கடப்பா வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 14°30′36″N 078°46′22″E / 14.51000°N 78.77278°E / 14.51000; 78.77278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கடப்பா வானூர்தி நிலையம்
Kadapa Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவதுகடப்பா
அமைவிடம்கடப்பா, ஆந்திரப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL430 ft / 131 m
ஆள்கூறுகள்14°30′36″N 078°46′22″E / 14.51000°N 78.77278°E / 14.51000; 78.77278
இணையத்தளம்www.aai.aero/allAirports/cuddapah.jsp
நிலப்படம்
CDP is located in ஆந்திரப் பிரதேசம்
CDP
CDP
CDP is located in இந்தியா
CDP
CDP
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
11/29 6,562 2,000 அஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - சனவர் 2020)
பயணிகள் போக்குவரவு91,395(-4.2%)
விமான போக்குவரவு1,766 (-4.3%)

கடப்பா வானூர்தி நிலையம் (Kadapa Airport)(ஐஏடிஏ: CDPஐசிஏஓ: VOCP) என்பது உள்நாட்டு வானூர்தி நிலையம் ஆகும். இது ஆந்திரப் பிரதேசம் மேற்கு கடப்பா பகுதியில் 12 கிமீ (7.5 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையம் 669.5 ஏக்கர்கள் (270.9 ha) பரப்பில் ரூ. 42 கோடி.செலவில் மேம்படுத்தப்பட்ட விமான நிலையமாகும். இதை இந்திய பொது விமான போக்குவரத்து அமைச்சர் அசோக் கஜபதி ராஜு 7 ஜூன் 2015 அன்று திறந்து வைத்தார்.[7] விமான நிலைய முனையக் கட்டிடம் ஒரு நேரத்தில் 100 பயணிகளைக் கையாளும் திறனைக் கொண்டுள்ளது. மேலும் ஏப்ரனில் இரண்டு ஏடிஆர் -72 வகை விமானங்களுக்கு இடமளிக்க முடியும்.[8]

வரலாறு[தொகு]

விமான நிலையம் 1953இல் கட்டப்பட்டது. அப்பொழுது 3,500 அடி (1,067 m) ஓடுபாதை இருந்தது. 1980களில், வாயுதூட் ஐதராபாத்திலிருந்து கடப்பாவுக்குச் சேவைகளை இயக்கியது. ஏடிஆர் -42 மற்றும் ஏடிஆர் -72 வகை விமானங்களைக் கையாள கடப்பா மற்றும் வாரங்கலில் தற்போதுள்ள விமான நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்காக மாநில அரசாங்கமும் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் (ஏஏஐ) மார்ச் 2007இல் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.[9]

2009இல், ஒரு புதிய 6,562 அடி × 150 அடி (2,000 m × 46 m) ஓடுபாதை கட்டுதல், இயக்குதல், மாற்றுதல் திட்ட அடிப்படையில் ரூ. 21 கோடிக்கும் மேலும், 11 கி.மீ நீளமுள்ள சுற்றுச்சுவர் ரூ. 24 கோடிக்கும் கட்டப்பட்டன. இரண்டாம் கட்டமாக, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக் கட்டிடம், பயணிகள் முனையம், வாகன நிறுத்துமிடம் மற்றும் உள் சாலைகள் ரூ 13 கோடியிலும் மற்ற வசதிகள் ரூ .8 கோடியிலும் உருவாக்கப்பட்டுள்ளன.[10]

ஏர் பெகாசஸ் வாரந்தோறும் மூன்று முறை ஏடிஆர் 72 சேவையைப் பெங்களூருக்கு அறிமுகப்படுத்தியபோது விமான நிலையத்திற்குத் திட்டமிடப்பட்ட வணிக விமானங்கள் 7 ஜூன் 2015 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின.[7] இருப்பினும், பயணிகள் வருகை குறைவாக இருந்ததால் விமானடச் சேவை விரைவில் ரத்து செய்யப்பட்டன.[11] ஏப்ரல் 2016 இல், ட்ரூஜெட் ஹைதராபாத்திற்கு விமானங்களை அறிமுகப்படுத்தியது. பின்னர் சில மாதங்களுக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டன.[12]

