கோ. ஐயப்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோ. ஐயப்பன் (G. Iyappan) என்பவர் இந்திய அரசியல்வாதி மற்றும் தமிழகச் சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இவர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி இவரது தொழில் வீட்டு மனை விற்பனை மற்றும் விவசாயம் ஆகும். முதுகலைப் பட்டம் பெற்றுள்ள ஐயப்பனின் தற்போதைய வயது 63.[1] இவர் 2006[2] மற்றும் 2021ஆம் ஆண்டுகளில் கடலூர் சட்ட மன்றத் தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று தமிழகச் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.[3] 2022 மார்ச் 6 அன்று திமுகவில் இருந்து தற்காலிகமாக அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "G Iyappan | Tamil Nadu Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18.
  2. "Cuddalore Assembly Constituency Election Result - Legislative Assembly Constituency". resultuniversity.com.
  3. "Cuddalore Election Result 2021 LIVE: Cuddalore MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோ._ஐயப்பன்&oldid=3399035" இலிருந்து மீள்விக்கப்பட்டது