லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம்

ஆள்கூறுகள்: 30°28′04″N 78°03′14″E / 30.4677°N 78.0540°E / 30.4677; 78.0540
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம்
Lal Bahadur Shastri National Academy of Administration
लाल बहादुर शास्त्री राष्ट्रीय प्रशासन अकादमी
முந்தைய பெயர்
தேசிய நிர்வாக நிறுவனம்
குறிக்கோளுரை"शीलं परम भूषणम्"(சமசுகிருதம்)
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
"Character is the highest virtue"
பண்பே மிக உயர்ந்த நல்லொழுக்கம்
வகைபொது நிர்வாகம் பயிற்சி நிறுவனம்
உருவாக்கம்1958
பணிப்பாளர்சஞ்சீவ் சோப்ரா, இந்திய ஆட்சிப் பணி
அமைவிடம்
இணையதளம்www.lbsnaa.gov.in

லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக நிறுவனம் (Lal Bahadur Shastri National Academy of Administration) என்பது இந்தியாவில் பொதுச் சேவை மற்றும் பொது நிர்வாகம் குறித்த குடிமை சேவை பயிற்சி நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கம் இந்திய ஆட்சிப் பணி நிலை அரசு ஊழியர்களுக்குப் பயிற்சி அளிப்பதும், குழு-ஏ மத்திய குடிமைப் பணி அமைப்பு பாடநெறியை நடத்துவதும் ஆகும். பயிற்சி முடிந்ததும், இந்திய ஆட்சிப் பணி நிலை பயிற்சி அதிகாரிகளுக்குத் தில்லியின் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம். ஏ. (பொது மேலாண்மை) பட்டம் வழங்கப்படுகிறது. இது 1985 முதல் மத்தியப் பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள் மற்றும் ஓய்வூதியம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.

கண்ணோட்டம்[தொகு]

சிறப்பு அஞ்சல் முத்திரை, 2009ஆம் ஆண்டு

இந்தியாவில், நாட்டின் முதன்மையான பொதுட் சேவைகளின் பெரும்பாலான அதிகாரிகள் ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிர்வகிக்கப்படும் இந்தியக் குடியியல் பணிகள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரர்கள் நான்கு மாத அடிப்படை பாடத்திட்டத்தின் மூலம், அனைத்து பயிற்சியாளர்களிடையேயும் "சமத்துவம்" என்ற உணர்வு அறிமுகப்படுத்தப்படுகிறது.

முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக கழகம்

இதன் பின்னர், இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் இந்தப் பயிற்சி நிறுவனத்தில் தங்கள் தொழில்முறை பயிற்சியைத் தொடர்கின்றனர். அதே நேரத்தில் மற்ற சேவைகளின் அதிகாரிகள் இந்திய வெளியுறவு சேவை அதிகாரிகளுக்காகப் புதுதில்லியில் உள்ள சுஷ்மா சுவராஜ் வெளிநாட்டுச் சேவை நிறுவனம் போன்ற அந்தந்த பணியாளர் கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். இந்தியக் காவல்துறை சேவை அதிகாரிகளுக்காக ஐதராபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் தேசிய காவல் அகாதமி மற்றும் இந்திய வன சேவை அதிகாரிகளுக்காக தேராதூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வன அகாதமி , தேசிய வருவாய் சேவை அதிகாரிகளுக்கான சுங்க மறைமுக வரி மற்றும் போதைப்பொருள் அகாதமி போன்றவை பயிற்சியளிக்கின்றன.

இந்த பயிற்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டில் இந்திய நிர்வாக சேவையின் அதிகாரிகளுக்கான இடைநிலை பணிக்கால பயிற்சி திட்டங்களையும் நடத்தத் தொடங்கியது. கூட்டுச் செயலாளர்களாக வரவிருக்கும் சுமார் 15 வருடப் பணி அனுபவம் உடைய அதிகாரிகள் நிலை IV மத்திய தொழில் பயிற்சித் திட்டத்திற்கு உட்படுகின்றனர். சுமார் எட்டு வருடச் சேவையுடன் கூடிய அதிகாரிகள் மூன்றாம் கட்ட இடைநிலை பணி பயிற்சி திட்டத்திற்கு உட்படுகின்றனர். பொது நிர்வாகத்தின் பல்வேறு அம்சங்களில் பல குறுகிய கால பயிற்சி திட்டங்களையும் இந்நிறுவனம் நடத்துகிறது.

இந்த அகாதமி பல ஆராய்ச்சி மையங்களின் ஆளுகை மற்றும் பொது நிர்வாகம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிக்கு உதவுகிறது. இவற்றில் சில தன்னாட்சி தகுதியினைக் கொண்டுள்ளன. அகாதமியின் மிக முக்கியமான ஆராய்ச்சி மையம் நிர்வாக இயக்குநர் ஒருவர் தலைமையிலான தேசிய நிர்வாக ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இந்த அகாதமியில் பேரிடர் மேலாண்மை மையம், ஊரக ஆய்வு மையம், பாலின மையம் மற்றும் கிராமிய கடன் மையம் ஆகியவற்றுடன் செயல்படுகிறது.

