பயன்படுத்தப்பட்ட காபித் தூள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பயன்படுத்தப்பட்ட காபித் தூள்
Used Coffee Grounds
பயன்படுத்தப்பட்ட காபித் தூள் பெட்டிகளில்
Usage
  • கழிவு
  • உரத்தயாரிப்பு
  • அதிர்ஷ்ட கணிப்பு
  • பூஞ்சை வளர்ப்பு

பயன்படுத்தப்பட்ட காபித் தூள் என்பது காபித் தூளினைப் பயன்படுத்தி காபி காய்ச்சுவதன் விளைவாகப் பெறப்படும் கழிவுத் தூளாகும். மேலும் காபி தயாரித்த பின் இறுதி தயாரித்த பின் கிடைக்கும் இறுதிப் பொருளாகும். பயன்படுத்தப்பட்ட காபித் தூள் பொதுவாக கழிவாகக் கருதப்படுகின்றன. மேலும் இவை பொதுவாகத் தூக்கி எறியப்படுகின்றன அல்லது உரம் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. இக்கழிவானது 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தூய காபித் தூளுடன் கலப்படம் செய்யவும் பயன்படுத்தப்பட்டன்.[1]

பயன்பாடு[தொகு]

தோட்டங்களில்[தொகு]

பயன்படுத்தப்பட்ட காபி தூள்மீது நகரும் மண்புழுக்கள்.

தோட்டங்களில், காபி கழிவு கூட்டெரு தயாரிக்க அல்லது மூடாக்காகப் பயன்படுத்தப்படலாம்.[2] ஏனெனில் இவை நைட்ரசனை மண்ணில் மெதுவாக வெளியிடுகின்றன. உலர் காபி தூளில் குறிப்பிடத்தக்க அளவு பொட்டாசியம் (11.7கிராம் / கிலோ), மெக்னீசியம் (1.9 கிராம்/ கிலோ) மற்றும் பாஸ்பரஸ் (1.8 கிராம்/கிலோ) உள்ளன.[3] புழுக்கள் மற்றும் அவுரி நெல்லிகள் போன்ற அமில-விரும்பு தாவரங்களால் இவற்றை நன்கு பயன்படுத்துகின்றன.[4] கழிவிலிருந்து அமிலம் நிலத்தில் வெளியேற்றப்படுவதால், பொதுவாக நடுநிலை கார அமிலத்தன்மையினைக் கொண்டுள்ளன. பயன்படுத்தப்பட்ட காபித் தூள் குறிப்பாக மண்ணின் கார அமிலத்தன்மையினை திருத்தப்பயன் படுகிறது.[5] மேலும் தோட்டக்காரர்கள் பயன்படுத்திய காபித் தூளானது ஸ்லக் மற்றும் நத்தை பாதிப்புகளைக் குறைக்கப்பயன்படுவதாகத் தெரிவிக்கின்றன.[2][6] ஆனால் இது இன்னும் அறிவியல் பூர்வமாகச் சோதிக்கப்படவில்லை.[7] சில வணிக காபி தயாரிப்பாளர்கள் இந்த கழிவுத்தூள் வீணாகப் போவதைத் தடுக்க முன்முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இதில் ஸ்டார்பக்ஸ் "உங்கள் தோட்டத்திற்கான காபி கழிவு திட்டம்”,[8] மற்றும் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ்ஷையரில்.சமூக நிதியுதவி முன்முயற்சிகளான "தோட்டத்திற்கான கழிவு"[9] அல்லது 'பசுமை காபி கடை திட்டம்'.[10]

கணிப்புக்கு காபி தூள் தயார்

அதிர்ஷ்ட கணிப்பில்[தொகு]

காபி கழிவுத்தூள் கணிப்பு மற்றும் அதிர்ஷ்டம் சொல்லுவதில், காப்பி வடிவங்கள் அடிப்படையில் கணிப்புகள் சொல்லப்படுகின்றன.

பிற பயன்கள்[தொகு]

காளான்கள் (சிப்பி காளான்கள் உட்பட) சாகுபடிக்கு ஒரு அடி மூலக்கூறாகக் காபித் தூளைப் பயன்படுத்த மேற்கொண்ட முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளன.[11][12] பயன்படுத்தப்பட்ட காபித் தூள் வீடுகளில் தயாரிக்கப்படும், மரத்தூளினைக் கறையேற்றம் செய்யவும், காற்றுச் சுத்தப்படுத்திகள் மற்றும் உடல் சோப்பு உள்ளிட்ட பொருட்க்கள் தயாரிப்பில் பயன்படுகின்றன[2] இவற்றை உயிரிவளி உற்பத்தியில் தொழில்துறை ரீதியாகவோ அல்லது கழிவுநீரைச் சுத்திகரிக்கவோ பயன்படுத்தப்படலாம்.[7] 2021ஆம் ஆண்டில், க்ளூச்செஸ்டர்ஷையரை தளமாகக் கொண்ட கால்பந்து குழு ஃபாரஸ்ட் கிரீன் ரோவர்ஸ் 35% பயன்படுத்தப்பட்ட காபி தூளை மறுசுழற்சி செய்யப்பட்ட நெகிழி மூலம் தயாரிக்கப்பட்ட ஒரு உபகரணம் ஒன்றைச் சோதனை செய்தது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Pendergrast, Mark "Uncommon grounds : the history of coffee and how it transformed our world" 2010 Basic Books. ISBN 978-0-465-02404-9
  2. 2.0 2.1 2.2 "Don't Throw Out Your Leftover Coffee Grounds!". Huffington Post. 4 August 2014. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
  3. Ballesteros, Lina F.; Teixeira, José A.; Mussatto, Solange I. (December 2014). "Chemical, Functional, and Structural Properties of Spent Coffee Grounds and Coffee Silverskin". Food and Bioprocess Technology 7 (12): 3493–3503. doi:10.1007/s11947-014-1349-z. 
  4. Martin, Deborah L; Gershuny, Grace, தொகுப்பாசிரியர்கள் (1992). "Coffee wastes". The Rodale book of composting. Emmaus, PA: Rodale Press. பக். 86. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87857-991-4. https://books.google.com/books?id=N6sx5-OM_psC&pg=PA86. பார்த்த நாள்: January 5, 2010. 
  5. "Coffee Grounds Perk up Compost Pile With Nitrogen" (in en). Life at OSU. 10 June 2009. http://today.oregonstate.edu/archives/2008/jul/coffee-grounds-perk-compost-pile-nitrogen. 
  6. "NORTH COAST GARDENING: Winter vegetable growing". Eureka Times-Standard. 24 December 2014. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.
  7. 7.0 7.1 Chalker-Scott, Ph.D, Linda (2009). "Coffee grounds— will they perk up plants?" (PDF). Master Gardener. Puyallup Research and Extension Center, Washington State University. பார்க்கப்பட்ட நாள் 25 December 2014.{{cite web}}: CS1 maint: multiple names: authors list (link)
  8. "Coffee for Your Plants? Starbucks Offers Free Coffee Grounds for Gardeners". Starbucks.com. பார்க்கப்பட்ட நாள் December 13, 2015.
  9. "About Us | Coffee Grounds to Ground". Groundtoground.org. பார்க்கப்பட்ட நாள் October 26, 2011.
  10. "Green Coffee Shop Scheme". Cambridge Food Hub (in ஆங்கிலம்). 2019-05-08. பார்க்கப்பட்ட நாள் 2019-10-25.
  11. (in டச்சு மொழி) Zelf oesterzwammen kweken op basis van ... koffiegruis?
  12. (in டச்சு மொழி) Oesterzwammen en koffiedik?