1725 வரை ஆங்கிலத் துடுப்பாட்டத்தின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

1725 வரையிலான துடுப்பாட்டத்தின் வரலாறானது, இது தோன்றியதாக கருதப்படும் காலந்தொட்டு, இங்கிலாந்தில் இது ஒரு பெரும் விளையாட்டாக வளர்ந்து மற்ற நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம் வரையில் ஏற்பட்ட விளையாட்டின் வளர்ச்சியை சித்தரிக்கிறது.

கிரிக்கெட்டு பற்றிய திட்டவட்டமான குறிப்பு முதன்முதலில் 1598ம் ஆண்டில் காணப்படுகிறது. அதில் இந்த விளையாட்டு சுமார் 1550களில் விளையாடப்பட்டதென்று தெளிவாகக் கூறுகிறது. ஆனால் உண்மையில் இது தோன்றிய பிறப்பிடம் ஒரு புதிராகவே இருந்து வருகிறது. இதன் துவக்கம் 1550ம் ஆண்டிற்கு முன்புள்ளது. மேலும் இது கெண்ட்டு, சசெக்சு மற்றும் சர்ரே ஆகிய மாவட்டங்களுக்குள் தென்கிழக்கு இங்கிலாந்தில், பெரும்பாலும் த வெல்ட் என்ற ஒரு பிராந்தியத்தில் தோன்றியிருக்க வேண்டும். இவையே இந்த விளையாட்டைக் குறித்து ஓரளவிற்கு திட்டவட்டமாக கூறமுடிகிறது. மட்டைவீரர்கள், பந்துவீச்சாளர்கள் மற்றும் பந்துக்காப்பாளர்கள் அடங்கிய இசுடூல்பால் மற்றும் ரௌண்டர்சு போன்ற ஆட்டங்களையல்லாமல், துடுப்பாட்டம் குறும்புல் தரையில் மட்டுமே விளையாடக் கூடியதாகும். ஏனெனில் 1760கள் வரை பந்து தரைமட்டமாகவே கிரிக்கெட்டில் வீசப்பட்டது. எனவே காட்டு கழிச்சல்களும் மேய்ச்சல் வெளிகளும் விளையாட ஏற்ற இடங்களாக இருந்திருக்கக் கூடும்.

துடுப்பாட்டத்தின் ஆரம்ப காலங்கள் பற்றி கிடைக்கப் பெற்ற குறைந்த தகவலானது, இது முதலில் குழந்தைகள் விளையாட்டாகவே இருந்ததென்பதை சுட்டிக் காட்டுகிறது. பிறகு, 17ம் நூற்றாண்டின் துவக்கத்தில் இது தொழிலாளர்களால் கையெடுக்கப்பட்டது. சார்லசு I ஆட்சிக் காலத்தில் உயர்குடி மக்கள் முதலில் புரவலர்களாக அதிகரிக்க ஆர்வம் காண்பித்தனர். பின்பு அவ்வபோது விளையாடவும் தொடங்கினர். இந்த விளையாட்டில் சூதாடக் கூடியத் தன்மை அவர்களை இதன்பால் மிகவும் ஈர்த்தது. மேலும் மறுசீரமைப்பிற்குப் (ரெசுடொரேசன்) பின் இது வெகுவாக அதிகரித்தது. கனூவர் மரபுத்தொடர்வின் (கனூவேரியன் சக்சசன்) போது, துடுப்பாட்டத்தில் முதலீடு ஏற்பட்டதால் தொழில்சார் விளையாட்டு வீரர்களையும் முதல் பெரும் குழுக்களையும் உண்டாகின. இவ்வாறு லண்டனிலும் இங்கிலாந்தின் தென்பகுதியிலும் துடுப்பாட்ட விளையாட்டு ஒரு மக்களுக்கான சமூக நிகழ்வாக நிறுவப்பட்டது. இதனிடையே ஆங்கிலேய குடியேற்றக்காரர்கள் துடுப்பாட்டத்தை வட அமெரிக்காவிலும் மேற்கிந்திய தீவுகளிலும் அறிமுகம் செய்திருந்தனர்; மேலும் கடலோடிகளும் கிழக்கிந்திய நிறுவன வணிகர்களும் இதை இந்திய துணைக்கண்டத்திற்கு கொண்டு சென்றிருந்தனர்.

ஒரு குழந்தைகள் விளையாட்டாக கிரிக்கெட்டின் தோற்றம்[தொகு]

தோற்றக் கோட்பாடுகள்[தொகு]

துடுப்பாட்டமானது கெண்ட் மற்றும் சசெக்ஸ் ஆகிய பகுதிகளின் நெடுக இருக்கும் வெல்ட் என்ற பிராந்தியத்தின் விவசாய மற்றும் உலோகவேலை செய்யும் சமுதாயங்களில் ஆரம்ப மத்திய காலங்களில் தோன்றியிருக்குமென்பதே மிகவும் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படும் கோட்பாடாகும்.[1] இந்த மாவட்டங்களும் அண்டையிலிருந்த சர்ரேயும் உயர்ப்பண்புகளில் சிறப்பு மையங்களாக விளங்கின. இங்கிருந்த இந்த விளையாட்டு துரிதமாக அருகாமையிலிருந்த லண்டனுக்கு பரவின. அங்கு அதன் பிரபலம் உறுதி செய்யப்பட்டது. மேலும் பெர்க்ஷையர், எசெக்ஸ், ஹாம்ப்ஷையர் மற்றும் மிடில்செக்ஸ் போன்ற தெற்கத்திய மாவட்டங்களுக்கும் பரவ ஆரம்பித்தது.[2]

எட்வர்ட் II (கேசிலின் இங்கிலாந்து வரலாற்றில் சித்தரிக்கப்பட்டுள்ளது) தனது இளம் வயதில் க்ரெக் விளையாடினார்.

அக்காலத்தில் புழக்கத்திலிருந்த பல சொற்களின் காரணமாகவே “கிரிக்கெட்” என்ற பெயர் தோன்றியிருக்கும். 1598ம் ஆண்டின் மிகத் தொன்மையான குறிப்பில் இந்த விளையாட்டு க்ரெக்கெட் என்றழைக்கப்பட்டிருக்கிறது. தென்கிழக்கு இங்கிலாந்திற்கும், ஃப்லாண்டர்ஸ் மாவட்டத்திற்கும் (இது பர்கண்டி டச்சுக்கு சொந்தமாக இருந்தது) வலுவான மத்திய கால வணிகத் தொடர்பிருந்ததால், இந்த பெயர் மத்திய டச்சிலிருந்து வந்திருக்கலாம்.[3] இந்த மொழியில் krick (-e ) என்றால் குச்சி என்று அர்த்தம். அல்லது பழைய ஆங்கிலேய க்ரிக் (cricc ) அல்லது கிரைஸ் (cryce ) என்ற சொல்லிலிருந்து வந்திருக்கலாம். அந்த மொழியில் இதற்கு ஊன்றுகோல் அல்லது கம்பு என்று அர்த்தம்.[4] சாமுவேல் ஜான்சனுடைய டிக்ஷனரி ஆஃப் த இங்க்லீஷ் லாங்குவேஜில் (1755), கிரிக்கெட் என்ற சொல்லை அவர் "சாக்சன் வார்த்தையாகிய கிரைஸ் , ஒரு குச்சி", என்ற சொல்லில்லிருந்து வந்ததாக குறிப்பிட்டிருந்தார்.[2] பழைய பிரெஞ்சில், கிரிக்கெட் (criquet ) என்ற சொல் ஒருவகை தடி அல்லது குச்சியைக் குறிப்பிட்டிருக்கிறது. ஆனாலும் இது க்ரோக்கெட் (croquet) என்ற சொல்லுக்கு மூலமாக இருந்திருக்கலாம்.[4] மற்றொரு சாத்தியமான மூலம் மத்திய டச்சு சொல்லான krickstoel என்ற சொல்லாக இருக்கலாம். இதன் அர்த்தம் கிறித்தவ ஆலயத்தில் முழங்காலிட உபயோகப்படும் ஒரு சிறிய முக்காலியாகும். ஆரம்பக் கிரிக்கெட்டில் இரண்டு ஸ்டம்புடைய மட்டையிலக்கு (விக்கெட்) அவ்வாறே காட்சியளித்தது.[5] பான் பல்கலை கழகத்தின், ஐரோப்பிய மொழி வல்லுநரான ஹெய்னர் கில்மெய்ஸ்டருடைய கூற்றுபடி, “கிரிக்கெட்” என்ற சொல் ஹாக்கிக்கான மத்திய டச்சு சொற்றொடரிலிருந்து வருகிறது, met de (krik ket)sen (அதாவது.. “குச்சு வேட்டையுடன்”).[6] இந்த விளையாட்டே ஃப்லெமிஷ் (டச்சு) பிறப்பிடம் கொண்டதாக நம்புகிறார், ஆனால் இந்த விஷயத்தில் முடிவு இன்னமும் எட்டப்படவில்லை.[7]

துடுப்பாட்டம் ஒருவேளை குழந்தைகளால் கண்டுபிடிக்கப்பட்டிருந்து பல சந்ததிகளாக ஒரு குழந்தைகள் விளையாட்டாகவே இருந்திருக்கக் கூடும்.[8] ஒருவேளை இது பௌல்ஸ் என்ற விளையாட்டிருந்து (பௌல்ஸ் கிரிக்கெட்டைவிட பழமையானதென்று ஊகித்து) தோன்றியிருக்கலாம். இந்த விளையாட்டில் ஒருவர் பந்து அதன் இலக்கை அடைவதை தடுத்து தூரத் தள்ளியிருக்கலாம். இவ்வாறாக மட்டையாளர் தோன்றியிருக்கலாம். ஆடுகளின் மேய்ச்சல் நிலங்களில் அல்லது கழிச்சல்களில் விளையாடும் போது, ஆரம்பத்தில் செம்மறியின் கம்பிளியிலாளான ஒரு கட்டு (அல்லது ஒரு கல் அல்லது ஒரு மரக்கட்டை கூட) பந்தாக இருந்திருக்கலாம்; ஒரு குச்சி அல்லது வலைதடி அல்லது மற்றொரு விவசாயக் கருவி மட்டையாக இருந்திருக்கலாம்; ஒரு கதவு (உ.ம்., கிட்டி வாசல்), ஒரு முக்காலி அல்லது ஒரு மர அடிக்கட்டை மட்டையிலக்காக இருந்திருக்கலாம். நார்மன் அல்லது பிளாண்டஜெனெட் காலங்களில் 1300ம் ஆண்டிற்கு முன் எப்போதாவது இந்த விளையாட்டு கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம்; அல்லது 1066ம் ஆண்டிற்கு முன் சாக்சன் காலங்களிலும் உண்டாயிருக்கலாம்.[9]

துடுப்பாட்டம் ஸ்டூல்பால், ரௌண்டர்ஸ் மற்றும் பேஸ்பால் போன்ற மற்ற மட்டைப்பந்து விளையாட்டுக் குடும்பத்தையே சேர்ந்ததாகும். ஆனால் இவைகளிலொன்றிலிருந்து இது தோன்றியதா அல்லது அவைகள் இதிலிருந்து தோன்றினவாவென்று நிர்ணயிக்கப்பட முடியவில்லை.[2] ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரின் ஒரு குறிப்பிட்ட களத்தில் ஸ்டூல்பால் குறித்தான ஒரு 1523ம் ஆண்டு குறிப்பு காணப்படுகிறது; இது ஒரு மட்டை அல்லது குச்சியைக் கொண்டு ஒரு பந்தை எவ்வாறேனும் அடித்தாடும் எந்த ஒரு விளையாட்டிற்கும் பொதுவான பதமாகவும் இருக்கலாம்.[10] துடுப்பாட்டத்துடன் சேர்ந்து ஸ்டூல்பாலும் 18வது நூற்றாண்டில் குறிப்பிடப்படுவது, அது ஒரு தனியான செயலாக இருந்திருக்கிறதென்பதை தெளிவாக சுட்டிக்காட்டுகிறது.[11]

"கிரேக்கு"[தொகு]

இங்கிலாந்தின் அரசர் முதலாம் எட்வேர்டுடைய அலமாரி கணக்கு வழக்குகளில் இளவரசர் எட்வேர்டு வெசுட்மினிசுட்டரிலும் நியூவெண்டனிலும் “கிரேக்கு மற்றும் பிற ஆட்டங்களை” விளையாட சான் டி லீக் என்பவருக்கு பணமளித்திருந்ததாக 1300ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி (சூலியன் நாட்காட்டி, கிரிகோரியன் ஆண்டின்படி 1301ம் ஆண்டாக இருக்கும்) குறிப்பொன்று கூறுகிறது.[2] வருங்கால வேல்ஸ் நாட்டு இளவரசரான இளவரசர் எட்வர்ட் அப்போது 15 வயதுடையவராக இருந்தார். “கிரேக்கு” கிரிக்கெட்டுடைய முந்தைய வடிவமாக இருந்திருக்கலாமென்று கூறப்படுகிறது.[12] இதனை ஆதரிக்க எந்த ஆதாரமும் இல்லை. மேலும் கிரேக்கு வேறு ஏதாவதாகக் கூட இருந்திருக்கலாம்.[2] கிரேக் கிரெயிக்கு (craic) என்ற சொல்லின் ஆரம்ப எழுத்துக்கோர்வையாக இருந்திருக்கலாம்.[4] இங்கு கிரெயிக்கு என்ற சொல் கேலிக்கை, பொழுதுபோக்கு அல்லது உல்லாசமான பேச்சு அவைகளைக் குறிக்கும் ஒரு சரிசு சொல்லாக எடுத்துக்கொள்ளலாம். கிராக்கு (crack) என்ற சொல்லுக்கான இவ்வகை அர்த்தம் ஐரிசு ஆங்கிலம், இசுக்காட்டீசு ஆங்கிலம் மற்றும் வடகிழக்கு இங்கிலாந்தின் சார்டீயில் அர்த்தங்கொள்ளப்படுகிறது. அயர்லாந்தில் தற்போது கிரெயிக்கு (craic) என்ற எழுத்துக்கோர்வையை விட கிராக்கு (crack) என்பதே மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது.[13]

மிக ஆரம்பகாலத்து திட்டவட்ட குறிப்புகள்[தொகு]

சான் டெரிக்கு மற்றும் அவருடைய நண்பர்கள் கில்டுஃபோர்டில் உள்ள ராயல் கிராமர் இசுக்கூலில் "கிரிக்கெட்டு" விளையாடினார்கள்.

