கௌரவ் சோப்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கௌரவ் சோப்ரா
2017 இல் வோக் பியூட்டி விருதுகளில் கௌரவ்
பிறப்பு4 April[1]
புது தில்லி, தில்லி, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிநடிகர், கரல் கலைஞர்
செயற்பாட்டுக்
காலம்
2002–தற்போது வரை
வாழ்க்கைத்
துணை
Hitisha Cheranda (தி. 2018)

கௌரவ் சோப்ரா (பிறப்பு ஏப்ரல் 4) [2] என்பவர் ஒரு இந்திய தொலைக்காட்சி, திரைப்பட நடிகராவார்.[3] இவர் உத்தரன் மற்றும் சதா ஹக் தொலைக்காட்சித் தொடர்களில் முறையே ரகுவேந்திர பிரதாப் ரத்தோர் மற்றும் பேராசிரியர் அபய் சிங் ரனாவத் ஆகியோராக நடித்ததற்காக மிகவும் பிரபலமானவர்.[4][5] இவர் பிக் பாஸ் 10 இல் போட்டியாளராக கலந்துகொண்டார்.[6][7][8][9] ஆஸ்கார் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட ஆலிவுட் திரைப்படமான பிளட் டயமண்ட் படத்தில் இவர் நடித்துள்ளார், மேலும் சர்வதேச நடன உண்மைநிலை நிகழ்ச்சியான டான்சிங் வித் தி ஸ்டார்ஸ் நிகழ்ச்சியின் ஜார்ஜிய பதிப்பில் கலந்துகொண்டுள்ளார். இவர் கடைசியாக ஏ. எல். டி பாலாஜியின் ஃபோர் பிளே & வியூஸ் லவ் லஸ்ட் & கன்பியூசன் என்ற வலைத் தொடரில் நடித்தார்.[10][11][12] இவர் தற்போது அஸ்வின் கிட்வானி புரொடக்ஷன்ஸ் (ஏஜிபி வேர்ல்ட்) உடன் தேவதாஸ் கதையின் தழுவலில் பணியாற்றி வருகிறார்..

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

சோப்ரா செயின்ட் கொலம்பா பள்ளியில் படித்தார் பின்னர் 2000 ஆம் ஆண்டில் தேசிய உடையலங்கார தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டம் பெற்றார் [13]

தொழில்[தொகு]

2003 இல் சோப்ரா தமிழ்த் திரைப்படமான ஒற்றனில் நடித்தார். 2004 ஆம் ஆண்டில் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சி தொடரான சாரா ஆகாஷ் மற்றும் கர்மாவில் தோன்றினார். 2006 ஆம் ஆண்டில், இவர் உண்மைநிலை தொலைக்காட்சி நடன நிகழ்ச்சியான நாச் பாலியே 2 இல் ஒரு போட்டியாளராக்கலந்துகொண்டார், 2008 ஆம் ஆண்டில் இவர் மற்றொரு நடன நிகழ்ச்சியான ஜாரா நாச்சே திகாவின் முதல் பருவத்தில் கலந்துகொண்டார்.. 2006 ஆம் ஆண்டில், இவர் ஹாலிவுட் திரைப்படமான பிளட் டயமண்டில் நடித்தார், மேலும் ஐசா டெஸ் ஹை மேரா தோடரில் சமே குரானாவாக நடித்தார். இவர் கலர்ஸ் தொலைக்காட்சித் தொடரான ஓபரா உத்தரனில் ரகுவேந்திர பிரதாப் ரத்தோர் என்ற பாத்திரத்தில் நடித்தார், மேலும் இந்த பாத்திரத்தில் நடித்ததற்காக 2012 ஆம் ஆண்டில் கலர்ஸ் கோல்டன் பெட்டல் அவார்ட்ஸ்-மோஸ்ட் டும்தார் பர்சனாலிட்டி விருதைப் பெற்றார் . 2013 ஏப்ரலில் வெளியான கேங்ஸ்டர் படமான ரங்க்தரியில் இவர் நடித்தார.

