தஞ்சோங் பியாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தஞ்சோங் பியாய்
Tanjung Piai
தஞ்சோங் பியாய் முனை
தஞ்சோங் பியாய் முனை
தஞ்சோங் பியாய் Tanjung Piai is located in மலேசியா மேற்கு
தஞ்சோங் பியாய் Tanjung Piai
தஞ்சோங் பியாய்
Tanjung Piai
ஆள்கூறுகள்: 1°15′58″N 103°30′39″E / 1.26611°N 103.51083°E / 1.26611; 103.51083
நாடு மலேசியா
மாநிலம் ஜொகூர்
நகரத் தோற்றம்1850-களில்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)கண்காணிப்பு இல்லை (ஒசநே)
அஞ்சல் குறியீடு81xxx

தஞ்சோங் பியாய் என்பது (மலாய்: Tanjung Piai; ஆங்கிலம்: Tanjung Piai; சீனம்: 丹绒比艾) மலேசியா, ஜொகூர் மாநிலத்தில், பொந்தியான் மாவட்டத்தில்; தீபகற்ப மலேசியாவின் ஆகத் தெற்கே அமைந்துள்ள இடம். தவிர ஐரோப்பா; ஆசியா கண்டங்களான ஐரோவாசியாவின் (Eurasia) தென்முனைக் கோடி நிலப் பகுதி இந்த இடத்தில்தான் அமைந்து உள்ளது.

இங்கு இருந்து சிங்கப்பூர் தீவையும்; ஜொகூர் நீரிணையையும் முழுமையாகப் பார்க்க இயலும். காட்டு மரங்களில் கட்டப்பட்ட படகுத் துறைகள்; அரிதான கடற்கரையோரச் சூழல்; மாசு இல்லாத சதுப்புநிலக் காடுகள்; சூழப்பட்டுள்ள இந்த இடம் தீபகற்ப மலேசியாவின் சொர்க்க வாசல் என்றும் புகழப் படுகிறது. தஞ்சோங் பியாய் துறைமுகப் பட்டினம் பொந்தியான் நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது.

தஞ்சோங் பியாய் தேசியப் பூங்கா (Tanjung Piai National Park) எனும் ஓர் அழகிய வனப்பூங்காவை இங்கு அமைத்து இருக்கிறார்கள்.[1]

நிலவியல்[தொகு]

தஞ்சோங் பியாய் கடலோரச் சதுப்புநிலம், அனைத்துலக அளவில் ஒரு முக்கியமான ராம்சார் தளமாகும். ராம்சார் ஒப்பந்தத்தின் கீழ், சதுப்புநிலச் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதிப்படுத்த இந்த இடம் அரசாங்கத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.[2]

மலேசியாவின் ஐந்து ராம்சார் தளங்களில் ஒன்றான தஞ்சோங் பியாய் தேசியப் பூங்கா, தேசிய அளவில் முக்கியமான இயற்கை தளமாகும். ஜொகூர் தேசிய பூங்கா கழகத்தினால் உருவாக்கப்பட்ட மூன்றாவது பூங்காவாகும்.

இந்த இடம் மீன்வளத்திற்குப் பெயர் பெற்றது. 2006-ஆம் ஆண்டில் 32,360 பார்வையாளர்களை ஈர்த்தது. தேசிய சுற்றுச்சூழல் சுற்றுலாவின் முன்னுரிமைத் தளமாகவும் பட்டியலிடப்பட்டு உள்ளது.

தஞ்சோங் பியாய் சுற்றுச்சூழல் நட்பு மைல்கல்[தொகு]

2001-ஆம் ஆண்டில், 'ஆசியா கண்டத்தின் தென்கோடி நிலத்தை' குறிக்கும் வகையில் சாம்பல் நிறத்தில், இங்கு ஒரு மைல் கல் கட்டப்பட்டது. அந்தச் சுற்றுச்சூழல் நட்பு மைல்கல் 20 மீ. உயரமும் 10 மீ. அகலமும் கொண்டது.

ஜொகூர் மாநில அரசாங்கத்தால் கட்டப்பட்டது. தஞ்சாங் பியாய் நகரத்தின் அடையாளமாகக் கருதப் படுகிறது. மைல்கல்லின் சாம்பல் நிறம் இங்குள்ள சதுப்புநில காடுகள் மற்றும் அதன் சேற்று சமவெளிகளின் செழுமையைப் பிரதிபலிக்கின்றது.[3]

காட்சியகம்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. National Park, Tanjung Piai (4 May 2016). "Tanjung Piai National Park". Official Portal of Pontian District Council (MDP) (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  2. "Tanjung Piai Ramsar site draws international nature lovers". youth.bernama.com. பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
  3. "Guardian of vital natural heritage". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 June 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தஞ்சோங்_பியாய்&oldid=3166598" இலிருந்து மீள்விக்கப்பட்டது