கிரிக்கெட் விளையாடப்படுவதற்கான மிக ஆரம்பகாலத்துக் குறிப்பானது 1598ம் ஆண்டு ஒரு நீதிமன்ற வழக்கில் ஒரு ஆதாரமாக வழங்கப்பட்டது. இது சர்ரேயின் கில்டுஃபோர்டில் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் சுமார் 1550ம் ஆண்டு நடந்ததாக தெரிகிறது.[2] இந்த வழக்கு ஒரு நிலத்தை ஒரு பள்ளி உரிமைக் கொண்டாடியதைக் குறித்ததாகும். 1597ம் ஆண்டு சனவரி மாதம் 17ம் தேதி (சூலியன் தேதி, கிரிகோரியன் நாட்காட்டியில் இணையாக 1598ம் ஆண்டு) கில்டுஃபோர்டிலுள்ள நீதிமன்றத்தில் 59-வயது நிரம்பிய ஒரு மரண விசாரனை அதிகாரி, சான் டெருரிக் அவரும் அவருடைய பள்ளி நண்பர்களும் ஐம்பது வருடங்களுக்கு முன்பு அவ்விடத்தில் “கெரெக்கெட்டு” (creckett) விளையாடியதாக சாட்சியளித்தார். அந்த பள்ளி கில்டுஃபோர்டில் உள்ள ராயல் கிராமர் இசுக்கூல் ஆகும்.[2]

1598ம் ஆண்டு ஒரு இத்தாலிய-ஆங்கிலேய அகராதியில் சியோவானி ஃபிளோரியோ கிரிக்கெட்டு என்ற சொல்லை பயன்படுத்தியிருந்தார். sgillare என்ற சொல்லுக்கு அவர் பொருள்விளக்கம் அளிக்கும்போது, “சிள்வண்டு (பூச்சு) ஒலியிடுவது, கிரிக்கெட்சு-எ-விக்கெட்சு விளையாடி மகிழ்வது” என்று குறிப்பிட்டிருந்தார்.[14] “கிரிக்கெட்டு” என்ற சொல்லை ஒரு பூச்சாகவும் ஒரு விளையாட்டாகவும் வரையறுத்த முதல் அறியப்பட்ட எழுத்தாளர் ஃபிளோரியோ ஆவார். அவருடைய அகராதியின் பிந்தைய பதிப்பில் 1611ம் ஆண்டு, “கிரிக்கெட்டு-எ-விக்கெட்டு” விளையாடுவது பாலியல் தொடர்புடையதாய் frittfritt என்ற சொல்லுடன் சம்பந்தப்படுத்தப்படுகிறது. இந்த வார்த்தை “நாம் கிரிக்கெட்டு-எ-விக்கெட்டு அல்லது gigaioggie என்று சொல்வது போல்” என்று பொருள் விளக்கப்படுகிறது. மேலும் dibatticare என்ற சொல், “ஒரு இளம்பெண்ணை படுக்கைக் கூவலாகிய giggaioggie வரும்வரை திரும்பதிரும்ப மீட்டுவது” என்று விளக்கப்படுகிறது.[15]

கிராம கிரிக்கெட்டின் வளர்ச்சி: 1611 - 1660[தொகு]

பெரியவர்களின் பங்கேற்பு தொடக்கம்[தொகு]

1611ம் ஆண்டு இரேண்டலு கார்டுகிரேவு மூலமாக ஒரு பிரான்சிய-ஆங்கிலேய அகராதி வெளியிடப்பட்டது. அதில் crosse என்ற பெயர்ச்சொல் “கிரிக்கெட்டு விளையாட பையன்கள் பயன்படுத்தும் ஒரு வளைதடி” என்று விளக்கப்பட்டது.[4] இந்த சொல்லின் வினைவடிவம் crosser ஆகும். அது “கிரிக்கெட்டில் விளையாடுவது” என்று விளக்கப்படுகிறது.[4] காருடுகிரேவு அகராதியில் கிரிக்கெட்டு பையன்களுடைய விளையாட்டாக வரையறுக்கப்பட்டிருந்தாலும், மேற்கூறிய கில்டுஃபோர்டு பள்ளி ஆண்களின் கூற்றுபடி, அந்த நேரத்தில் தான் பெரியவர்கள் பங்கேற்பு துவங்கினது.[4]

சசெக்குசில் முதல் முறை கிரிக்கெட்டு என்ற சொல் பயன்படுத்தப்பட்டதும் 1611ம் ஆண்டாகும். இதில் இரண்டு பாதிரியார்கள் ஈசுடரு ஞாயிறன்று கிரிக்கெட்டு விளையாடிக்கொண்டிருந்ததால் திருச்சபைக்கு வராததைக் குறித்தான ஆலய நீதிமன்ற பதிவேடுகள் கூறின. இந்த சம்பவம் மேற்கு சசெக்குசின் சைடலுசேமில் நடந்தது. அவர்கள் இருவரும் 12 பென்சு அபராதம் விதிக்கப்பட்டு ஒரு பாவசங்கீத்தனம் செய்யும்படி ஆணையிடப்பட்டனர். 1613ம் ஆண்டு, மற்றொரு நீதிமன்ற வழக்கில் ஒருவர் ஒரு “கிரிக்கெட்டு தடியை” கொண்டு கில்டுஃபோர்டுக்கு அருகான வான்பரோவில் வீழ்த்தப்பட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்தது.[16]

மேலும் இதே கால கட்டத்தில், கெண்டில் கிரிக்கெட் என்ற சொல்லை திட்டவட்டமாக குறிப்பிடப்படப்படுகிறதையும் பார்க்க முடிகிறது. 1640ம் ஆண்டு நடந்த ஒரு நீதிமன்ற வழக்கில், “வீல்டு அண்டு அப்லேண்டு” மற்றும் “சாக்சில்” ஆகிய ஊர்களுக்கு இடையேயான ஒரு “கிரிக்கெட்டிங்கு” “சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு” சீவனிங்கில் நடந்ததாக பதிவு செய்யப்பட்டது (அதாவது சுமார் 1610). இதுவே மிக மிக ஆரம்ப காலகட்டத்திலிருந்தான அறியப்பட்ட கிராம கிரிக்கெட்டு போட்டியாகும். இந்த போட்டிகள் 17ம் நூற்றாண்டின் முதல் பாதியில் பிரபலமடைந்தன. இந்த விளையாட்டு விளையாடப்பட்ட களத்தைக் குறித்து வழக்கு இருந்தது.[17]

1617ம் ஆண்டு, 18-வயது நிரம்பிய ஒலிவர் கிராம்வெல் இலண்டனில் கிரிக்கெட்டும் கால்பந்தும் விளையாடினார்.[2] 1622ம் ஆண்டு, மேற்கு சசெக்குசில் சிசெசுட்டர் அருகே பாக்ஸ்கிரோவில், பல பாதிரியார்கள் மே 5ம் தேதி, ஞாயிற்றுக் கிழமையன்று திருச்சபை மனையில் கிரிக்கெட் விளையாடியதற்காக தண்டிக்கப்பட்டனர். இந்த சட்ட நடவடிக்கைக்கு மூன்று காரணங்கள் இருந்தன: ஒன்று உள்ளூர் அமைப்பு-விதி மீறலாயிருந்தது; மற்றொன்று உடைந்திருக்கக் கூடிய அல்லது உடையாதிருந்த திருச்சபை சன்னல்களைக் குறித்த கரிசனையாக இருந்தது; மூன்றாவது ஒரு சிறு குழந்தை கிரிக்கெட் மட்டையால் தன் மண்டையில் அடிப்பட்டிருக்கக் கூடியதாகும் ![16] கடைசி காரணம் ஏனென்றால், அப்போதைய விதிகளின்படி மட்டையாளர் பந்தை இருமுறை அடிக்க அனுமதிக்கப்பட்டது. இதனால் மட்டையாளர் அருகே பந்துகாப்பது மிகவும் அபாயகரமானதாக இருந்தது. பிற்பாடு நடந்த மிகவும் கொடூரமான நிகழ்ச்சிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.

1624ம் ஆண்டு, கிழக்கு சசெக்குசில் கார்சுடெட்டு கீன்சில் ஒரு மரணம் சம்பவித்தது. இதில் எட்வர்டு டை என்ற மட்டையாளர் பந்து பிடிபடுவதைத் தவிர்க்க அதை இரண்டாம் முறை அடிக்க முயன்ற போது சேசுபருவினால் என்ற ஒரு பந்துகாப்பாளர் தலையில் அடிபட்டார். திரு வினால் அவர்கள் கிரிக்கெட்டினால் மரணம் சந்தித்தவரில் முதலாவதாக பதிவு செய்யப்பட்டவர் ஆவார். இந்த விடயம் ஒரு மரண விசாரனை நீதிபதியின் மன்றத்தில் பதிவு செய்யப்பட்டு, நல்லது நடக்காமல் மரணம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.[18] 1647ம் ஆண்டு மேற்கு சசெக்குசின் செல்சியில் இந்த துயர சம்பவம் மறுபடியும் நிகழ்ந்தது. ஒரு மட்டையாளர் பந்தை இரண்டாவது முறை அடிக்க முயற்சித்த போது கென்றி பிராண்டு என்ற ஒரு பந்துகாப்பாளர் தலையில் அடிபட்டார்.[19] 1744ம் ஆண்டு கிரிக்கெட்டின் சட்டதிட்டங்கள் முதன் முதலில் வரையறுக்கப்பட்டபோது பந்தை இரண்டு முறை அடிப்பது சட்டவிரோதமானது. அப்படி செய்பவர் ஆட்டமிழந்ததாக கூற வேண்டியிருந்தது.[20] 1624ம் ஆண்டின் வழக்கு கார்சுடெட்டு கீன்சு மற்றும் மேற்கு கோத்திலி ஆகிய இரண்டு கிராமங்கள் இந்த ஆட்டத்தில் ஈடுபட்டதாகவும் கிராம கிரிக்கெட்டின் வளர்ச்சிக் குறித்து மேலும் ஆதாரங்கள் வழங்குகின்றது.[18]

திருச்சபை பதிவேடுகளில் 1630ன் பியூரிடன் தாக்கத்திலிருந்து மறுசீரமைப்பு வரை ஞாயிற்று கிழமை விளையாடுவது குறித்து சிக்கல் எழுந்ததான குறிப்புகள் பல இடங்களில் காணப்படுகின்றன. இதன் மூலம் திருச்சபைகளுக்கு இடையே போட்டிகள் விளையாடப்பட்டிருக்கலாமென்று சுட்டிக் காட்டுகின்றன. ஆனால் 1660ம் ஆண்டின் மறுசீரமைப்பு வரை மாவட்டங்களுக்கான அணிகள் உருவானதாகத் தெரியவில்லை.[2] பெருமளவிலான சூதாட்டமோ ஆதரவோ ஆங்கில உள்நாட்டு போருக்கு முன்பு இருந்ததாக ஆதாரமில்லை. இதன் விளைவாக 18ம் நூற்றாண்டில் “பிரதிநிதித்துவம்” செய்யும் அணிகள் உருவாகின. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, போருக்கு முன்பான கிரிக்கெட்டு குறைந்த தரமுடையதாகவே இருந்ததென்று முடிவு செய்யலாம்: அதாவது, கிராம கிரிக்கெட்டு.[2]

