கே. சி. ஆபிரகாம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொச்சக்கன் சாக்கோ ஆபிரகாம் (Kochakkan Chacko Abraham) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளுநராக இருந்தார். 1899 ஆம் ஆண்டு சனவரி மாதம் 20 ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சின் நகரில் ஆபிரகாம் பிறந்தார். 1978 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 முதல் 1983 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 15 ஆம் தேதி வரை இவர் ஆந்திரப் பிரதேச ஆளுநராக பணிபுரிந்தார்.[1][2]. இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த இவர் 1986 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 அன்று காலமானார்.

வாழ்க்கை[தொகு]

கேரள மாநிலம் கொச்சினில் பிறந்த ஆபிரகாம் இளநிலை பட்டம் பெற்று 30 ஆண்டுகள் ஆசிரியராகவும் தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்துள்ளார்.

தொழில்[தொகு]

ஆபிரகாம் 1954-1956 ஆம் ஆண்டுகளில் திருவிதாங்கூர் கொச்சின் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார் நசாரக்கல்-காங்கிரசின் முதலாவது மற்றும் இரண்டாவது கேரள சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்.[3] [4] பள்ளி தலைமை ஆசிரியராக பணியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் மிகவும் தாமதமாகவே ஆபிரகாம் அரசியலில் நுழைந்தார். 1969 ஆம் ஆண்டில் கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்ட நேரத்தில் இவர் காங்கிரசு செயற்குழுவில் உறுப்பினராக இருந்தார்.

21 உறுப்பினர்களைக் கொண்ட காங்கிரசு செயற்குழுவில் சிண்டிகேட்டு பிரிவு சார்பாக 10 பேரும் இந்திரா குழு சார்பாக 10 பேரும் எனப் பிரிந்து இரண்டு குழுக்களாக நின்றனர். இந்நிலையில் ஆபிரகாம் சிண்டிகேட்டு குழுவுக்கு ஆதரவாக இருந்தபோதிலும் இரு குழுக்களையும் ஒன்றிணைக்கவே இடைத்தரகராக நின்று பாடுபட்டார். இறுதியாக இவர் தனது சார்பு குழுவின் நம்பிக்கைக்கு ஆதரவாக நின்றார். இதன் விளைவாக இந்திரா காந்தி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

குடும்பம்[தொகு]

ஆபிரகாம் எலிசபெத்து என்ற பெண்னை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Former governors of Andhra Pradesh". Archived from the original on 3 April 2014. பார்க்கப்பட்ட நாள் 3 ஜூன் 2021. {{cite web}}: Check date values in: |access-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. "OMC alumni to fight against medical reimbursement". தி இந்து. 3 சனவரி 2011. Archived from the original on 9 சனவரி 2014.
  3. "K. C. Abraham". Archived from the original on 19 April 2017.
  4. "Governor row". 30 April 1986. Archived from the original on 19 April 2017.


.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._சி._ஆபிரகாம்&oldid=3929216" இலிருந்து மீள்விக்கப்பட்டது