வசதிகள்[தொகு]

புதிதாகக் கட்டப்பட்ட ஆதர்ஷிலா மற்றும் கன்ஷிலா கட்டிடங்களில் ஆசிரிய மற்றும் பணியாளர் அலுவலகங்கள், கணினி மண்டபம் மற்றும் விரிவுரை அரங்குகள் உள்ளன. கலாச்சார நிகழ்ச்சிகளுக்கும் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படும் மிகப்பெரிய மத்திய மண்டபம் சம்பூர்ணானந்த் கலையரங்கத்துடன் கூடியது. இந்திரா பவன் வளாகம் முதன்மை வளாகத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்குக் குறுகிய கால பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

இந்த கழகத்தில் பெரிய விளையாட்டு வளாகம், நூலகம், கணினி வசதிகள் மற்றும் ஒய்-ஃபை மற்றும் உறைவிட மாணவர்களுக்கான விடுதிகளும் உள்ளன.[1]

இயக்குநர்கள்[தொகு]

இந்தப் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர்களின் பட்டியலை 1959இல் தொடங்கியதிலிருந்து அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.

வ. எண் பெயர் முதல் வரை நிலை மாநிலம்
24 சஞ்சீவ் சோப்ரா 1 சனவரி 2019 31 மார்ச் 2021 இஆப மேற்கு வங்காளம்
23 உப்மா சவுத்ரி 11 திசம்பர் 2016 31 திசம்பர் 2018 இஆப இமாச்சலப் பிரதேசம்
22 ராஜீவ் கபூர் 1 மார்ச் 2014 9 திசம்பர் 2016 இஆப உத்தரப் பிரதேசம்
21 பதம்வீர் சிங் 2 திசம்பர் 2010 28 பெப்ரவரி 2014 இஆப மத்தியப் பிரதேசம்
20 ருத்ரா கங்காதரன் 6 ஏப்ரல் 2006 2 செப்டம்பர் 2009 இஆப கேரளம்
19 டி.எஸ். மாத்தூர் 29 அக்டோபர் 2004 6 ஏப்ரல் 2006 இஆப மத்தியப் பிரதேசம்
18 பினோத் குமார் 20 சனவரி 2003 15 அக்டோபர் 2004 இஆப நாகலாந்து
17 வஜாஹத் ஹபீபுல்லா 8 நவம்பர் 2000 13 சனவரி 2003 இஆப சம்மு காசுமீர்
16 பி.எஸ். பாஸ்வான் 6 அக்டோபர் 1996 8 நவம்பர் 2000 இஆப மத்தியப் பிரதேசம்
15 என்.சி.சக்ஸேனா 25 மே 1993 6 அக்டோபர் 1996 இஆப உத்தரப் பிரதேசம்
14 பி.என். யுகந்தர் 26 மே 1988 25 சனவரி 1993 இஆப ஆந்திரப் பிரதேசம்
13 ஆர்.என். சோப்ரா 6 ஜுன் 1985 29 ஏப்ரல் 1988 இஆப மத்தியப் பிரதேசம்
12 கே.ராமானுஜம் 27 பெப்ரவரி 1984 24 பெப்ரவரி 1985 இஆப பிகார்
11 ஆர்.கே. சாஸ்திரி 9 நவம்பர் 1982 27 பெப்ரவரி 1984 இஆப ராஜஸ்தான்
10 ஐ. சி. பூர் 16 ஜுன் 1982 11 அக்டோபர் 1982 இஆப பஞ்சாப்
9 பி. எஸ். அப்பு 2 ஆகஸ்ட் 1980 1 மார்ச் 1982 இஆப பிகார்
8 ஜி.சி.எல். ஜோன்ஸ் 23 ஜூலை 1977 30 ஜுன் 1980 இஆப ஒடிசா
7 பி.சி. மாத்தூர் 17 மே 1977 23 ஜூலை 1977 இஆப ஒடிசா
6 ராஜேஸ்வர் பிரசாத் 11 மே 1973 11 ஏப்ரல் 1977 இஆப உத்தரப் பிரதேசம்
5 டி. டி. சேத்தி 19 மார்ச் 1969 11 மே 1973 இகுப -
4 கே.கே. தாஸ் 12 ஜூலை 1968 24 பெப்ரவரி 1969 இகுப -
3 எம். ஜி. பிம்புட்கர் 4 செப்டம்பர் 1965 29 ஏப்ரல் 1968 இகுப -
2 எஸ்.கே. தத்தா 13 ஆகஸ்ட் 1963 2 ஜூலை 1965 இகுப -
1 ஏ. என். ஜா 1 செப்டம்பர் 1959 30 செப்டம்பர் 1962 இகுப -

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Facilities". Lal Bahadur Shastri National Academy of Administration. Archived from the original on 19 May 2017. பார்க்கப்பட்ட நாள் 16 March 2017.

வெளி இணைப்புகள்[தொகு]