18வது நூற்றாண்டில் கிராம கிரிக்கெட்டு தொடர்ந்து செழித்தோங்கியது. 1717ம் ஆண்டு, சசெக்குசின் கருசிட்டுபியருபாயிண்டின் தாமசு மெருசண்டு என்ற ஒரு விவசாயி தன்னுடைய நாட்குறிப்பேட்டில் முதன் முதலில் கிரிக்கெட்டை குறிப்பிட்டிருந்தார். அவர் இந்த விளையாட்டைக் குறித்து பல முறை குறிப்பிட்டிருந்தார், அதிலும் 1727ம் ஆண்டு வரை தன்னுடைய உள்ளூர் கிளப்பை குறித்து அதிகம் குறிப்பிட்டிருந்தார். அவருடைய மகனாகிய வில் “எங்களுடைய திருச்சபை” என்று அவர் அடிக்கடி குறிப்பிடும் கருசிட்டுபியருபாயிண்டு அணிக்காக விளையாடினார்.[21]

ஓய்வு நாளை முறித்தல்[தொகு]

1642ம் ஆண்டில் ஆங்கிலேய உள்நாட்டு போர் ஆரம்பித்தபோது, நெடும் பாராளுமன்றம், தூய்மைக்கு முரண்பாடாக இருந்ததாக கருதி நாடகங்களுக்கு தடை விதித்தது. இதே போன்ற குறிப்பிட்ட சில விளையாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், கிரிக்கெட்டு தடை செய்யப்பட்டதாக ஆதாரமில்லை. எனினும் விளையாட்டு வீரர்கள் “ஓய்வுநாளை முறிக்கக் கூடாது” என்ற சட்டமிருந்தது. கூட்டரசுக்கு (காமன்வெல்த்) முன்பும் கூட்டரசின் போதும் கிரிக்கெட்டு குறிப்பிடப்படுவதால் அது ஏற்கப்பட்டதாக காண்பிக்கின்றது: கிராம்வெல் தாமே இளைஞனாக இருந்தபோது கிரிக்கெட் விளையாடியிருக்கிறார். 17வது நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் தான் கிரிக்கெட்டு “பிடி கொண்டது”[22], குறிப்பாக தென்கிழக்கு மாவட்டங்களில் ஏற்பட்டது. மேன்மக்கள் கூட்டரசின்போது தங்கள் ஊர் பண்ணைகளுக்கு சென்று பொழுதுபோக்காக கிராம கிரிக்கெட்டு விளையாடிக்கொண்டிருந்தனர். 1660ம் ஆண்டிக்குப் பின் கூட்டரசு முடிவடைந்தபின், அவர்கள் இலண்டனுக்குத் திரும்பியபோது இந்த விளையாட்டை தங்களோடு கொண்டு சென்றனர்.[22]

1628ம் ஆண்டு, மேற்கு சசெக்சின் சிசெசுட்டருக்கு அருகில் கிழக்கு லாவண்டில் ஒரு திருச்சபை வழக்கு, ஞாயிற்றுக் கிழமை விளையாடப்பட்ட ஒரு ஆட்டத்தைக் குறித்ததாகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிரதிவாதிகளில் ஒருவர் தான் சாயங்கால தொழுகை நேரத்தின்போது விளையாடாமல் அதற்கு முன்னும் பின்னும் மட்டுமே விளையாடியதாக வாதிட்டார். இந்த வாதம் அவருக்கு பலனளிக்காமல் அவர் சட்டத்தின்படி 12 பென்சு பணம் அபராதம் விதிக்கப்பட்டு பாவசங்கீத்தனம் செய்ய உத்தரவிடப்பட்டார். பாவசங்கீத்தனத்தில் ஒரு பகுதியாக அவர் முழு கிழக்கு லாவண்டு திருச்சபைக்கு முன்பாக தொடரும் ஞாயிற்றுக் கிழமையன்று தன்னுடைய குற்றத்தை அறிக்கை செய்ய வேண்டியதாகும்.[23]

உள்நாட்டுப் போருக்கு முன்பு மேலும் மூன்று குறிப்புகள் காணப்படுகின்றன. ஒரு தசமபாக வழக்கு குறித்தான ஒரு 1636ம் ஆண்டு நீதிமன்ற வழக்கில் கென்றி மேபிங்கு என்ற சாட்சி தான் சர்ரேயின் மேற்கு கார்சுலீயில் உள்ள “பூங்காவில்” கிரிக்கெட்டு விளையாடியதாக சாட்சியளித்தார்.[2][10] 1637ம் ஆண்டு மற்றொரு திருச்சபைக்குரிய வழக்கில் மிட்கருசுடு, மேற்கு சசெக்சு ஆகிய திருச்சபைகளின் பாதிரியார்கள் 26 பிப்ரவரி ஞாயிறன்று சாயங்கால தொழுகையின்போது கிரிக்கெட்டு விளையாடிக்கொண்டிருந்ததாக பதிவு செய்யப்பட்டிருந்தது.[24] 1640ம் ஆண்டு தூய பாதிரிமார்கள் கேண்டர்பர்ரிக்கு அருகே மெய்ட்சுடோனிலும் கார்பல்டௌனிலும் கிரிக்கெட்டை “கேவலமாக” அறிவித்தனர், குறிப்பாக ஞாயிற்று கிழமையில் விளையாடப்படும்போது என்றனர்.[25]

1654ம் ஆண்டு, மூன்று பேர் கெண்டின் எல்த்கேமில் ஞாயிற்றுக் கிழமை கிரிக்கெட்டு விளையாடியதற்காக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டனர். கிரோம்வெல்லின் காப்பரசு முந்தைய வருடம் நிறுவப்பட்டு, இப்போது ப்யூரிட்டன்கள் ஆட்சியிலிருந்ததால், அபராதம் 24 பென்சாக (இரண்டு சில்லிங்கு) இரட்டிக்கப்பட்டது. பிரதிவாதிகள் கிரிக்கெட்டு விளையாடினதற்காக அல்லாமல் “ஓய்வுநாளை முறித்ததற்காக” குற்றஞ்சாட்டப்பட்டனர்.[4] அதே போன்று, கிரோம்வெல்லின் ஆணையர்கள் இரண்டு வருடங்கள் கழித்து அயர்லாந்தில் “அத்துமீறிய கூடுகை” என்ற பேரில் விளையாட்டுகளைத் தடை செய்தபோது, அந்த தடையில் கிரிக்கெட்டு இருந்ததாக எந்தவித ஆதாரமும் இல்லை. ஒருவேளை அந்தக் கால கட்டத்தில் கிரிக்கெட்டு அயர்லாந்தை சென்றடையாமல் இருந்திருக்கலாம்.[26]

பொழுதுபோக்கு கிரிக்கெட்டின் தொடக்கம்[தொகு]

பொழுதுபோக்கு ஆட்டக்காரர்களுக்கும், தொழில்சார் ஆட்டக்காரர்களுக்கும் இடையேயான சமூகப்பிரிவு, சார்லசு I ஆட்சிக்காலத்தில் தொடங்கியதாகும். இந்தப் பிரிவிலிருந்தே ஆண்டுதோறும் வயோதிகர்கள் மற்றும் ஆட்டக்காரர்களுக்கு இடையேயான போட்டி தொடங்கியது. 1629ம் ஆண்டு கெண்டின் ரக்கிஞ்சிலுள்ள ஒரு உதவி போதகர் கென்றி கஃப்ஃபின், ஞாயிறு மாலை தொழுகைகளுக்குப் பிறகு கிரிக்கெட்டு விளையாடியதற்காக ஒரு உதவி தலைமை குருவின் நீதிமன்றம் மூலமாக தண்டனை விதிக்கப்பட்டார். அவருடன் விளையாடியவர்களில் பலர் “பேரும் புகழும் பெற்றவர்கள்” என்று கோரினார்.[27][28] உயர்குடி மக்கள் மத்தியில் கிரிக்கெட்டு பிரபலமடைந்ததற்கு இதுவே முதல் ஆதாரமாகும்.[27]

கிரிக்கெட்டில் பெருமளவிளான சூதாட்டத்தைக் கொண்டு வந்தது உயர்குடி மக்களே ஆவர். இங்கு சூதாடியவர்களில் சிலர் குறிப்பிட்ட அணிகளைத் தேர்ந்தெடுத்து அவைகள் வெற்றி பெறும் வாய்ப்பினை அதிகரிப்பதற்காக அவைகளின் புரவலர்களானார்கள். கூட்டாட்சியின் போது, அரசியல் தேவையின்படி, சூதாட்டம் அவ்வளவு வெளிவராமல் குறைந்த அளவிலேயே இருந்தது. ஒரு கிரிக்கெட்டு பந்தயத்தில் சூதாடியதன் குறிப்பு ஒரு 1646ஆம் ஆண்டு நீதிமன்ற வழக்குப் பதிவேட்டில் காணப்படுகிறது. இது கெண்டின் காக்சுக்கீத்தில் அந்த ஆண்டின் மே மாதம் 29ம் தேதி நடந்த ஒரு ஆட்டத்தில் பிணையம் செலுத்தப்படாததைக் குறித்த ஒரு வழக்காகும். ஆர்வமூட்டக்கூடிய வகையில், பிணையம் பன்னிரண்டு மெழுதுவர்த்திகளாகும், ஆனால் இதில் பங்கேற்றவர்கள் உள்ளூர் உயர்குடி மக்களாவர்.[29] 1652ம் ஆண்டு, கிரான்ப்ரூக்கில் சான் ராப்சன் எசுக்கு மற்றும் மற்றவர்களுக்கு, எதிரான ஒரு வழக்கு “கிரிக்கெட்டு என்றழைக்கப்படும் ஒரு சட்டவிரோதமான விளையாட்டைக்” குறிப்பிடுகிறது. ராப்சன் அவர் பெயரின்படி உயர்குடியானவராயிருந்தார். ஆனால் மற்ற பிரதிவாதிகள் உழைப்பாளிகள் வர்க்கத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர்.[30]

கிரிக்கெட்டு நெடுநாட்களாக வர்க்கப் பிரிவினைக்கு ஒரு பாலமாக இருந்ததாக கருதப்பட்டு வந்தது. ஆனால் காலப்போக்கில், கிரிக்கெட்டு விளையாடும் உயர்குடியினர் “பொழுதுபோக்கு ஆட்டக்காரர்கள்” என்று அழைக்கப்படலாயினர். இவர்கள் பெரும்பாலும் தொழிலாளி வர்க்கத்தை சார்ந்த மற்ற கீழ் வர்க்க வகுப்பினராயிருந்த தொழில்சார் ஆட்டக்காரர்களிடமிருந்து பிரித்து அறியப்பட்டனர்.[31] பொழுதுபோக்கு ஆட்டக்காரர் என்பவர் தன்னுடைய ஓய்வு நேரத்தில் கிரிக்கெட்சு விளையாடும் ஒருவராக மட்டுமல்லாமல், 1962ம் ஆண்டு வரை அதிகாரப்பூர்வமாக அறியப்பட்ட ஒரு வகை முதல் வகுப்பு கிரிக்கெட்டு ஆட்டக்காரராக இருந்தார். 1962ம் ஆண்டு பொழுதுபோக்கு மற்றும் தொழில்சார் ஆட்டக்காரர்கள் என்ற பாகுபாடு அகற்றப்பட்டு அனைத்து முதல்-வகுப்பு ஆட்டக்காரர்களும் பெயரளவிற்கு தொழில்சார் ஆட்டக்காரர்களானார்கள். பொழுதுபோக்கு ஆட்டக்காரர்கள் கைம்மாறாக ஆகும் செலவினை கோரி பெற்றுக்கொண்டார்கள், தொழில்சார் கிரிக்கெட்டு ஆட்டக்காரர்களுக்கு ஒரு ஊதியம் அல்லது சம்பளம் அளிக்கப்பட்டது.[32] பொழுதுபோக்கு கிரிக்கெட்டு என்பது பள்ளிகளில், பல்கலைக்கழகங்களில் மற்றும் பிற கல்வி நிலையங்களில், கல்விசார் மற்றும் கல்விசாராத செயல்பாடுகளில் விளையாடப்படும் விளையாட்டின் ஒரு நீட்டிக்கப்பட்ட அங்கமாக இருந்தது. பள்ளிகளும் பல்கலைக்கழகங்களும் ஏறக்குறைய அனைத்து முதல்-வகுப்பு பொழுதுபோக்கு ஆட்டக்காரர்களையும் உண்டாக்கின; “உற்பத்தி வரிசையாக” விளங்கின.[4]

ஜான் சர்ச்சில் இளம் வயதில் இருக்கும் போது உள்ள படம்.1660களில், அவர் பள்ளியில் கிரிக்கெட்டு விளையாடினார்.

