கென் ஆறு

ஆள்கூறுகள்: 25°46′N 80°31′E / 25.767°N 80.517°E / 25.767; 80.517
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கென் ஆறு
Ken River
கென் ஆறு
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்
மண்டலம்பண்டெல்கண்ட்
சிறப்புக்கூறுகள்
மூலம்அகிர்வன்
 ⁃ அமைவுகைமுர் சரகம், கட்னி மாவட்டம், மத்தியப் பிரதேசம்
 ⁃ ஏற்றம்550 m (1,800 அடி)
முகத்துவாரம்யமுனை ஆறு
 ⁃ அமைவு
சில்லா மலை, பாண்டா மாவட்டம், உத்தரப் பிரதேசம்
 ⁃ ஆள்கூறுகள்
25°46′N 80°31′E / 25.767°N 80.517°E / 25.767; 80.517
நீளம்427 km (265 mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி310 m3/s (11,000 cu ft/s)[1]

கென் ஆறு (Ken River), என்பது மத்திய இந்தியாவின் புந்தேல்கண்ட் பகுதியில் பாயும் முக்கிய நதிகளில் ஒன்றாகும், மேலும் இது மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்கள் வழியாகப் பாய்கிறது. இது யமுனை ஆற்றின் துணை நதியாகும்.

பாடநெறி[தொகு]

கென் ஆறு கட்னி மாவட்டத்தில் பார்னர் மலைத்தொடரின் வடமேற்கு சரிவுகளில் உள்ள அஹிர்கவன் கிராமத்திற்கு அருகில் உருவாகிறது.[2] இது 427 கி.மீ. தூரம் பயணித்து உத்தரப்பிரதேசத்தில் பண்டா மாவட்டம் சில்லா கிராமத்தில் யமுனாவுடன் இணைகிறது (25°46′N 80°31′E / 25.767°N 80.517°E / 25.767; 80.517).

கென் ஆற்றின் ஒட்டுமொத்த வடிநிலம் 28,058 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில் 12,620 கிமீ 2 சோனார் நதியின் மிகப் பெரிய துணை நதியைச் சேர்ந்தது. இதன் முழுப் பகுதியும் மத்தியப் பிரதேசத்தில் உள்ளது. இதன் 427 கிலோமீட்டர்கள் (265 mi) பயணத்தில் இதன் துணை நதிகளான பவாஸ், தேவர், கைத் மற்றும் இடது கரையில் உள்ள பைங்க், மற்றும் வலதுபுறத்தில் கோப்ரா மற்றும் பியர்மா நதிகளிலிருந்து தண்ணீரைப் பெறுகிறது. இதன் மொத்த நீளம் 427 கிலோமீட்டர்கள் (265 mi). இதில் 292 கிலோமீட்டர்கள் (181 mi) மத்தியப் பிரதேசத்திலும், 84 கிலோமீட்டர்கள் (52 mi) உத்தரப் பிரதேசத்திலும், மற்றும் 51 கிலோமீட்டர்கள் (32 mi) இரண்டு மாநிலங்களுக்கு இடையிலான எல்லையாகப் பாய்கின்றது.[3]

பிஜாவர்-பன்னா மலைகளைக் கடந்து, கென் நதி 60 கி. மீ. நீளத்திற்கு, 150-180 மீ ஆழமான பள்ளத்தாக்கு பகுதிகளில் நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் வகையில் இதனுடைய பாதை அமைகின்றது. இந்த பள்ளத்தில் பல நீரோடைகள் கென்னுடன் இணைகின்றன. கென் பள்ளத்தாக்கு ரேவா பீடபூமியை சட்னா பீடபூமியிலிருந்து பிரிக்கிறது.

சுற்றுலா[தொகு]

கென் ஆற்றின் ரானே நீர்வீழ்ச்சி மற்றும் கென் கரியால் சரணாலயம் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் தலங்களாக உள்ளன. இங்கு உருவான பாறைகள் வெவ்வேறு வண்ணங்களைக் கொண்டுள்ளன. இவை கிரானைட், டோலமைட் மற்றும் குவார்ட்சு முதலானவற்றால் ஆனவை. கென் மற்றும் சிம்ரி நதிகளின் சங்கம பகுதியில் கங்காவ் அணை கட்டப்பட்டுள்ளது.[4] கென் நதி பன்னா தேசியப் பூங்கா வழியாகச் செல்கிறது.[5]

கென் ஆற்றின் கரையில் இந்த பிராந்தியத்தின் ராஜபுத்திரர்கள் பயன்படுத்திய சில அரண்மனைகள் உள்ளன. இப்போதெல்லாம், இந்த அரண்மனைகளில் சில தீவிரவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூர் காவல்துறையினருக்கு கவலை அளிக்கக் காரணமாகின்றன. இந்த அரண்மனைகள் இடிந்துபோகும் நிலையில் உள்ளன. இவை கட்டப்பட்ட மலையின் கீழே இருந்து சுவர்களைக் காண்பது கடினம். முக்கிய கட்டிடங்களின் இடிபாடுகள் இன்னும் உள்ளன. இந்த அரண்மனைகளில் சில நல்ல மலையேற்ற பயிற்சியைத் தருகின்றன.

சாஜர் அல்லது சாசர், போன்ற அரிய விலைமதிப்பற்ற பிரபலமான இரத்தின கல் வகை கொண்ட ஒருங்கு முனைப்புக்கள் இங்குள்ளன. பண்டா நகரம் கென் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Hydrology" (PDF). nwda.gov.in. National Water Development Authority. பார்க்கப்பட்ட நாள் 22 April 2014.
  2. "Chapter 2 – Physical Features" (PDF). Archived from the original (PDF) on 7 November 2007. பார்க்கப்பட்ட நாள் 2010-07-15.
  3. "A Watershed" (PDF). Envis Madhya Pradesh. Archived from the original (PDF) on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-07-15.
  4. "Khajuraho Attractions". Sulekha. Archived from the original on 10 January 2016. பார்க்கப்பட்ட நாள் 2010-07-15.
  5. "Ken River Lodge". Nature Safari India. Archived from the original on 2010-07-24. பார்க்கப்பட்ட நாள் 2010-07-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கென்_ஆறு&oldid=3174372" இலிருந்து மீள்விக்கப்பட்டது