2016 ஏப்ரலில், சர்வதேச நடன உண்மை நிலை நிகழ்ச்சியானர டான்சிங் வித் தி ஸ்டார்ஸின் ஜார்ஜிய பதிப்பில் கலந்து கொண்டார்,[14][15] அங்கு இவர் ஒரு கலாச்சார தூதராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[16] 6 வாரங்களுக்குப் பிறகு திடீரென இவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.[17][18]

பின்னர் 2016 இல் இவர் பிக் பாசின் 10 வது பருவத்தில் கலந்துகொண்டார். 2017 சனவரி முதல் நாள் வெளியேற்றப்பட்டார்.[19]

2018 ஆம் ஆண்டில், ஏ.எல்.டி பாலாஜியின் வலைத் தொடரான ஃபோர் பிளேவில் காசனோவா என்ற பாத்திரத்தில் நடித்தார்.[20]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

சோப்ரா தனது நீண்டகால காதலியான ஹிடிஷா சேராண்டாவை 19 பிப்ரவரி 2018 அன்று திருமணம் செய்து கொண்டார்.[21][22] இவர்களுக்கு 2020 ஆம் ஆண்டில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது.[23]

குறிப்புகள்[தொகு]

 

  1. "Happy Birthday, Gaurav Chopra: 5 adorable candid clicks of the birthday boy with his lady love". Bollywood Life Dot Com (in ஆங்கிலம்). 2019-04-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  2. "Happy Birthday, Gaurav Chopra! The Uttaran actor's experiments on Indian TV". India Today Dot Com (in ஆங்கிலம்). 2018-04-04. பார்க்கப்பட்ட நாள் 2020-02-09.
  3. "India Today International". Living Media International Limited. April 2006 – via Google Books.
  4. "Gourav Chopra: Uttaran stopped being a challenge". Times of India. 9 July 2014.
  5. "Close to Real: Gaurav Chopra".
  6. "Gourav Chopra's profile". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 17 October 2016. பார்க்கப்பட்ட நாள் 21 October 2015.
  7. "Bigg Boss 10 contestants: Gourav Chopra to be part of Salman Khan's show". 14 October 2016.
  8. "Gourav Chopra is OUT of BIGG BOSS 10; Brother Raghav confirms his EVICTION!". 1 January 2017. Archived from the original on 11 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  9. "A part of me is still inside with Bani: Gourav Chopraa after getting evicted from Bigg Boss 10!". 1 January 2017.
  10. "Life comes full circle for former Bigg Boss contestant Gourav Chopra with Thor: Ragnarok". 3 November 2017.
  11. "Gourav Chopra Turns Desi 'Thor'". 2 November 2017.
  12. "Gourav Chopra Talks About DUBBING For 'Thor Ragnarok' EXCLUSIVE Interview". 3 November 2017. Archived from the original on 11 செப்டம்பர் 2018. பார்க்கப்பட்ட நாள் 20 ஜூன் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  13. "Gaurav Chopra: I went from St Columba's, a boys' school, to NIFT, a girls' planet!". Times of India. 6 December 2017.
  14. "Gaurav Chopraa Sways His Way into Hearts of Global Fans With 'Dancing with the Stars'". Mid Day. 3 May 2016.
  15. "Gaurav Chopraa is rocking Georgia with his superb dance moves". India Today. 19 April 2016.
  16. "This 'Uttaran' Actor Has a Huge International Fan Following; Here's the Proof!". Daily Bhaskar. 5 April 2016.
  17. "What is the reason behind Gaurav Chopraa's sudden exit from Dancing with the Stars?". India Today. 14 May 2016.
  18. "Gaurav Chopra quits 'Dancing With the Stars' mid-way". The Times of India. 13 May 2016.
  19. "BREAKING: Gaurav Chopra EVICTED from 'Bigg Boss 10'". Daily News and Analysis. 1 January 2017.
  20. "Gaurav Chopra plays a casanova in Four Play". Times of India. 2 December 2017.
  21. "Ex-Bigg Boss contestant Gaurav Chopra ties the knot with Hitisha Cheranda". இந்தியன் எக்சுபிரசு. 20 February 2018.
  22. "Gaurav Chopra Ties The Knot With Hitisha Cheranda in a Private Wedding Ceremony". News 18. 21 February 2018.
  23. https://www.indiatoday.in/television/celebrity/story/gaurav-chopra-and-wife-hitisha-cheranda-blessed-with-baby-boy-1721738-2020-09-14. {{cite web}}: Missing or empty |title= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கௌரவ்_சோப்ரா&oldid=3742306" இலிருந்து மீள்விக்கப்பட்டது