பள்ளியில் அல்லது பள்ளிக்கு அருகாமையில் விளையாடப்பட்டதாக 17ம் நூற்றாண்டு குறிப்புகள் சில உள்ளன. ஆனால் கூட்டாட்சியின் கால கட்டத்தில் ஈட்டன் கல்லூரியிலும் வின்செசுட்டர் கல்லூரியிலும் குறிப்பிடும் அளவுக்கு வழக்கத்தில் இருந்தது.[4] சுமார் 1665ம் ஆண்டு வழக்கில் மார்லுபொரோவின் முதல் பிரபுவாகிய சான் சர்ச்சில் படித்த தூய பவுல் பள்ளியில், இலண்டனில் இந்த விளையாட்டைக் குறித்த குறிப்பு காணப்படுகிறது.[4] ஆங்கிலேய கிரிக்கெட்டின் சமூக வரலாறு (சோஷியல் ஹிஸ்டரி ஆஃப் இங்கிலிஷ் கிரிக்கெட்) என்ற தன்னுடைய புத்தகத்தில் டெரிக் பர்லி “ஆட்சி இடைக்காலத்தில் (1649-1660) கிரிக்கெட்டு செழித்து ஓங்கியது” என்று விமர்சிக்கிறார். இங்கிலாந்தின் “தென்கிழக்கிலுள்ள அனைத்து பள்ளி மாணவனுக்கும் இந்த விளையாட்டு தெரிந்திருக்க வேண்டுமென்று” அவர் ஊகிக்கிறார்.[4] எனினும், அக்கால கட்டதில், இந்த விளையாட்டு எந்த பள்ளி கல்வியட்டவணையிலும் இருந்திருக்குமாவென்றும் சந்தேகிக்கிறார். ஈடன் மற்றும் வெசுட்மின்சுடர் இசுக்கூல் தவிர 17வது நூற்றாண்டில் அனைத்து பள்ளிகளிலும் உள்ளூர் மாணவர்கள் எடுப்பு இருந்ததால் எந்தவித வகுப்பு பாகுபாடு இருந்ததில்லை. எனவே, ஏழை மற்றும் பணக்காரர்களின் பிள்ளைகள் ஒன்றாக விளையாடினர்.[4] மேலே 1646 மற்றும் 1652ம் ஆண்டின் சட்ட வழக்குகளில் பார்ப்பது போல, கிரிக்கெட்டு உயர்குடி மற்றும் தொழிலாளர்களுடனும் சேர்ந்து விளையாடப்பட்டது.

1647ம் ஆண்டு, ஒரு இலத்தீன் மொழிக் கவிதையில், வின்செசுட்டர் கல்லூரியில், கிரிக்கெட்டு விளையாடப்பட்டதைக் குறித்தான ஒரு சாத்தியமான குறிப்பு காணப்படுகிறது; கேம்ப்சையரில் கிரிக்கெட்டு குறித்தான முதன்முதல் குறிப்பு இதுவேயாகும்.[4] கோரேசு வால்போல் என்பவருடைய ஒரு குறிப்பிலிருந்து 18வது நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஈடன் கல்லூரியில் கிரிக்கெட்டு விளையாடப்பட்டதென்பது உறுதியாகிறது.[33] முதன் முதலில் 1710ம் ஆண்டு கேம்பிரிட்சு பல்கலைக்கழகத்தில் கிரிக்கெட்டு விளையாடப்பட்டதாக குறிப்பு காணப்படுகிறது. இவ்விரண்டு நிறுவனங்களுக்கும் வில்லியம் கோல்ட்வின் சென்றிருந்தார். இவர் 1706ம் ஆண்டில் ஒரு கிராமப்புற கிரிக்கெட்டு ஆட்டத்தைக் குறித்து 95 வரிகளடங்கிய ஒரு கவிதையை இலத்தீன் மொழியில் எழுதினார். அது இன் செர்டமென் பிளே (ஒரு பந்தாட்டத்தைப் பற்றி) என்று அழைக்கப்பட்டு, Musae Juvenilesல் வெளியிடப்பட்டது.[34] ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்திலும் கிரிக்கெட்டு ஏறத்தாழ அதே நேரத்தில் ஆரம்பித்திருக்க வேண்டும். என்றாலும், முதன் முதலில் 1729ம் ஆண்டு அது குறிப்பிடப்படுகிறது. சாமுவேல் சான்சன் என்பவர் அங்கே கிரிக்கெட்டு விளையாடியதாக அந்த ஆண்டைக் குறிப்பிடுகிறார்.[35]

கிரிக்கெட்டின் விதிகளும் உபகரணங்களும்[தொகு]

ஆரம்ப கால கிரிக்கெட்டு வீரர்கள் தங்களுடைய அன்றாட ஆடைகளில் விளையாடினர்கள். அவர்கள் கையுறைகளோ மெத்தை அட்டைகளோ எதையும் அணிந்துக்கொள்ளவில்லை. ஆர்ட்டிலரி மைதானத்தில் நடந்துக்கொண்டிருந்த ஒரு ஆட்டத்தை சித்தரித்த 1743ம் ஆண்டின் ஒரு ஓவியத்தில் இரண்டு மட்டையாளர்களும் ஒரு பந்துவீச்சாளரும் ஒரே மாதிரி வெள்ளை சட்டை, குழாய்கள், வெள்ளை முழங்காலளவு காலுறைகள் மற்றும் வார்ப்பூட்டுகளுள்ள காலணிகள் அணிந்திருந்தனர். குச்சக்காப்பாளர் (விக்கெட்கீப்பர்) அதே உடைகளுடன் கூடுதலாக ஒரு இடுப்புச்சட்டை அணிந்திருந்தார். நடுவரும் புள்ளி கணக்கிடுநரும் முக்கால் அளவு நீளசட்டைகளும் மும்முனை தொப்பிகளும் அணிந்திருந்தனர். சட்டைகளும் காலுறைகளும் அல்லாமல் வேறு எதுவுமே வெள்ளை நிறத்தில் இருக்கவில்லை. யாரும் மெத்தையட்டைகளோ கையுறைகளோ அணியவில்லை. பந்தானது பௌலிங்கு விளையாட்டைப் போல தரையோடு வெவ்வேறு வேகங்களில் உருட்டிவிடப்படுகிறது. பந்தானது இரண்டு குச்சிகளுக்கு (ஸ்டம்ப்) மேலிருக்கும் ஒரு குறுக்குவட்டமான குச்சு அடங்கிய மட்டையிலக்குக்கு நேராக வீசப்படுகிறது. மட்டையாளர் பந்தை நவீன காலத்துக்கு காக்கி குச்சிப் போன்ற ஒரு மட்டையைக் கொண்டு சந்திக்கிறார். தரையோடு உருண்டு வரும் பந்தை சந்திக்க இத்தகைய வடிவுள்ள மட்டை ஏற்றதாயிருந்தது.[36][37]

1720களில் உள்ள கிரிக்கெட்டு மட்டை, நவீன காக்கி குச்சை போல் வடிவமைக்கப்பட்டிருந்தது. தரையில் உருண்டு வரும் பந்தை அடிக்கும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

பாக்சுகிரேவிலுள்ள 1622ம் ஆண்டு வழக்கின் பதிவேட்டில் முதல் முறை கிரிக்கெட்டு மட்டையைப் பற்றிய குறிப்பு காணப்படுகிறது. கெண்ட்டு மற்றும் சசெக்சு மாவட்டங்களில் “பேட்டு” என்ற சொல்லே விசித்திரமாக இருந்தது. ஏனெனில் கடலோரத்துக் கடத்தல்காரர்கள் அவர்கள் வைத்திருந்த கனத்த தண்டங்களில் காரணமாக “பேட்டுமென்” என்றழைக்கப்பட்டனர். 1622ம் ஆண்டு தான் முதன் முறையாக “தட்டை-வடிவான” (அதாவது, பனிக்கட்டி காக்கியைப் போன்று குச்சியின் அடிப்பகுதியில் தட்டையான வடிவம்) மட்டை குறிக்கப்படுகிறது.[38] “பேட்டு” என்ற வார்த்தை 1720ம் ஆண்டு வரை அரிதாகவே பயன்படுத்தப்பட்டது. “தடி”, “வளைதடி” அல்லது “குச்சி” ஆகிய சொற்களே அதிகம் பயன்படுத்தப்பட்டது. இவை பிராந்தியங்களுக்கேற்றார் போல் பயன்படுத்தப்பட்டன: உதாரணத்திற்கு “வளைதடி” குளோஸ்டர் பகுதியில் பயன்படுத்தப்பட்டது, தென்கிழக்கில் “மட்டை”; மற்றும் “தடி” அல்லது “குச்சி” மேலும் பரவலாக பயன்படுத்தப்பட்டது.[6] “பேட்டு” என்ற சொல் பிரான்சிய சொல்லான “பேட்டல்டோரி”யிலிருந்து பெறப்படுகிறது. இது நாற்காலி டென்னிசு மட்டையைப் போன்ற உருவத்திலிருந்தது. வண்ணாத்திகள் அதைக் கொண்டு தங்கள் துணிகளை அடித்து துவைத்தனர்.[39]

எட்வர்டு ஃபிலிப்சு 1658ம் ஆண்டு எழுதின மிசுடிரீசு ஆஃப் லவ் அண்டு எலோக்வன்சு என்ற புத்தகத்தில் தான் முதல் முறையாக கிரிக்கெட்டு பந்து குறிப்பிடப்படுகிறது.[2] 1744ம் ஆண்டின் முதன் முதலில் அறியப்பட்ட விதிமுறைகளின் கோட்பாட்டிலிருந்தே ஆடுகளமானது 22 கெசம் (அதாவது ஒரு சங்கிலி நீளம்) நீளமே இருந்திருக்கிறது.[40] இந்த நீளமானது 1620ம் ஆண்டு கண்டரின் சங்கிலி அறிமுகத்தில் வந்ததிலிருந்து பயன்படுத்தப்பட்டு வருவதாக நம்பப்படுகிறது.[41] 19வது நூற்றாண்டு வரை ஒரு ஓவருக்கு நான்கு பந்துகளே இருந்தன.[40]

மட்டையிலக்கு குறித்தான முதன் முதல் குறிப்பு ஒரு பழைய விவிலியத்தில் 1680ம் ஆண்டு காணப்படுகிறது. அதில் “கிரிக்கெட்டில் களிக்கும் அனைவரும், மார்டனுக்கு வந்து உங்கள் மட்டையிலக்குகளை நடுங்களென்று” வரவழைத்தது.[42] மார்டன் மேற்கு சசெக்சில், சிசெசுடருக்கு வடக்கே, காம்பல்டனுக்கு அருகே இருக்கிறது. இது காம்ப்சையர் மாவட்ட எல்லைக்கு சற்றே அப்பால் இருக்கிறது. 1770கள் வரை மட்டையிலக்கானது இரண்டு குச்சிகளும் ஒரு ஒற்றை தண்டு மட்டுமே கொண்டதாக இருந்தது. அதற்குள், 1744ம் ஆண்டு கிரிக்கெட்டின் விதிகளின்படி, 22 இஞ்ச் உயரமும் 6 இஞ்சு அகலமும் கொண்டு, மட்டையிலக்கின் வடிவம் உயரமாகவும் குறுகலாகவும் ஆனது. ஆனால் 18வது நூற்றாண்டின் துவக்கத்திலுள்ள படங்கள் மட்டையிலக்குத் தாழ்வாகவும் அகலமாகவும், சுமார் இரண்டடி அகலமும் ஓரடி உயரமும் இருந்ததாகக் காண்பித்தன. குச்சிகளின் முனைகள் சற்றே பிளவுண்டிருந்தன். இது இலேசான தண்டானது அதின் மேல் அமர ஏதுவாயிருந்தது. குச்சிகள் ஆடுகளத்தில் எந்த இறுக்கத்தில் நடப்பட வேண்டும் மற்றும் தண்டானது எப்படி லாவகமான வைக்கப்பட வேண்டும் என்பதற்கான தகுதிவிதிகள் இருந்தன. இதன்படி ஒரு குச்சி லேசாக தட்டப்பட்டவுடன் தண்டானது எளிதாக கீழே விழக்கூடியதாக இருந்தது.[6]

மட்டையிலக்கு உருவானதைக் குறித்து ஏராளமான அனுமானங்கள் இருந்துள்ளன. எனினும், 17வது நூற்றாண்டு வரையறையானது திருச்சபை முக்காலியைப் போன்று தாழ்வாகவும் அகலமாகவும் இருந்தது என்று சொன்னால் மிகையாகாது. மேலும், முக்காலியின் கால்கள் சுடம்புகள் (அடிக்கட்டைகள்) என்றழைக்கப்பட்டன. இதனால் ஆரம்பகாலத்தில் முக்காலிகள் மட்டையிலக்குகளாக வைக்கப்பட்டன என்பதற்கு வலுவான நம்பிக்கை கிட்டுகிறது.[6] சர்ச்வார்டன்ஸ் அகௌண்ட்சு ஃபார் கிரேட் செயிண்டு. மேரீசு சர்ச் ஆஃப் கேம்ப்ரிட்சு (1504-1635)ன் படி, ஒரு திருச்சபை முக்காலியானது சில நேரங்களில் தென்கிழக்கில் அதன் டச்சு பெயராகிய “கிரெக்கெட்டு” என்ற சொல்லைக் கொண்டு அழைக்கப்பட்டதென்று கூறுகிறது. 1597ம் ஆண்டு சான் டெர்ரிக்கும் இந்த விளையாட்டிற்கு இதே பெயரையே பயன்படுத்தினார்.[6]

17 மற்றும் 18ம் நூற்றாண்டில் இரண்டு முக்கிய விதமான கிரிக்கெட்டு வடிவங்கள் இருந்தன. ஒன்று ஒற்றை விக்கெட்டு மட்டுமே உள்ள வடிவம். பெயரே சொல்வதைப் போல ஒரு ஆட்டக்காரர் மட்டுமே இருப்பார். மூன்று அல்லது ஐந்து பேர் கொண்ட அணிகளும் பங்கேற்றன. மற்றொன்று இரண்டு விக்கெட்டு வடிவம். இதில் இரண்டு ஆட்டக்காரர்கள் இருப்பார்கள். இதுவே வெகு நாட்களாக ஒவ்வொரு அணியிலும் 11 ஆட்டக்காரர்களைக் கொண்டு விளையாடப்படுகிறது.

