ஜாமிஆ அல் பாகியாதுஸ் ஸாலிஹாத்
அஃலா ஹழ்ரத் ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் ஸாஹிபின் அடக்கத்தலம் | |
வகை | இஸ்லாமிய பல்கலைக்கழகம் |
---|---|
உருவாக்கம் | 1857 |
நிறுவுனர் | ஷாஹ் அப்துல் வஹ்ஹாப் |
வேந்தர் | ஷெய்குல்-ஜாமிஆ |
அமைவிடம் | , , 12°55′11″N 79°08′08″E / 12.9196709°N 79.135623°E |
சுருக்கப் பெயர் | பாகியாத் |
ஜாமிஆ அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் (جامعة الباقيات الصالحات) அல்லது பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபு கல்லூரி 1857 இல் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம் வேலூரில் நிறுவப்பட்ட குறிப்பிடத்தக்க இஸ்லாமிய கல்லூரி ஆகும்.[1][2]
தென்னிந்தியாவில் வலுவான இஸ்லாமிய நிறுவனங்களை உருவாக்குவதில் மதரஸாக்கள்[தெளிவுபடுத்துக] பிரதான பங்கு வகிக்கிறன. இந் நிறுவனத்தின் பட்டதாரி உலமாக்கள்[தெளிவுபடுத்துக] ஆயிரக்கணக்கானோர் முன்னோடி மதாரிஸ்கள்[தெளிவுபடுத்துக] மற்றும் மகாதிப்களாக தென்னிந்தியா மற்றும் தூரக்கிழக்கு நாடுகளில் உள்ளனர்
மவ்லானா அப்துல் ஹமீத் பகாவியின் புகழ்பெற்ற அல்-குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்பு தென்னிந்தியாவின் புகழ்பெற்ற முப்திகள்[தெளிவுபடுத்துக] மற்றும் ஆலிம்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.[3]
சுன்னி இஸ்லாத்தை பயிற்றுவிக்கும் இக் கல்வியகம் அஃலா ஹழ்ரத் என்று அழைக்கப்படும் ஷா அப்துல் வஹாப் அவர்களால் நிறுவப்பட்டது. இந்த மத்ரஸா வின் பட்டதாரிகள் பாகவி (பாக்கவி) என அறியப்படுகின்றனர். இந்த மதரஸா நன்கு அறியப்பட்ட இஸ்லாமிய அறிஞர்களை உருவாக்கியுள்ளது.[4][5]
குறிப்பிடத்தக்க முன்னாள் மாணவர்கள்[தொகு]
- சையித் அப்துர்-ரஹ்மான் அல் புகாரி
- ஷேக் அபுபக்கர் அஹ்மத்
- தைக்கா அஹ்மத் அப்துல் காதிர்
- சையித் இப்ராஹீம் கலீல் அல் புகாரி
- தைக்கா ஷூஐப்
- கலாம்படி முஹம்மது முஸ்லியார்
- ஈ.கே.அபுபக்கர் முஸ்லியார்
- அப்துல்லா மவ்லவி
- அனக்கார கோயாகுட்டி முஸ்லியார்
- அலி பாகவி அட்டுபுரம்
குறிப்புகள்[தொகு]
- ↑ Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
- ↑ "The Pride of Kashmir". Greater Kashmir (in அமெரிக்க ஆங்கிலம்). 3 July 2016. பார்க்கப்பட்ட நாள் 12 February 2020.
- ↑ Pickthall, Marmaduke William; Asad, Muhammad (1939) (in en). Islamic Culture. Islamic Culture Board. https://books.google.com/?id=Ja16-czwISsC&q=Baqiyat+Salihat+Arabic+College&dq=Baqiyat+Salihat+Arabic+College.
- ↑ See al-Hasani, 'Abd al-Hai, Nuzhat al-Khatir; vol. 8, entry no. 331, pp. 338-39
- ↑ MAGAZINE AL BAQIYATH 2014 URDU/TAMIL/MALYALAM