ஆரிப் முகமது கான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரிப் முகமது கான்
22வது கேரள ஆளுநர்
பதவியில் உள்ளார்
பதவியில்
6 செப்டம்பர் 2019 (2019-09-06)
முதலமைச்சர்பிணறாயி விஜயன்
முன்னையவர்ப. சதாசிவம்
மக்களவை உறுப்பினர்
பதவியில்
1980 (1980)–1984 (1984)
முன்னையவர்மனோகர் லால்
பின்னவர்நரேஷ் சாந்தர் சதுர்வேதி
தொகுதிகான்பூர்
பதவியில்
1984 (1984)–1991 (1991)
முன்னையவர்மவுலானா சையத் முசாபர் உசேன்
பின்னவர்ருத்ராசென் சவுத்ரி
தொகுதிபக்ரைச்
பதவியில்
1998 (1998)–1999 (1999)
முன்னையவர்பதம்சன் சவுத்ரி
பின்னவர்பதம்சன் சவுத்ரி
தொகுதிபக்ரைச்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு18 நவம்பர் 1951 (1951-11-18) (அகவை 72)
புலந்தசகர், உத்தரப் பிரதேசம், இந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
(2004 – தற்போதுவரை)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (1986 வரை)

ஆரிப் முகமது கான் (Arif Mohammad Khan) (பிறப்பு: 18 நவம்பர், 1951) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் தற்போது கேரள ஆளுநராக பணியாற்றி வருகிறார்.[1] இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ஆவார். குறிப்பாக எரிசக்தி மற்றும் சிவில் வானூர்தி போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.[2]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி[தொகு]

ஆரிப் முகமது கான் 18 நவம்பர் 1951 அன்று புலந்த்சரில் பிறந்தார். டெல்லியின் ஜாமியா மில்லியா பள்ளியில் பள்ளிக் கல்வியும் அலிகர் இசுலாமிய பல்கலைக்கழகம், மற்றும் லக்னோ பல்கலைக்கழகத்தின் சினா கல்லூரியில் கல்வி பயின்றார் பட்டப் படிப்பை முடித்தார்.[3]

அரசியல் வாழ்க்கை[தொகு]

கான் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் சேர்ந்தார், 1980 ஆம் ஆண்டு கான்பூர் தொகுதியிலிருந்தும் 1984 ஆம் ஆண்டு பக்ரைச் மக்களவை தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார் . கருத்து வேறுபாடுகள் காரணமாக 1986 ஆம் ஆண்டில் இவர் இந்திய தேசிய காங்கிரசிலிருந்து விலகினார்.

கான் ஜனதா தளத்தில் சேர்ந்தார், 1989 ல் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜனதா தள ஆட்சியின் போது கான் மத்திய சிவில் விமான மற்றும் எரிசக்தி அமைச்சராக பணியாற்றினார்.

2004 ஆம் ஆண்டில் இவர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.

கேரள ஆளுநர் (2019 - தற்போது வரை)[தொகு]

இந்தியக் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்தின் உத்தரவின் பேரில் கான் 1 செப்டம்பர் 2019 அன்று கேரள ஆளுநராக நியமிக்கப்பட்டார்.[4][5]

இந்திய மக்களவை
முன்னர்
மனோகர் லால்
மக்களவை உறுப்பினர்
கான்பூர்

1980 – 1984
பின்னர்
நரேஷ் சாந்தர் சதுர்வேதி
முன்னர்
மவுலானா சையத் முசாபர் உசேன்
மக்களவை உறுப்பினர்
பக்ரைச்

1984 – 1991
பின்னர்
ருத்ராசென் சவுத்ரி
முன்னர்
பதம்சன் சவுத்ரி
மக்களவை உறுப்பினர்
பக்ரைச்

1998 – 1999
பின்னர்
பதம்சன் சவுத்ரி
அரசியல் பதவிகள்
முன்னர்
ப. சதாசிவம்
கேரள ஆளுநர்
6 செப்டம்பர் 2019 – தற்போதுவரை
பதவியில் உள்ளார்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Arif Khan, Modi govt's only 2nd Muslim governor, whose political views align with the BJP's".
  2. "Women get a raw deal again: Muslim Personal Law Board is still stuck in Shah Bano timewarp as its opposition to triple talaq bill proves".
  3. "Biographical Sketch of Member of 12th Lok Sabha". loksabhaph.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2019-09-01.
  4. "Arif Mohammad Khan takes oath in Malayalam". The Times of India (in ஆங்கிலம்). September 7, 2019. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
  5. "Arif Mohammad Khan Sworn In As Kerala Governor". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2020-09-22.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரிப்_முகமது_கான்&oldid=3926434" இலிருந்து மீள்விக்கப்பட்டது