கிரிக்கெட்டின் முந்தைய நாட்களில், தற்போது உள்ளதைப் போலவே இரண்டு நடுவர்கள் இருந்தனர். ஆனால் தற்போதையது போல் உள்ள ஆடுபவரின் இடது பக்கம் நிற்கும் நடுவருக்கு மிக அருகிலேயே அவர் நின்று கொண்டிருந்தார். இரண்டு நடுவர்கள் கையிலும் ஒரு மட்டை இருந்தது. ஆடுபவர் ஒரு ஓட்டத்தைப் பெற அந்த மட்டையைத் தொட வேண்டும்.[43] இரண்டு ஓட்டங்களைக் குறிப்பவர்கள் மைதானத்திலேயே அமர்ந்திருப்பர். அவர்கள் குச்சிகளில் பிளவுகள் உண்டாக்கி எண்ணிக்கைகளை ஏற்படுத்திக்கொள்வர். இந்த காரணத்துக்காகவே அப்போது ஓட்டங்கள் என்று அழைக்கப்படாமல் பிளவுகள் என்று அழைக்கப்பட்டது.[44]

முக்கிய கிரிக்கெட்டின் வளர்ச்சி: 1660–1700[தொகு]

1660 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் முடியாட்சி மறுபடியும் ஏற்பட்டதைத் தொடர்ந்து பல திரையரங்குகள் மறுபடியும் திறக்கப்பட்டன மற்றும் அறவாணர்கள் விளையாட்டின் மீது விதித்திருந்த விதிகளையும் தளர்த்தினர்.[45] கிரிக்கெட்டு முதன்மையான பொழுதுபோக்காக இருந்தது, மேலும் “பந்தயக்காரர்களுக்கு சரியானதாக இருந்தது”.[45] இரண்டாம் சார்லசின் காலத்தில் கிரிக்கெட்டு பற்றிய மிகக் குறைவான குறிப்புகளே காணப்பாட்டாலும் அதன் புகழ் அதிகரிக்கத் தொடங்கியது என்றும், அது வெகுவாக பரவத் தொடங்கியது என்றும் தெளிவாகத் தெரிகிறது.[46]

1660ன் வசந்த காலத்தில் மறுசீரமைப்பு முழுவதுமாக முடிந்தது. இதனுடன் இதைத் தொடர்ந்த வரலாற்று நிகழ்வுகள் கிரிக்கெட்டு மற்றும் பிற விளையாட்டுகளில் சுதந்திரமாக சூதாட்டம் நடப்பதற்கு வழி வகுத்தது.[46] அதிகமான பணம் உள்ளிருக்கும் காரணத்தினால், முதலீட்டாளர்கள் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிப்பதற்காக வழக்கமான பாரிசு XI அணியை விட வலிமையான அணிகளை உருவாக்கினார்கள்.[45] இந்த காலத்தில் குதிரை பந்தயம் மற்றும் கௌரவசண்டைகளோடு கிரிக்கெட்டும் முக்கிய விளையாட்டாக ஏற்கப்பட்டது.[22] 18ம் நூற்றாண்டு முழுவதும் கிரிக்கெட்டை கட்டுப்பாட்டில் வைத்திருந்த காப்புரிமை என்பது இந்த கால கட்டத்தில் தொடங்கியது.[45] பல சபைகள் மற்றும் மொத்த மாகாணத்திற்கான அணிகள் முதன் முதலில் 1660களில் தொடங்கப்பட்டது. இந்த கால கட்டத்தில் தான் பல “அற்புதமான போட்டிகள்” (அறிவிக்கப்பட்டப்படியே ) நடந்தன. கிராம அளவு கிரிக்கெட்டில் இருந்து முக்கிய கிரிக்கெட்டாக இந்த விளையாட்டு உருவெடுத்தது.[47]

இந்த மாற்றத்தின் ஒரு குறிப்பிடத்தக்க அம்சம் தொழில்முறை இதில் அறிமுகப்படுத்தப்பட்டது தான்.[45] மறு சீரமைப்பிற்குப் பிறகு லண்டனுக்கு திரும்பி வந்த நோபிலிடியின் உறுப்பினர்கள் கிரிக்கெட்டை மேலும் வளர்க்க மிகவும் முனைப்பாக இருந்தனர். அவர்கள் தங்களோடு கிராம கிரிக்கெட்டின் “நிபுணர்களை” அழைத்து வந்து அவர்களை தொழில்முறை சார்ந்த வீரர்களாக அமர்த்தினர்.[48] மறுச்சீரமைப்புக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்குள் “லண்டன் சமூகத்தில் போட்டிகள் நடத்துவது மற்றும் குழுக்கள் அமைப்பது என்பது ஒரு முக்கிய அங்கமானது”.[48] நோபிலிடி விளையாட்டை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த காரணத்தினால் ஒரு வகையான “தீவிர உரிமையாளர்" உருவானது. இதில் சூதாட்டத்துக்கு இருந்த வாய்ப்புகள் அவர்களின் ஆர்வத்தை அதிகரித்தன. இதுவே அடுத்த நூற்றாண்டில் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு வழி வகுத்தது.[48]

மறு சீரமைப்புக்கு பிறகான பல நடவடிக்கைகளை குறைப்பதற்காக “கவேலியர்” பாராளுமன்றம் விளையாட்டு சட்டம் 1664ல் வெளியிட்டது.[49] இதில் பந்தய பணத்தை £100 என குறைத்தது, ஆனால் அந்த காலத்தில் இது கூட பெரிய தொகையாகவே இருந்தது.[46] இது தற்போதைய காலத்தில் £NaNக்கு நிகரானது.[50] 1697ம் ஆண்டு வரை கிரிக்கெட்டில் 50 கினிக்கள் வரை பந்தையப் பணம் இருக்கும் என்பது அறியப்பட்டவை. அடுத்த நூற்றாண்டு முழுவதும் சூதாட்டமே இதற்கு நிதி அளித்தது.[51]

செய்தித்தாள் துறையில் மிகக் கடினமான கட்டுப்பாடுகளை விதித்த பதிப்பகங்களுக்கான உரிம சட்டம் 1662ன் காரணமாக 17ம் நூற்றாண்டின் கடைசி பகுதி பற்றிய குறிப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன.[52] விளையாட்டுகள், கிரிக்கெட்டு உட்பட, பிரசுரிக்கப்பட வேண்டிய செய்தியாக கருதப்படவில்லை. இந்த காலகட்டத்தைப் பற்றி இருக்கும் சில குறிப்புகள் நீதிமன்ற வழக்குகள் போன்ற அலுவலக கோப்புகள் அல்லது தனிப்பட்ட கடிதங்கள் மற்றும் குறிப்பேடுகளிலேயே காணப்படுகின்றன.

1666 ஆம் ஆண்டில் ரிச்மண்ட் கிரீனில் கிரிக்கெட் விளையாடப்பட்டது.

18ம் நூற்றாண்டில் குறிப்பிடத்தக்க வகையில் இருந்த ரிச்மண்ட் கிரீன் என்ற இடத்தில் நடந்த ஒரு போட்டி பற்றி ரிச்மண்டை சேர்ந்த சர் ராபர்ட் பாசுடன் 1666ல் எழுதிய ஒரு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.[53] 1677ல், சசெக்சு நகரின் முதல் பிரதிநிதியான தாமசு லெனார்டின் வாழ்க்கைக் குறிப்பில், கிழக்கு சசெக்சில் உள்ள கெர்சுட்மோன்ச்யூ என்ற இடத்திற்கு அருகில் இருந்த “யே டிக்கர்” என்ற மைதானத்தில் நடந்த போட்டிக்கு அவர் சென்றதற்காக அவருக்கு £3 வழங்கப்பட்டதாக ஒரு குறிப்பு உள்ளது.[54] 1671ல் எட்வர்டு பௌண்ட் என்பவர் நடைபாதையில் கிரிக்கெட்டு விளையாடியதாக கைது செய்யப்பட்டார். மறுசீரமைப்பினால் மன நிலைகள் மாறத் தொடங்கியதற்கு இது ஒரு சான்றாகும். இந்த வழக்கு சர்ரேயில் உள்ள செரியில் பதிவு செய்யப்பட்டது.[55] 1694ல், லூவிசில் நடந்த ஒரு கிரிக்கெட்டு போட்டிக்காக ஒரு பந்தயக்காரருக்கு 2s 6d வழங்கப்பட்டதாக சர் சான் பெல்காமின் குறிப்புகளில் குறிக்கப்பட்டுள்ளது.[56]

தற்போது மிட்சாம் கிரிக்கெட்டு கிரீன் என்று அழைக்கப்படும் இடத்தில் விளையாடும் குழுவான மிட்சாம் கிரிக்கெட்டு குழு 1685ல் உருவாக்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்த இடம் பல கிரிக்கெட்டு போட்டிகளை அரங்கேற்றி உள்ளது.[57] 1685க்கு முன் எந்த குழுவும் தொடங்கப்பட்டதாக ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் மிட்சாம் தான் உலகின் மிகத் தொண்மையான குழு என்று கருதப்படுகிறது. கிராய்டன், டார்ட்ஃபோர்டு மற்றும் லண்டன் ஆகியவை 1720களில் தொடங்கப்பட்டு விட்டாலும் அவை தொடங்கப்பட்ட சரியான தேதி தொலைந்துவிட்டது. லண்டன் குழு 1722ம் ஆண்டில் தொடங்கப்பட்டதற்கான சரியான குறிப்பு ஒன்று இருந்தது.[58]

ஃபின்சுபரியில் உள்ள துப்பாக்கி சுடும் பயிற்சி உள்ள மைதானத்தோடு லண்டன் CCக்கு வெகுவாக தொடர்பு இருந்தது. 1725ல் மதிப்பிற்குரிய துப்பாக்கி சுடும் நிறுவனத்தின் 7 மே நிமிடங்களால் இந்த இடம் கிரிக்கெட்டிற்காக உபயோகிக்கப்பட்டது என்று குறிப்பிடப்பட்ட போது தான் இந்த இடத்தைப் பற்றிய முதல் குறிப்பு இடம் பெற்றது: “மைதானத்தின் ஆடுகளத்தில் அதிகமாக கிரிக்கெட்டு வீரர்கள் நாசப்படுத்திவிட்டார்கள்” என்ற கவலை இதில் உள்ள ஒரு குறிப்பில் இடம் பெற்றுள்ளது.[59] 18ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இந்த துப்பாக்கிப் போட்டி மைதானம் முக்கியமான கிரிக்கெட்டிற்கான முக்கிய மைதானமாக ஆனது.[60]

1695ல், பாராளுமன்றம் 1662ம் ஆண்டின் அனுமதி சட்டத்தை மறுபடியும் அமலாக்க வேண்டாம் என முடிவெடுத்தது. இதனைத் தொடர்ந்து 1696ல் இந்த சட்டம் முடிவுக்கு வந்தவுடன், பதிப்பாளர்கள் சுதந்திரமாக செயல்பட வழி கிடைத்தது.[61] 1689ம் ஆண்டில் உரிமைகள் சட்டத்தை தொடர்ந்து தணிக்கைகள் ஏற்கெனவே தளர்த்தப்பட்டது.[52] இந்த காலத்தில் இருந்து தான் கிரிக்கெட்டு செய்திகள் செய்தித்தாள்களில் வெளிவரத் தொடங்கியது. ஆனால் பல ஆண்டுகள் வரை செய்தித்தாள்கள் அடிக்கடி செய்திகள் தர தொடங்கின. முழுமையான செய்திகள் தருவதற்கு மேலும் பல ஆண்டுகளாயின.[62] முதல் முதலாக, 7 சூலை 1697ம் ஆண்டு ஃபாரின் போசுட்டு என்ற செய்தித்தாளில் ஒரு போட்டி பற்றிய செய்தி வெளியானது:

