இந்திய ஆசிரியர் கல்வி நிறுவனம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய ஆசிரியர் கல்வி நிறுவனம்
Indian Institute of Teacher Education
வகைமாநிலப் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2010
வேந்தர்குஜராத் ஆளுநர்களின் பட்டியல்
துணை வேந்தர்அர்சத்து ஏ. பட்டேல்
அமைவிடம், ,
சேர்ப்புUGC
இணையதளம்www.iite.ac.in

இந்திய ஆசிரியர் கல்வி நிறுவனம் (Indian Institute of Teacher Education) இந்தியாவின் குசராத்து மாநிலம காந்திநகரில் அமைந்துள்ள ஒரு மாநில அளவிலான ஆசிரியர் கல்விப் பல்கலைக்கழகமாகும். குசராத்து அரசாங்கம் 2010 ஆம் ஆண்டில் இப்பல்கலைக்கழகத்தை நிறுவியது. ஆசிரியர் கல்வியில் இப்பல்கலைக்கழகம் கவனம் செலுத்துகிறது.

இந்தியாவிலிருந்து ஆசிரியர்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நோக்கத்துடன் 2001 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை குசராத்து மாநில முதல்வராக பணியாற்றிய நரேந்திர மோடி இந்த நிறுவனத்தின் முக்கிய நோக்கமாகக் கொண்டு இருந்தார். 21 ஆம் நூற்றாண்டின் கல்வி என்பது ஒரு பட்டம் மட்டுமல்ல, அனைத்தையும் உள்ளடக்கிய அமைப்பாக இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை கொண்டு உலகத்தரம் வாய்ந்த ஆசிரியர்களை உருவாக வேண்டும் என்பது இந்நிறுவனத்தின் நோக்கமாகும். கீரீத்து யோசி தலைமையிலான நிபுணர்களின் குழு இதற்கான பாடத்திட்டத்தை வடிவமைத்தது. [1] 2010 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு குசராத்து அரசாங்கம் இந்நிறுவனத்தை நிறுவியது. [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "About IITE". Indian Institute of Teacher Education. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.
  2. "Indian Institute of Teacher Education, Gujarat Act". Government of Gujarat. 2010. பார்க்கப்பட்ட நாள் 6 July 2017.[தொடர்பிழந்த இணைப்பு]

புற இணைப்புகள்[தொகு]