பிராந்திய விமான இணைப்பை அதிகரிக்க வட்டார இணைப்புத் திட்டம்-உதான் (உதே தேஷ் கா ஆம் நாக்ரிக்)இன் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட 70 விமான நிலையங்களில் கடப்பா விமான நிலையமும் ஒன்றாகும். மார்ச் 2017இல், ட்ரூஜெட் செப்டம்பர் 2017இல் ஐதராபாத்திற்கும், நவம்பர் 2017இல் சென்னை வழியாக மைசூருக்கும், மார்ச் 2018இல் விஜயவாடாவிற்கும் தினசரி விமானங்களை அறிமுகப்படுத்தியது.[13]

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்Refs.
ட்ரூஜெட்பெல்காம், ஐதராபாத் [14]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://www.aai.aero/sites/default/files/traffic-news/Jan2k20Annex3.pdf
  2. https://www.aai.aero/sites/default/files/traffic-news/Jan2k20Annex2.pdf
  3. "Traffic News for the month of March 2018: Annexure-III" (PDF). Airports Authority of India. 1 May 2018. p. 3. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  4. "Traffic News for the month of March 2018: Annexure-II" (PDF). Airports Authority of India. 1 May 2018. p. 3. Archived from the original (PDF) on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  5. "Traffic News for the month of March 2018: Annexure-IV" (PDF). Airports Authority of India. 1 May 2018. p. 3. Archived from the original (PDF) on 1 May 2018. பார்க்கப்பட்ட நாள் 1 May 2018.
  6. Cuddapah Airport at the Airports Authority of India பரணிடப்பட்டது 29 சனவரி 2012 at the வந்தவழி இயந்திரம்
  7. 7.0 7.1 "Air Pegasus connects Bengaluru with Kadapa in Andhra". பிசினஸ் ஸ்டாண்டர்ட். 7 June 2015. http://www.business-standard.com/article/news-ians/air-pegasus-connects-bengaluru-with-kadapa-in-andhra-115060700456_1.html. 
  8. "Kadapa Airport to be Inaugurated on June 7, 2015". Press Information Bureau. 4 June 2015. பார்க்கப்பட்ட நாள் 5 June 2015.
  9. "Kadapa airport to be developed". தி இந்து. 31 March 2007 இம் மூலத்தில் இருந்து 1 ஜனவரி 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080101120911/http://www.hindu.com/2007/03/31/stories/2007033113150500.htm. 
  10. "Kadapa to be on air map". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 31 January 2005 இம் மூலத்தில் இருந்து 24 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131224120542/http://articles.timesofindia.indiatimes.com/2005-01-31/hyderabad/27864484_1_air-map-air-connectivity-kadapa. 
  11. "Air Pegasus investing Rs 100 crore to expand operations". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Bangalore). 14 April 2016. http://timesofindia.indiatimes.com/business/india-business/Air-Pegasus-investing-Rs-100-crore-to-expand-operations/articleshow/51831385.cms. 
  12. "Trujet to operate flights from Kadapa from today". The Hindu. 8 April 2016. பார்க்கப்பட்ட நாள் 9 April 2016.
  13. Sharma, Pragati Ratti (30 March 2017). "Udan scheme: List of 45 new airports, over 70 new routes announced today; 5 airlines make the cut" (in en). India.com. http://www.india.com/news/india/udan-scheme-list-of-45-new-airports-over-70-new-routes-announced-today-5-airlines-make-the-cut-1976363/. 
  14. "TruJet Schedule" (PDF). www.trujet.com. Archived from the original (PDF) on 4 ஜூன் 2021. பார்க்கப்பட்ட நாள் 4 June 2021. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கடப்பா_வானூர்தி_நிலையம்&oldid=3684857" இலிருந்து மீள்விக்கப்பட்டது