"போன வாரத்தின் நடுப்பகுதியில் சசக்சில் ஒரு அற்புதமான கிரிக்கெட்டு போட்டி விளையாடப்பட்டது; ஒவ்வொரு அணியிலும் பதினோறு ஆட்டக்காரர்கள் இருந்தனர் மற்றும் அவர்கள் அணிக்கு ஐம்பது கினிக்கள் என்ற வகையில் விளையாடினர்”.[56]

இந்த போட்டிக்கான பந்தயப்பணம் இந்த போட்டியின் முக்கியத்துவத்தை உணர்த்தியது மற்றும் அணிக்கு பதினோறு பேர் இருப்பது இரண்டு அணிகளும் வலுவானதாக இருந்ததைக் குறிக்கின்றது.[56] மற்ற எந்த விவரங்களும் வழங்கப்படவில்லை. ஆனால், மறுச்சீரமைப்பைத் தொடர்ந்த வருடங்களில் அதிகப் படியான பந்தயப்பணம் வைத்து பெரிய அளவிலான கிரிக்கெட்டு போட்டிகள் “அருமையான போட்டிகள்” என்ற வகையில் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் இந்த ஆவணங்களில் காணப்படுகிறது.[62] இது இரண்டு மாகாணங்களுக்கு இடையேயான போட்டியாக இருக்கலாம். (அதாவது சசெக்ஸ் மற்றும் கெண்டு அல்லது சரேவிற்கு இடையே ). இது முதல் முதலாக அறியப்பட்ட முதல் வரிசை கிரிக்கெட்டு போட்டியாக இருக்கலாம். சசெக்ஸ் மைதானத்தை பொறுத்தவரை ரிச்மண்டின் முதல் பிரபுவான சார்லசு லெனாக்சு கண்டிப்பாக ஒரு காப்பாளராக இருந்துள்ளார்.[62]

18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தின் ஆங்கில கிரிக்கெட்டு[தொகு]

உரிமையாளர்கள்[தொகு]

சார்லஸ் லெனாக்ஸ், ரிச்மண்டின் முதலாவது பிரபு.

1702ல் ரிச்மண்ட் ராசாவின் XI அணி அருண்டேல் XI அணியை தோற்கடித்தது. 1702 ஆம் ஆண்டு டிசம்பர் 14ம் தேதி, சால் பிரேட்லி என்பவர் ராசாவுக்கு அனுப்பிய ஒரு ரசீது தான் இந்த போட்டிக்கான ஆதாரமாக இருந்தது. “ராஜாவின் அணி அருண்டேல் அணியோடு கிரிக்கெட்டு விளையாடிய போது பிராந்திக்காக” ராசா செலுத்திய ஒரு சில்லிங்க் மற்றும் ஆறு பென்சுகளுக்கான ரசீதாகும். வெற்றியை கொண்டாடுவதற்காக பிராந்தி வாங்கப்பட்டது என கருதப்பட்டது.[63]

ரிச்மண்ட் நகரின் முதல் ராசா 1723 ஆம் ஆண்டில் இறந்த பின்னர் அவரது மகனான சார்லசு லெனாக்சு ரிச்மண்டின் இரண்டாவது ராசாவாக ஆனார். தந்தையைப் பின்தொடர்ந்து அவரும் கிரிக்கெட்டின் முக்கிய பயனாளியாகி சசெக்ஸ் கிரிக்கெட்டின் உரிமையாளராக அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு இருந்தார். இரண்டாவது ராசா, மற்றொரு சசெக்சு உரிமையாளரான தனது நண்பர் சர் வில்லியம் காசூடன் நட்புறவு சார்ந்த போட்டி கொண்டிருந்தார். அவர்களது அணிகள் பல முறை மோதியுள்ளன. முதல் முதலாக அறியப்பட்ட போட்டியாவது, சர் வில்லியம்சின் அணி அதிகம் அறியப்படாத ஒரு எதிரணியிடம் தோற்றதற்குப் பின்னர் 1725ம் ஆண்டு சூலை 20ம் தேதி செவ்வாய்கிழமை விளையாடியது. இந்த இரண்டு போட்டிகளைப் பற்றிய எங்களது அறிவு சர் வில்லியம் சூலை 16ம் தேதி அன்று ராசாவிற்கு எழுதிய ஒரு நகைச்சுவையான கடிதம் மூலம் கிடைக்கின்றது. சர் வில்லியம் “ஆண்டின் தனது முதல் போட்டியில் “வெட்கப்படும் வகையில் தோற்கடிக்கப்பட்டதாக” ராசாவிற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் ஆனால் அவர்களது எதிர் அணி பற்றி ஒன்றும் குறிப்பிடவில்லை. அவர் ராசாவின் அணியோடு அடுத்த வாரம் நிகழவிருக்கும் கிரிக்கெட்டு பந்தயத்தை மிகவும் எதிர்பார்ப்பதாகவும் “அவர் செய்யும் அனைத்து காரியங்களிலும் கிரிக்கெட்டு போட்டியைத் தவிர வெற்றி பெற வாழ்த்து கூறுவதாகவும்” எழுதியுள்ளார்.[64]

முதலாவதாக அறியப்பட்ட கெண்ட் காப்பாளரான மைட்சுடோனைச் சேர்ந்த எட்வர்டு சுடேட்டு (சில சமயம் எட்வின் சுடேட்டு என்றும் அழைக்கப்படுபவர்) ரிச்மண்ட் மற்றும் கேசின் முக்கிய எதிரியாக இருந்தார். ரிச்மண்டு மற்றும் கேசின் சசக்சு அணி சுடேட்டின் கெண்ட்டு அணியோடு ஒரு மாகாணங்களுக்கிடையேயான எதிரி மனப்பாண்மையோடு இருந்தது. இதன் மூலம் தான் மாகாண கோப்பை என்பது உருவானது (வெற்றியாளர் மாகாணம் என்பதை பார்க்கவும்).[65][66]

பந்தையக்காரரின் விதிகள்[தொகு]

உரிமையாளர்கள் 18ம் நூற்றாண்டில் கிரிக்கெட்டிற்காக நிதியளித்தனர். ஆனால் அவர்களது ஆர்வம் குதிரைப்பந்தயம், பந்தையப்போட்டி ஆகியவற்றிலும் இருந்தது. கிரிக்கெட்டில் அவர்களுக்கு இருந்த ஆர்வம் அதில் உள்ள பந்தய வாய்ப்புகளின் காரணமாகவே இருந்தது. 18ம் நூற்றாண்டின் ஒவ்வொரு போட்டியும், முதல் தரமானாலும், ஒரு விக்கெட்டு போட்டியானாலும் அவை பந்தயத்துக்காகவே விளையாடப்பட்டன. செய்தித்தாள்கள் இதனை புரிந்து கொண்டு ஆட்ட எண்ணிக்கைகளை பிரசுரிப்பதை விட பந்தயத்தைப் பற்றிய செய்திகளையே வெளியிட்டன. அறிக்கைகள் போட்டியில் வெற்றி பெற்றவர்களைப் பற்றிக் கூறாமல் பந்தயத்தில் வெற்றி பெற்றவர்களைப் பற்றியே கூறின.[47] சில சமயங்களில் சூதாட்டத்தின் விளைவாக சர்ச்சைகள் ஏற்படுவதும் உண்டு. இரண்டு போட்டிகள் நீதி மன்றம் வரை சென்று பந்தயக்காரரின் விதிகளை சட்டப்பூர்வமாக மாற்றவும் கோரிக்கை வைத்தன.

1718 ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் தேதி, திங்கட்கிழமை அன்று சலிங்டனில் வொயிட் காண்ட்யூட் ஃபீல்டில் லண்டன் மற்றும் ரோசசுடர் பஞ்ச் குழுவுக்கும் இடையே நடந்த போட்டியின் போது, போட்டி நிறைவு பெறாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ரோசசுடர் வீரர்கள் வெளியேறியதால் ஆட்டம் முடிவு பெறாமல் நின்றது. தங்களது பந்தயப்பணம் பறிபோகாமல் இருக்க இவ்வாறு செய்தனர். அந்த நேரம், லண்டன் தெளிவாக வெற்றியை நோக்கி சென்றது. லண்டன் வீரர்கள் தாங்கள் வென்ற பணத்திற்காக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், போட்டி முடிவு பெறவில்லை என்ற அடிப்படையில் பந்தயக்காரரின் விதிகள் முக்கியமாக விவாதிக்கப்பட்டது. நீதி மன்றம் போட்டி “முடிவு பெற வேண்டும்” என உத்தரவிட்டது. இந்த போட்டி சூலை 1719ம் ஆண்டு நடந்தது. ரோசசுடர் அணி 4 விக்கெட்டுகள் இருக்கும் நிலையில் 30 ஓட்டங்கள் எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது.[67]

1724ம் ஆண்டில், சிங்ஃபோர்டு மற்றும் எட்வர்டு ஸ்டெட் XI அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஸ்டெட் அணி வலுவான நிலையில் இருந்த போது சிங்ஃபோர்டு அணியினர் விளையாட மறுத்ததால் ஆட்டம் பாதியிலேயே முடிந்தது. வழக்கு ஒன்று தொடரப்பட்டது. 1718ம் ஆண்டை போலவே இந்த முறையும் பந்தயங்கள் அனைத்தும் முடிக்கப்படுவதற்காக ஆட்டத்தை முடிக்க உத்தரவிடப்பட்டது. இந்த வழக்கை லார்டு தலைமை நீதிபதி பிராட் விசாரித்தார் என்பது தெரிய வந்தது. அவர் ஆட்டம் டார்ட்ஃபோர்டு பிரெண்ட் என்ற இடத்தில் நடைபெற வேண்டும் என கட்டளை இட்டார். இதுவே முதலில் ஆட்டம் நடந்த இடம் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆட்டம் 1726ம் ஆண்டில் முடிக்கப்பட்டது.[68] சிங்ஃபோர்டில் தான் ஆட்டம் நடந்தது என எண்ணிக் கொண்டால் இதுவே எசெக்சு நகரில் நடந்த முதல் ஆட்டமாகக் கொள்ளப்படலாம். இதுவே முதலில் அறியப்பட்ட எசெக்சு அணியாகும்.

போட்டிகளுக்கு முன் பந்தயக்காரர்களால் ஒத்துக்கொள்ளப்படும் தொடர்புக்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. உரிமையாளர்கள் மற்றும் போட்டி ஒருங்கிணைப்பாளர்களிடையே இருந்த சிக்கல்களை சரி செய்வதில் பெரிதும் உதவியது. விளையாடுவதற்கான விதிகளை வரையறுக்க இது மிகவும் முக்கியமானதாக இருந்தது மற்றும் இவை கிரிக்கெட்டின் விதிகள் என குறியிடப்பட்டன.[69]

18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலப் போட்டிகள்[தொகு]

18ம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் த போசுட்டு பாய் மற்றும் த போசுட்டு மேன் என்ற பத்திரிக்கைகள் கிரிக்கெட்டு விளம்பரங்களுக்காக மிகவும் உதவியாக இருந்தன. 1700ல் த போசுட்டு பாய்-இல் 30 மார்ச்சு அன்று கிளாப்காம் காமனில் நடைபெறவிருப்பதாக சில போட்டிகளை முன்னதாகவே அறிவிக்கப்பட்டது. அவை முதலாவது ஈசுட்டர் திங்களன்று நடைபெறவிருந்தது மேலும் அதற்கு £10 மற்றும் £20 பரிசுத்தொகையாக கொடுக்கப்பட்டுள்ளது. போட்டி பற்றிய எந்த அறிக்கையும் இல்லாததால் முடிவுகள் மற்றும் எண்ணிக்கைகள் அறியப்படாமல் இருந்தது. ஒவ்வொரு அணியில் 10 “கனவான்கள்” இருப்பார்கள் என்று விளம்பரம் செய்யப்பட்டது. அழைப்புகளில் “கனவான்கள் மற்றும் மற்றவர்களையும்” அழைக்கப்பட்டிருந்தது. 18ம் நூற்றாண்டு முழுவதும் கிரிக்கெட் பெற்ற காப்புரிமை மற்றும் அதன் புகழை பல்லாண்டு காலம் தக்க வைக்கும் பார்வையாளர்களை கிரிக்கெட்டு பெற்றதை இது உணர்த்துகிறது.[70] 1705ம் ஆண்டு சூலை 24ம் தேதி, மேற்கு கெண்ட்டுக்கும் சாத்தமுக்கும் இடையே, ஒவ்வொரு அணியிலும் 11 பேரை கொண்ட விளையாட்டு கெண்ட்டில் உள்ள மாலிங்கில் நடைபெறவிருக்கிறது என்று த போசுட்டு மேன்-இல் அறிவிக்கப்பட்டது.[70]

