ஜார்னா தாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜார்னா தாசு பைத்யா
Jharna Das
மாநிலங்கவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
3 ஏப்ரல் 2010
முன்னையவர்மாடிலால் சர்கார்
தொகுதிதிரிபுரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு1 அக்டோபர் 1962 (1962-10-01) (அகவை 61)
மிர்சா, உதய்பூர், திரிபுரா
அரசியல் கட்சிஇந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)
துணைவர்கௌசிக் பைத்யா
வாழிடம்(s)அகர்தலா, திரிபுரா
As of 21 நவம்பர், 2010
மூலம்: [1]

ஜார்னா தாசு (Jharna Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1962 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தேதியன்று இவர் பிறந்தார். ஜார்னா தாசு பைத்யா என்றும் இவர் அழைக்கப்படுகிறார். இவர் இந்தியப் பொதுவுடமைக் கட்சியின் மார்க்சியப் பிரிவைச் சேர்ந்தவர். மாநிலங்களவையில் திரிபுரா மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்திய நாடாளுமன்றத்தில் ஓர் உறுப்பினராக உள்ளார். 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜார்னா தாசு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] திரிபுரா இந்தியப் பொதுவுடைமைக் கட்சி மார்க்சியப் பிரிவின் மாநிலக்குழு உறுப்பினராக தாசு செயல்பட்டு வந்தார். நாடாளுமன்ற உறுப்பினராவதற்கு முன்னர் இவர் மாநில சமூக நல வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.[2].

திரிபுராவிலிருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தலித் பெண் என்ற சிறப்பும் மாநிலங்கவையில் திரிபுராவினை பிரிதிநிதித்துவப்படுத்தும் இரண்டாவது பெண் உறுப்பினர் என்ற சிறப்பும் ஜார்னா தாசுக்கு உரியவையாகும். [1]

2016 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 21 அன்று நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் , ஜார்னா தாசு பைதியா 49 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசு கட்சி வேட்பாளர் 10 வாக்குகள் மட்டுமே பெற்றார். [3] இவ்வெற்றியின் மூலம் ஜார்னா தாசு இரண்டாவது முறையாக மாநிலங்கள் அவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "CPI(M) Wins Tripura RS Seat Unopposed". Archived from the original on 12 August 2012. பார்க்கப்பட்ட நாள் 19 June 2010.
  2. "CPI(M) Nominee for Tripura RS Seat". Archived from the original on 8 August 2012. பார்க்கப்பட்ட நாள் 19 June 2010.
  3. "CPI-M's Jharna Das Baidya re-elected to Rajya Sabha from Tripura". Business Standard. 21 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 January 2021.
  4. "CPI(M) fields Jharna Das Baidya as candidate for Rajya Sabha poll". தி எகனாமிக் டைம்ஸ். 7 March 2016. பார்க்கப்பட்ட நாள் 26 December 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜார்னா_தாஸ்&oldid=3904440" இலிருந்து மீள்விக்கப்பட்டது