுச்சூழல் செயல்முறைகளைப் புரிந்து கொள்வதற்கான ஆதாரமாக இருக்கின்றன. கடந்த நூற்றாண்டில், இவை விரிவான ஆராய்ச்சியின் மையமாக இருந்தன.

மனிதர்களின் செயல்பாட்டால் பெரும்பாலும் கெல்ப் காடுகள் சீரழிவுக்கு ஆளாகியுள்ளன. அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் காலநிலை மாற்றத்தின் ஒருங்கிணைந்த விளைவுகளால் கெல்ப் காடுகள், டாஸ்மேனியாவின் கிழக்கு கடற்கரை மற்றும் வடக்கு கலிபோர்னியாவின் கடற்கரை போன்ற பல குறிப்பிடத்தக்க இடங்களில் மறைந்துவிட்டன. [4] [5] பாதுகாக்கப்பட்ட கடல் பகுதிகளைச் நடைமுறைப் படுத்துவது போன்றவை இதுபோன்ற சிக்கல்களைத் தீர்க்க பயனுள்ள மேலாண்மை உத்தி ஆகும், ஏனெனில் இதனால் மீன்பிடித்தலினால் ஏற்படும் தாக்கங்களை மட்டுப்படுத்தலாம் மற்றும் பிற சுற்றுச்சூழல் மாசின் விளைவுகளிலிருந்து சுற்றுச்சூழல் அமைப்பைக் காக்கலாம்.

குறிப்புகள்[தொகு]

  1. Mann, K.H. 1973. Seaweeds: their productivity and strategy for growth. Science 182: 975-981.
  2. Graham, M.H., B.P. Kinlan, L.D. Druehl, L.E. Garske, and S. Banks. 2007. Deep-water kelp refugia as potential hotspots of tropical marine diversity and productivity. Proceedings of the National Academy of Sciences 104: 16576-16580.
  3. Christie, H., Jørgensen, N.M., Norderhaug, K.M., Waage-Nielsen, E., 2003. Species distribution and habitat exploitation of fauna associated with kelp (Laminaria hyperborea) along the Norwegian coast. Journal of the Marine Biological Association of the UK 83, 687-699.
  4. Morton, Adam; Cordell, Marni; Fanner, David; Ball, Andy; Evershed, Nick. "The dead sea: Tasmania's underwater forests disappearing in our lifetime". the Guardian (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.
  5. Steinbauer, James. "What Will It Take to Bring Back the Kelp Forest? - Bay Nature Magazine". Bay Nature (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-10-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெல்ப்_காடு&oldid=3192209" இலிருந்து மீள்விக்கப்பட்டது