1707ம் ஆண்டு சூலை ஒன்று மற்றும் மூன்றில் கிராய்டன் லண்டனுடன் இரண்டு முறை விளையாடியது. முதல் ஆட்டம் கிராய்டனில் டுப்பாசு கில் என்ற இடத்திலும், இரண்டாவது லேம்பின் காண்ட்யூட்டு ஃபீல்டு, கால்போர்னிலும் நடைபெற்றது. இரண்டு போட்டிகளும் த போசுட்டு மேன்-இல் “லண்டன் மற்றும் கிராய்டனுக்கிடையே இரண்டு அற்புதமான போட்டிகள் (அறிவிக்கப்பட்டப்படியே ) நடைபெற இருக்கிறது; முதலாவது சூலை முதலாம் தேதி செவ்வாய் கிழமை அன்று கிராய்டனிலும் மற்றொன்று சூலை மூன்றாம் தேதி, செவ்வாய்கிழமை அன்று கால்போர்ன் அருகே லேம்பின் காண்ட்யூட்டு ஃபீல்டில் விளையாடப்பட இருக்கிறது என விளம்பரப்படுத்தப்பட்டது. போட்டிக்கு பின்னான அறிக்கைகள் கிடைக்கப்பெறவில்லை. ஆகையால் முடிவுகள் எண்ணிக்கைகள் தெரியாமலேயே உள்ளது.[70]

மாகாண அணிகள் பங்கேற்றதாக அறியப்படும் முதல் போட்டி 1709ம் ஆண்டு சூன் 29ம் தேதி புதன் கிழமை அன்று டார்ட்ஃபோர்டு பிரெண்டில் கெண்ட்டு மற்றும் சர்ரே அணிகளுக்கிடையே நடைபெற்றது. இது அதற்கு முந்தைய சனிக்கிழமை அன்று போசுட்டு மேனில் விளம்பரப்படுத்தப்பட்டது மேலும் இந்தப் போட்டி £50 பந்தையத்துக்காக விளையாடப்பட்டது. டார்ட்ஃபோர்டு பிரெண்ட் என்பது 18ம் நூற்றாண்டில் கெண்ட்டு மாகாணத்தின் புகழ்பெற்ற மைதானமாகக் கருதப்பட்டது மற்றும் 17ம் நூற்றாண்டில் போட்டிகளுக்காக உபயோகப்படுத்தப்பட்டிருக்கலாம். இந்த காலகட்டத்தில் முதல் கெண்ட்டு குழுவான டார்ட்ஃபோர்டு இடத்தை மட்டும் அளிக்காமல் அணிக்கு வீரர்களையும் அளித்தது. சர்ரே அணி பல சர்ரே சபைகளில் இருந்து உருவாக்கப்பட்டு அதன் உரிமையாளர்களால் உரிமம் பெறப்பட்டிருக்கலாம்.[71]

முதன் முதலாக சிறந்த வீரராக பதிவு செய்யப்பட்ட டார்ட்ஃபோர்டை சேர்ந்த வில்லியம் பீடில் (1680-1768) 1709ம் ஆண்டு போட்டியில் பங்கு பெற்றிருக்கலாம். "இங்கிலாந்திலேயே மிகச் சிறந்த நிபுணத்துவம் வாய்ந்த வீரர்" என்று கூட இவர் கருதப்பட்டார் மேலும் சிறந்த வீரராக ஏறக்குறைய 1700ம் ஆண்டு முதல் 1725ம் ஆண்டு வரை இருந்திருப்பார்.[72] 1720களில் அறியப்பட்ட மற்ற சிறந்த வீரர்கள்: கெண்ட்டை சேர்ந்த எட்வர்டு சுடேட்டு; சர்ரேவைச் சேர்ந்த எட்மண்ட்டு சேப்மேன் மற்றும் சுடீபன் டிங்கேட்டு; லண்டனைச் சேர்ந்த டிம் கோல்மேன் மற்றும் சசெக்சை சேர்ந்த தாமசு வேமார்க்.

டார்ட்ஃபோர்டு மற்றும் லண்டனுக்கு இடையேயான போட்டி[தொகு]

கிரிக்கெட்டு வரலாற்றில் முதல் பெரிய எதிரிகளாக இருந்தவை டார்ட்ஃபோர்டு மற்றும் லண்டன் குழுக்கள். இவை முதன் முதலில் 1722ல் எதிர்த்து விளையாடின. 1719ம் ஆண்டு ஆகத்து 19ம் தேதியன்று வொயிட்டு காண்ட்யூட் ஃபீல்டில் லண்டன் மற்றும் கெண்ட்டு அணிகள் மோதின. இதில் கெண்ட்டு வெற்றி பெற்றது. இதுவே உறுதி செய்யப்பட்ட முதன் முதலில் கிடைத்த முடிவாகும். அறிக்கையில் “அணிகள் ஒரு கணிசமான தொகைக்காக விளையாடியதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது”.[68]

1720ம் ஆண்டு சூலை 19ம் தேதி சனிக்கிழமை அன்று வொயிட்டு காண்ட்யூட்டு ஃபீல்டில் நடந்த லண்டன் மற்றும் கெண்ட்டு அணிக்கிடையேயான போட்டியில் லண்டன் வெற்றிபெற்றது. இந்த போட்டியில் தலைகள் மோதிக் கொண்டதால் இரண்டு லண்டன் வீரர்கள் தீவிரமாக காயமடைந்தனர்.[68] இந்த போட்டிக்கு பிறகு சில வருடங்களுக்கு விளம்பரம் மற்றும் அறிக்கைகள் வெளிவருவது நின்றது என்றும் இது இந்த விளையாட்டு ஆபத்தானது என்ற எண்ணம் உருவானதனால் இருக்கலாம் என்றும் எச்.டி. வாகோம் எழுதியுள்ளார்.[68] சரியான காரணம் சவுத் சீ பபுளின் தாக்கமாகும். சவுத் சீ நிறுவனம் கலைக்கப்பட்ட பிறகு 1720ல் ஏற்பட்ட சரிவு பொருளாதாரத்தில் மிகுந்த பின்னடைவை ஏற்படுத்தியது. முன்பு செழிப்பாக இருந்த பல முதலீட்டாளர்கள் அழிந்து போயினர். இதில் கிரிக்கெட்டின் சில உரிமையாளர்களும் இருந்தனர். காப்புரிமை மற்றும் முதலீட்டை நிறுத்தியதன் காரணமாக சில போட்டிகளே நடத்தப்பட்டது தான் அறிக்கைகள் குறைவானதற்குக் காரணம்.[73]

1722ம் ஆண்டு சூலை 21ம் தேதியன்று வெளியான த வீக்லி சர்ணலில் வெளிவந்த ஒரு கடிதம் லண்டன் மற்றும் டார்ட்ஃபோர்டு இடையே சலிங்டனில் நடந்த போட்டி பற்றியதாக இருந்தது. இந்த போட்டியின் முடிவு அறியப்படவில்லை. 1723ம் ஆண்டில், புகழ்பெற்ற டோரி அரசியல்வாதியான ஆக்ஸ்ஃபோர்டு நகரின் ராபர்ட்டு கார்லி தனது பத்திரிக்கையில் எழுதியதாவது: "டார்ட்ஃபோர்டில் நகருக்கு வெளியே வரும் போது டான்பிரிட்சை சேர்ந்த ஆண்கள் மற்றும் டார்ட்ஃபோர்டை சேர்ந்த ஆண்கள் ஒரு அருமையான கிரிக்கெட்டு போட்டியில் ஈடுபட்டிருந்தனர். இதில் இங்கிலாந்தில் உள்ள அனைவரையும் விட கெண்ட்டு மக்கள் தலை சிறந்தவர்களாக அறியப்படுகின்றனர். கெண்ட்டில் உள்ள அனைத்து ஆண்களில் டார்ட்ஃபோர்டை சேர்ந்த ஆண்கள் தலை சிறந்தவர்களாக விளங்குகிறார்கள்”.[74] இந்த போட்டி டார்ட்ஃபோர்டு பிரெண்டில் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் மிக அதிகம்.[74]

தற்போது ஓவல் மைதானம் இருக்கும் இடத்திற்கு அருகே உள்ள கென்னிங்டன் காமனில் நட்ந்ததாக அறியப்படும் முதல் போட்டி 1724ம் ஆண்டு சூன் 18ம் தேதி வியாழனன்று லண்டன் மற்றும் டார்ட்ஃபோர்டு அணிகளுக்கிடையே நடைபெற்றது. முடிவு அறியப்படவில்லை.[75] 1724 ஆம் ஆண்டு ஆகத்து 10ம் தேதி, சலிங்டனில் ஒரு போட்டி நடந்தது (முடிவு அறியப்படவில்லை). இதில் பென்சருத்து, டன்பிரிஞ்சு மற்றும் வாட்டு கர்ச்சுட்டு ஆகிய சபைகளின் கலவையான அணி டார்ட்ஃபோர்டை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியை பார்த்திருக்கக் கூடிய ஒரு சான் டாசன் என்பவரால் ஒரு குறிபேட்டில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. வேறு எந்த விவரமும் தெரியவில்லை. ஆனால் திரு. டாசன் அவர்கள் இது ஒரு “சிறந்த கிரிக்கெட்டு போட்டி” என்று மட்டும் குறிப்பிட்டுள்ளார்.[76]

இங்கிலாந்து மற்றும் வெளிநாடுகளில் கிரிக்கெட்டின் வளர்ச்சி[தொகு]

இங்கிலாந்துக்கு வெளியே விளையாடப்பட்டதாக அறியப்படும் முதல் கிரிக்கெட்டு போட்டி பற்றிய குறிப்பு, 1676ம் ஆண்டு மே 6ம் தேதி சனிக்கிழமை என்று தேதியிடப்பட்டுள்ளது. துருக்கியில் உள்ள அலெப்போவிற்கு (தற்போது சிரியாவில்) பிரிட்டிசு குழுவில் ஒரு அங்கமாக சென்ற கென்ரி டோங்கே என்ற குறிப்பாளர், “குறைந்தது 40 ஆங்கிலேயர்கள் பொழுதுபோக்கு செயல்பாட்டிற்காக நகரத்தை விட்டுச் சென்றனர் என்றும் இரவு உணவுக்கு கூடாரம் போட ஒரு நல்ல இடம் கிடைத்தவுடன் அங்கு பல செயல்களில் ஈடுபட்டனர் என்றும் கூறப்பட்டுள்ளது. இதில் "கிரிக்கெட்டும்" ஒன்று. 6 மணிக்கு அவர்கள் “எந்த பாதிப்பும் இல்லாமல் திரும்பி வந்தனர்” என்று குறிப்பிடுகிறார்.[77]

இந்த காலகட்டத்தில் கிரிக்கெட்டு இந்தியா, வட அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இடங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு விடப் பட்டிருந்தது.[78] ஆனால் உறுதியாக சொல்லக்கூடிய முதல் குறிப்பு 18ம் நூற்றாண்டில் காணப்படுகிறது. 1709ம் ஆண்டில், அப்போது ஆங்கில காலணியாக இருந்த வெர்சினியாவில் உள்ள தனது சேன்சு ரிவர் பண்ணை வீட்டில் வெசுடோவரை சேர்ந்த வில்லியம் பைர்டு கிரிக்கெட்டு விளையாடினார். புது உலகத்தில் கிரிக்கெட்டு விளையாடியதற்கான முதல் குறிப்பு இதுதான்.[79] 1721ல், கிழக்கு இந்திய கம்பெனியை சேர்ந்த ஆங்கில மாலுமிகள் பரோடாவிற்கு அருகே காம்பே என்ற இடத்தில் கிரிக்கெட்டு விளையாடியதாக அறியப்பட்டது. இதுவே இந்தியாவில் கிரிக்கெட்டு விளையாடியதாக அறியப்படும் முதல் குறிப்பாகும். கிழக்கு இந்திய நிறுவனம் வழியாகத் தான் கிரிக்கெட்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டு வளர்க்கப்பட்டது; பின்னர் பாகிசுத்தான், சிரீலங்கா மற்றும் வங்க தேசத்துக்கும் சென்றது.[10]

1725ம் ஆண்டு வரை தற்போது டெச்ட்டு கிரிக்கெட்டு விளையாடும் மற்ற மூன்று நாடுகளுக்கு ஆங்கில ஆதிக்கம் ஏற்பட்டிருக்கவில்லை. 1640களில் அசுத்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகியவற்றை ஏபில் தாசுமான் பகுதியாக ஆதிக்கம் செலுத்தினாலும்[80] அவற்றில் பாரம்பரிய மற்றும் மவோரி மக்கள் மட்டுமே இருந்தனர். தற்போது கேப் டவுன் என்று அறியப்படும் இடத்திற்கு அருகே டேபிள் பேயில் கேப் காலணி என்பதை டச் கிழக்கு இந்திய நிறுவனம் நிறுவியது. இதுவே 1652ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதியன்று உருவாக்கப்பட்ட தென் ஆப்பிரிக்காவின் முதல் ஐரோப்பிய குடியிருப்பாகும்.[81]

பிரிட்டிசு ஐல்களுக்கு செல்வதற்கு முன்னரே அமெரிக்க நாடுகள் மற்றும் இதியாவிற்கும் கிரிக்கெட்டு அறிமுகம் செய்யப்பட்டிருக்கலாம். 1751ம் ஆண்டு வரை, இங்கிலாந்து விளையாட்டின் மிகச் சிறந்த குழுவான யார்சையரில் கிரிக்கெட்டு விளையாடப்பட்டதற்கான எந்த பதிவும் இல்லை. 18ம் நூற்றாண்டின் கடைசி பகுதியில் அல்லது அதற்கு பின்னர் தான் சுகாட்லாந்து, அயர்லாந்து மற்றும் வேல்சு ஆகிய இடங்களில் கிரிக்கெட்சு விளையாடப்பட்டதற்கான குறிப்புகள் உள்ளன.[10]

இங்கிலாந்தின் கடல் பயணங்கள் மற்றும் வணிக ஆர்வங்கள் வெளிநாடுகளில் கிரிக்கெட்டு வளர்ந்து பெருக காரணமாயின. ஆனால் உள்நாட்டில் அது போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சுலபமாக இருப்பதையே நம்பி இருந்தது. நதி மற்றும் கடல் வழி கப்பல்கள் மூலமாகவே பெரிய பயணங்கள் மேற்கொள்ளப்படுவதால் இவற்றில் பெரும்பாலானவை போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு சுலபமாக இருப்பதையே நம்பி இருந்தது.[82] தரை வழி போக்குவரத்து மெதுவாக வளரத் தொடங்கி இருந்தது. 1706ல், பாராளுமன்றம் முதல் சுங்கச்சாவடிகளை அமைத்தது. இதில் உள்ளூர் நில அதிபர்கள் மற்றும் வணிகர்கள் கொண்ட குழு ஒன்றை அமைத்து ஒரு சாலை போடும் பணியை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்து சாலை அமைக்கப்பட்டது.[83] சுங்கங்களில் கிடைக்கும் வருமானத்தை மூலதனமாக வாங்கி இந்த சாலைகளை நெடுஞ்சாலை குழுக்கள் பராமரித்தன. அடுத்த 150 ஆண்டுகளுக்கு இந்த வழக்கமே இருந்தது மற்றும் இங்கிலாந்து முழுவதும் கிரிக்கெட்டு வளர சரியான நேரத்தில் உதவியாக இருந்தது.[82]

குறிப்புகள் மற்றும் எடுத்துக்காட்டுகள்[தொகு]

  1. அண்டர்டவுன், ப. 6.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 ஆல்தம், அதிகாரம் 1.
  3. ஃப்லாண்டர்ஸில் இடைக்காலத்து டச் மொழி பயன்படுத்தப்பட்டு வந்தது.
  4. 4.00 4.01 4.02 4.03 4.04 4.05 4.06 4.07 4.08 4.09 4.10 4.11 4.12 பிர்லே, அதிகாரம் 1.
  5. போவன், ப. 33.
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 டேவிட் டெர்ரி, கிரிக்கெட்டின் 17ம் நூற்றாண்டு விளையாட்டு: விளையாட்டின் ஒரு மறுசீரமைப்பு பரணிடப்பட்டது 2009-06-21 at the வந்தவழி இயந்திரம். 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி மீட்கப்பட்டது.
  7. "லீச் – 1597". Archived from the original on 2012-06-29. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.. 2009ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி மீட்கப்பட்டது.
  8. ஆல்தம், ப. 24.
  9. ஜான் அர்லாட் மற்றும் ஃப்ரெட் ட்ரூமேன், ஆன் கிரிக்கெட் , BBC புக்ஸ், 1977.
  10. 10.0 10.1 10.2 10.3 போவன், ப. 261-267.
  11. மெக்கன், 98, 361 மற்றும் 377 பத்திகள்.
  12. போவன், ப. 29.
  13. ஆக்சுபோர்டு இங்கிலிசு டிக்குசனரி – "கிராக்கு (பெயர்ச்சொல்லாக)" I.5.c.
  14. சியோவானி ஃபிளோரியோ இத்தாலிய/ஆங்கில அகராதி: அ வார்லுடே ஆஃபு வேர்டுசு (1598). 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.
  15. சியோவானி ஃபுளோரியா, குவீன் அன்னாசு நியூ வருலுடு ஆஃபு வருடுசு (1611), எஃபு. 144 மற்றும் எஃபு. 198. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.
  16. 16.0 16.1 மெக்கன், ப. xxxi.
  17. அண்டர்டுடவுன், ப. 4.
  18. 18.0 18.1 மெக்கன், ப. xxxiii-xxxiv.
  19. மெக்கன், ப. xxxix.
  20. ஹேக்ராத், ப. xvi.
  21. மெக்கன்னு, 2-24 பத்திகள்.
  22. 22.0 22.1 22.2 வெப்பர், ப. 10.
  23. மெக்கன், ப. xxxiv-xxxvii.
  24. மெக்கன், ப. xxxviii-xxxix.
  25. அண்டர்டவுன், ப. 11-12.
  26. போவன், ப. 267, 1792, அயர்லாந்தில் முதன் முதலில் அறியப்பட்ட போட்டியின் தேதியாக பதிவுசெய்யப்பட்டது.
  27. 27.0 27.1 போவன், ப. 45.
  28. பெர்லே, ப. 7.
  29. போவன், ப. 47.
  30. அண்டர்டவுன், ப. 15.
  31. பெர்லே, அதிகாரம் 3.
  32. பெர்லே, அதிகாரம் 18.
  33. ஆல்தம், ப. 66.
  34. ஆல்தம், ப. 24-25.
  35. மேசர், ப. 45.
  36. பிரான்சிய கேமனின் ஆர்டிலரி மைதானத்தில் உள்ள கிரிக்கெட்டு என்ற ஓவியம், 1743. லார்ட்சு கிரிக்கெட்டு மைதானத்தில் அது தொங்கவிடப்பட்டுள்ளது.
  37. பந்துவீச்சாளர்கள் பந்தை தரையில் அடித்து அதை காற்றில் பறந்து செல்லுமாறு வீச ஆரம்பித்தப்பிறகிலிருந்து 1760களில் நவீன நேரான மட்டை தோற்றுவிக்கப்பட்டது.
  38. ஜி.டி. மார்டினா, பேட்டு, பால், விக்கட்டு அண்டு ஆல் , விளையாட்டு கைப்புத்தகங்கள், 1950.
  39. ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி – "battledore (பேட்டில்டோர்)".
  40. 40.0 40.1 வெசுடன் கிரிக்கெட்டர்சு ஆல்மனாக்கு , "டேட்ஸ் இன் கிரிக்கெட்டு கிசுடரி" (1978). 2008ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.
  41. அயன் கிரேவன், மார்டின் கிரே மற்றும் செரால்டைன் சுடோன்காம் ஆஸ்திரேலியன் பாப்புலர் கல்ச்சர் , பிரித்தானிய அசுத்திரேலியன் சுடடீசு அசோசியேசன், 1994. கேம்ரிட்சு யூனிவர்சிட்டி பிரசு பப்புலர் கல்ச்சர் ISBN 0-521-46667-9. பக்கம் 27 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.
  42. வேக்கார்டு, ப. 3.
  43. ஆல்தம், ப. 27.
  44. ஆல்தம், ப. 28.
  45. 45.0 45.1 45.2 45.3 45.4 லீச் – த ஆரிஜன் ஆஃப் மேஜர் கிரிக்கெட். 2010 ஆம் ஆண்டு சனவரி 10ம் தேதி மீட்கப்பட்டது.
  46. 46.0 46.1 46.2 பெர்லே, ப. 11.
  47. 47.0 47.1 பெர்லே, அதிகாரம் 2.
  48. 48.0 48.1 48.2 ஆல்தம், ப. 23.
  49. லீச் – 1664. 2010 ஆம் ஆண்டு சனவரி 10ம் தேதி மீட்கப்பட்டது.
  50. UK CPI inflation numbers based on data available from Measuring Worth: UK CPI.
  51. பக்லே, ப. 1.
  52. 52.0 52.1 லீச்– 1696. 2010 ஆம் ஆண்டு சனவரி 10ம் தேதி மீட்கப்பட்டது.
  53. ஓல்டு ஃபாதர் தேம்சு தளம் பரணிடப்பட்டது 2011-09-18 at the வந்தவழி இயந்திரம். 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.
  54. மெக்கன், ப. xl.
  55. மேஜர், ப. 31.
  56. 56.0 56.1 56.2 மெக்கன், ப. xli.
  57. ஃபில் சா, த இண்டிப்பெண்டண்டு, 13 ஜூலை 2003, கிரிக்கெட்டு: ஆஃப்டர் 400 இயர்சு, கிசுடர் இசு மேட்டு நெக்சுட்டு டூ தி A323 பரணிடப்பட்டது 2007-10-06 at the வந்தவழி இயந்திரம். 2007ம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி மீட்கப்பட்டது. எடுத்துக்காட்டு: "மிட்சாம் கிரீன், 317 ஆண்டுகளாக கிரிக்கெட்டு தளமாக தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது".
  58. த வீக்லி சார்னலில் (லண்டன்) உள்ள கடிதம், 1722ம் ஆண்டு 21ம் தேதியிடப்பட்டது.
  59. லீச் – 1725. 2010 ஆம் ஆண்டு சனவரி 10ம் தேதி மீட்கப்பட்டது.
  60. ஆல்தம், ப. 29-30.
  61. லீச் – 1695. 2010 ஆம் ஆண்டு சனவரி 10ம் தேதி மீட்கப்பட்டது.
  62. 62.0 62.1 62.2 "லீச் – 1697". Archived from the original on 2012-08-02. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 28ம் தேதி மீட்கப்பட்டது.
  63. மெக்கன், பத்தி 1.
  64. மெக்கன், பத்தி 19.
  65. வேக்ஹார்ன், ப. 7.
  66. "1728ம் ஆண்டிலிருந்து உள்ள வெற்றியாளர் மாகாணங்கள்". Archived from the original on 2012-08-04. பார்க்கப்பட்ட நாள் 2010-05-06.. 2008ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மீட்கப்பட்டது.
  67. பக்லே, ப. 2.
  68. 68.0 68.1 68.2 68.3 வேக்ஹார்ன், ப. 5-6.
  69. பெர்லே, ப. 18-19.
  70. 70.0 70.1 70.2 வேக்கார்ன், ப. 4.
  71. சி. பி. பக்லே, ஃப்ரெசு லைட் ஆன் ப்ரீ-விக்டோரியன் கிரிக்கெட்டு , கோட்டெரெல், 1937.
  72. பக்லே, ப. 48.
  73. பெர்லே, ப. 16.
  74. 74.0 74.1 டார்ட்ஃபோர்ட்டு கிரிக்கெட்டு கிளப் இணையதளம். 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.
  75. பக்லே, ப. 3.
  76. மெக்கன், பத்தி 18.
  77. ஹேகிராத், ப. vi.
  78. சைமன் வோரால், கிரிக்கெட்டு, யார்வேண்டுமானாலுமா? , சுமித்சோனியன் இன்ஸ்டியூசன் மேகசின், 2006 அக்டோபர். 2008ம் ஆண்டு மார்ச்சு 9 அன்று மீட்கப்பட்டது.
  79. வில்லியம் பைட், த சீக்ரட் டைரி ஆஃப் வில்லியம் பைட் ஆஃப் வெசுடோவர் , டையட்சு வெளியீடு, 1941, ப. 144-146.
  80. த டாசுமேன் பேட்சு அட் பிராசக்டு கட்டன்பெர்க் ஆஃப் அசுத்திரேலியா. 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி மீட்கப்பட்டது.
  81. ரோசர் பி. பெக், த கிசுட்டரி ஆஃப் சவுத் ஆப்ரிக்கா , க்ரீன்வுட், 2000.
  82. 82.0 82.1 லீச் – 1706. 2008ம் ஆண்டு அக்டோபர் 17ம் தேதி மீட்கப்பட்டது.
  83. வில்லியம் ஆல்பர்டு, இங்கிலாந்தில் உள்ள சுங்கச்சாவடி சாலை அமைப்பு 1663-1840 , கேம்பிரிட்சு யூனிவர்சிட்டி அச்சகம், 1972.